செய்திகள் :

பெரம்பூர்: "அவர்கள் காதிலேயே விசிலை ஊதுங்க; GEN Z கிட்ஸுக்கு ஒன்று சொல்லிக்கொள்கிறேன்" - தவெக விஜய்

post image

வேட்புமனுத் தாக்கல் செய்த பிறகு தவெக தலைவர் விஜய் தனது தொகுதியான பெரம்பூரில் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கி இருக்கிறார்.

பிரசாரத்தில் பேசிய விஜய், "தாய் வீட்டில் இருந்து பரப்புரையைத் தொடங்குகிறேன். எனக்கு பிடித்த இடம் பெரம்பூர். தமிழ்நாட்டை இந்த நிலைமைக்குக் கொண்டுவர தீயசக்தி திமுகதான் காரணம்.

டாஸ்மார்கில் மட்டுமே ரூ. 1000 கோடி ஊழல் செய்திருக்கிறார்கள். பெண்கள் பாதுகாப்பு இல்லாத போதைப்பொருள் அதிகமாக இருக்கும் தமிழ்நாட்டைக் காப்பாற்றியாக வேண்டும்.

தவெக விஜய்
தவெக விஜய்

இது நாடா? இல்ல காடா? போலீஸ் என்ற ஒன்று இங்கு இருக்கிறதா? இல்லையா? உங்களுக்குப் பாதுகாப்பு கொடுக்காத ஸ்டாலின் அரசைத் தூக்கி வீசிடுவோமா? பல இடங்களில் அடிப்படை வசதி கூட இல்ல.

தீய சக்தி திமுக ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு உள்ளதா? ஸ்டாலின் சாருக்கு மக்களைப் பற்றி கவலையே இல்லை. இந்த 5 வருடத்தில் குடும்பத்தோடு சேர்ந்து கொள்ளை அடிப்பதுதான் முக்கியம்.

வண்டி வண்டியாக வைத்து இருக்கும் பணத்தை என்ன செய்வது என்று தெரியாமல் இப்போது உங்களுக்குக் கொடுத்து எப்படியாவது ஜெயித்து விடலாம் என்று நினைக்கிறார்கள்.

நான் ஏற்கனவே சொன்ன மாதிரி அவர்கள் கொடுக்கும் பணத்தை வாங்கிக்கொண்டு அவர்கள் காதிலேயே விசிலை ஊதுங்கள். இந்த அரசுக்கு வேட்டு வைக்கணும் வைப்பீர்கள் தானே? GEN Z கிட்ஸ்க்கு ஒன்றே ஒன்று சொல்லிக்கொள்கிறேன்.

தவெக விஜய்
தவெக விஜய்

ஏப்ரல் 23 ஆம் தேதி காலையில் எழுந்து பக்காவாகக் கிளம்பி உங்கள் ஓட்டர் ஐடியை எடுத்துக்கொண்டு பூத்திற்குச் சென்று விசில் சின்னத்தில் ஓட்டு போடுங்கள்.

இது ஒரு தலைமுறைக்கான தேர்தல். எவ்வளவு பெரிய வசதியான வாழ்க்கை இருந்தலும் எல்லாவற்றையும் உதறி தள்ளிவிட்டு உங்களுக்காக மட்டுமே வந்திருக்கிறேன்.

எல்லா வலிகளையும் தாங்கிக்கொண்டு உங்களுக்காகவே மட்டுமே வந்திருக்கிறேன். உங்கள் பிள்ளையான எனக்கு ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்கள். நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம்!" என்று பேசியிருக்கிறார்.

`முதல்வர் தொகுதியில் பிரசாரம் செய்யக் கூடாதா? அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் ஆதரவா?' - தவெக கேள்வி

கொளத்தூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் பிரசாரம் செய்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து அந்தக் கட்சியின் இணைப் பொதுச் செயலாளர் CTR. நிர்மல் குமார் பதிவிட்டுள்ளார்."தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்கள... மேலும் பார்க்க

கொளத்தூர்: "அக்கா, அம்மா, உங்களை கேட்கிறேன்; பெண்கள்..!"- ஸ்டாலின் தொகுதியில் விஜய் பரப்புரை

வேட்புமனு தாக்கல் செய்த பிறகு தவெக தலைவர் விஜய் தனது தொகுதியான பெரம்பூரில் தேர்தல் பிரச்சாரத்தை நடத்தினார். இதனைத்தொடர்ந்து முதல்வர் ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் விஜய் பிரச்சாரம் செய்தார். பிரச்சார... மேலும் பார்க்க

`காலம் சில கணக்குகளைப் போட்டுக் காத்திருந்தது' - ஓ.பி.எஸ் வாழ்க்கையைப் புரட்டிப்போட்ட தேர்தல்!

முதல் களம் 12ஓ.பன்னீர்செல்வம்தமிழக அரசியல் வரலாறு எத்தனையோ பல விசித்திரங்களையும் விநோதங்களையும் ஆச்சரியங்களையும் கொண்டது. முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் வாழ்க்கையும் அத்தகைய ஒன்றுதா... மேலும் பார்க்க

"அனுபவம் பார்த்து சீட் கொடுத்த காலம் போச்சு" - கொந்தளிக்கும் கரூர் திமுக; யார் இந்த ஆசி.தியாகராஜன்?

கரூர் தொகுதி தி.மு.க வேட்பாளராக ஆசி. தியாகராஜன் அறிவிக்கப்பட்டதிலிருந்து கரூர் தி.மு.க நிர்வாகிகள் பொறுமிக்கொண்டிருக்கின்றனர். கரூர் தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டியிடாததால், இங்குள்ள தி.மு.க-வினர் ... மேலும் பார்க்க

"ஆட்சி மாற்றம் நடக்கும்; ஆனால், ஈரானில் அல்ல" - ட்ரம்ப் குடும்பத்திலேயே எழும் எதிர்ப்புக் குரல்

"ஈரானில் ஆட்சி மாற்றம் வேண்டும். ஈரானின் புதிய அரசாங்கத்தோடு பேசி வருகிறேன்" என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அடிக்கடி கூறி வருகிறார். அமெரிக்கா, இஸ்ரேல் – இரண்டு நாடுகளும் ஈரான் மீது போர் தொடுத்ததற்குக்... மேலும் பார்க்க