செய்திகள் :

`பெரிய அலை இழுத்துசென்றது' - ஒடிசா கடற்கரையில் படப்பிடிப்பின் போது கடலில் மூழ்கி உயிரிழந்த நடிகர்

post image

மேற்கு வங்கத்தில் டிவி மற்றும் பெங்காலி படங்களில் நடித்து புகழ் பெற்றவர் ராகுல் அருணோதய் பானர்ஜி. இவர் அதிக அளவில் டிவி தொடர்களில் நடித்து வந்தார். புதிதாக போலே பாபா பார் கரேகா என்ற டிவி தொடரில் நடித்து வந்தார். அதன் படப்பிடிப்பு ஒடிசா மற்றும் மேற்கு வங்க எல்லையில் உள்ள ஒடிசாவில் உள்ள தலசேரி கடற்கரையில் நடந்தது. படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது ராகுல் கடல் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து அந்த டிவி தொடரின் இயக்குனர் சுபாசிஷ் கூறுகையில், ''நாங்கள் முட்டளவு தண்ணீரில் தேனிலவு காட்சியை படமாக்கிக்கொண்டிருந்தோம். முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்தவுடன் ராகுலுடன் நடித்த நடிகை ஸ்வேதா கடல் அலையால் சற்று பயந்துவிட்டார்.

எனவே ஸ்வேதா தண்ணீரில் இருந்து வெளியில் வர முடிவு செய்தார். ஆனால் ராகுல் இரண்டாவது ஷாட் எடுக்கவேண்டும் என்று கூறி ஆழமான பகுதிக்கு சென்றார்.

தண்ணிரில் இருந்து வெளியில் வந்துவிடுங்கள் என்று படப்பிடிப்பு குழுவினர் கேட்டுக்கொண்டனர். ஆனால் அவர் கேட்கவில்லை. அந்நேரம் மிகப்பெரிய அலை ஒன்று வந்தது. அந்த அலை ராகுலை உள்ளே இழுத்துச்சென்றுவிட்டது. நாங்கள் அனைவரும் உள்ளே குதித்து அவரை மீட்க முயற்சி செய்தோம். அங்கிருந்த லைஃப்கார்டுகளும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். செல்லும் வழியில் இரண்டு முறை அவரது உடலில் அசைவு இருந்தது. ஆனால் மருத்துவனைக்கு கொண்டு சென்றபோது அவர் இறந்துவிட்டார்''என்றார்.

இது குறித்து அரசு மருத்துவமனை டாக்டர் கூறுகையில், `மாலை 6 மணிக்குத்தான் ராகுலை கொண்டு வந்தார்கள். அவரை சோதித்தபோது அவர் ஏற்கனவே இறந்திருந்தார்' என்றார். இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து படப்பிடிப்புதளத்தில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அனைவர் முன்னிலையில் ராகுல் கடலில் மூழ்கி இறந்திருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ராகுல் 2009 ஆம் ஆண்டு சூப்பர்ஹிட் திரைப்படமான "சிரோடினி துமி ஜெ அமர்" மூலம் டோலிவுட்டில் அறிமுகமானார். ஒரு வருடம் கழித்து அவர் தனது சக நடிகையான பிரியங்கா சர்க்காரை மணந்தார், அவர்களுக்கு 13 வயது மகன் உள்ளார். ராகுல் மறைவுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார்.

வால்பாறை: சுற்றுலா வேன் கவிழ்ந்து கொடூர விபத்து – 7 பேர் உயிரிழந்த சோகம்!

கோவை மாவட்டம் வால்பாறை முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. வால்பாறை செல்லும் மலைப்பாதையில் மொத்தம் 40 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இந்த நிலையில் கோழிக்கோட்டில் இருந்து வால்பாறைக்கு 16 பே... மேலும் பார்க்க

சத்தீஸ்கர் வேதாந்தா மின் உற்பத்தி நிலையத்தில் பாய்லர் வெடிப்பு: 10 பேர் பலி?; 40 பேர் படுகாயம்

சத்தீஸ்கர் மாநிலம் சக்தி மாவட்டத்தில் உள்ள சிங்கிதாரி கிராமத்தில் அமைந்துள்ளது வேதாந்தா மின் உற்பத்தி நிலையம் (Vedanta Power Plant), இந்த மின் உற்பத்தி நிலையத்தில் இன்று மதியம் ஏற்பட்ட பயங்கர பாய்லர் ... மேலும் பார்க்க

மண்டபம் அருகே டூ வீலர்கள் மோதல்; காய்ச்சல் சிகிச்சைக்குச் சென்ற சிறுமி உள்ளிட்ட 3 பேர் உயிரிழப்பு

மண்டபத்தை அடுத்துள்ள வேதாளை பகுதியைச் சேர்ந்தவர் கவுசல்யா. இவரின் மகள் நபியாஶ்ரீ (6). நபியாஶ்ரீக்கு காய்சல் அடித்ததால் மருத்துவரிடம் சிகிச்சை பெற தன் தம்பி கபில்தேவ் முருகன் (17) உடன் மூவரும் டூவீலரில... மேலும் பார்க்க

டாக்சி மீது டேங்கர் மோதி ஒரே பெரும் விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உட்பட 11 பேர் பலி

மும்பை அருகில் உள்ள கல்யான் என்ற இடத்தில் இருந்து முர்பாட் என்ற இடத்திற்கு டாக்சி சேவை இயக்கப்படுகிறது. இந்த வழிதடத்தில் பஸ் குறைந்த அளவில் இயக்கப்படுவதால் ஷேர் டாக்சி அதிக அளவில் இயக்கப்படுகிறது. நேற... மேலும் பார்க்க

செங்கல்பட்டு: ட்ரக்கிங் சென்ற மாணவர்கள்; வெடித்த ராக்கெட் லாஞ்சர் - என்ன நடந்தது?

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கி பயிற்சி மையம் அமைந்துள்ள அனுமந்தபுரம் மலைப்பகுதிக்கு அனுமதியின்றி கல்லூரி மாணவர்கள் 6 பேர் டிரக்கிங் சென்றிருக்கின்றனர். அங்கி... மேலும் பார்க்க

ஐதராபாத்: காங்கிரீட் கலவை டேங்கர் விழுந்து விபத்து; BMW காரில் சிக்கி வழக்கறிஞர் பலி

ஐதராபாத்-விஜயவாடா நெடுஞ்சாலையில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஸ்ரீனிவாஸ் ராவ் தனது பி.எம்.டபிள்யூ காரில் ஐதராபாத் நோக்கி சென்று கொண்டிருந்தார். கார் காஞ்சிகச்சேர்லா என்ற இடத்தில் இருக்கும் டோல்கேட் அருகில்... மேலும் பார்க்க