'அமைச்சர் ஆனந்த் அறையில் தொங்கும் சிவப்பு துணி!' - பின்னணி என்ன?
பெற்றோரை வீட்டை விட்டு துரத்திய மகன்: சகோதரிகளிடம் சொத்தை அபரிக்க இறந்த தந்தை கைரேகையை எடுத்த மகன்
பெற்றோர் இறந்த பிறகு குடும்ப சொத்தை பிரித்துக்கொள்வதில் சகோதரன், சகோதரிகளிடையே தொடர்ந்து மோதல் இருந்து கொண்டேதான் இருக்கிறது. அதுவும் மகள்களுக்கும் பெற்றோரின் சொத்தில் சம பங்கு இருக்கிறது என்று அறிவித்த பிறகு இந்த மோதல்கள் அதிகரித்துள்ளன.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ அருகில் உள்ள கராஹா கிராமத்தில் வசித்து வந்தவர் சத்ரபால்(75). இவர் ஆரம்பத்தில் தனது மகனுடன் தனது வீட்டில் வசித்து வந்தார். ஆனால் அவரது மகன் மகேந்திராவும், அவரது மனைவியுடம் சேர்ந்து சத்ரபால் மற்றும் அவரது மனைவியை வீட்டை விட்டு வெளியேற்றினர்.
இதையடுத்து வயதான தம்பதி தங்களது வீட்டை விட்டு வெளியேறி உறவினர் வீட்டில் தங்கி இருந்தனர். அதன் பிறகு லக்னோவில் வசிக்கும் தனது மகள் சுமன் வீட்டிற்கு சென்று வசித்து வந்தனர். அவரை அவரது மூன்று மகள்களும் கவனித்துக்கொண்டனர்.

இதையடுத்து தனது சொத்தில் பாதியை மூன்று மகள்களுக்கும் பிரித்து சத்ரபால் எழுதிக்கொடுத்தார். அதுமட்டுமல்லாது தன்னையும் தன் மனைவியையும் தனது மகனும், அவரது மனைவியும் மோசமாக நடத்தியதாகக் குறிப்பிட்டு, செய்தித்தாள் அறிவிப்பு ஒன்றின் மூலம் மகேந்திராவையும் அவரது மனைவியையும் தனது அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களுக்கான வாரிசுரிமையிலிருந்து பகிரங்கமாக நீக்குவதாக அறிவித்தார்.
இது குறித்து சந்திரபால் மகள் சுமன் கூறுகையில்,''எனது தந்தைக்கு ஜூலை 7ம் தேதி உடல்நிலை மோசம் அடைந்தது. உடனே இது குறித்து எனது சகோதரனுக்கு தகவல் தெரிவித்தேன். எனவே மகேந்திரா லக்னோ வந்து தந்தைக்கு ஊரில் சிகிச்சை அளித்துக்கொள்கிறேன் என்று கூறி எனது தந்தையை அழைத்துச்சென்றார். ஆனால் அழைத்து சென்ற இரண்டு நாளில் தந்தை இறந்து போனார். இதற்காக நானும் எனது சகோதரிகளும் இறுதிச்சடங்கிற்கு அங்கு சென்றபோது எங்களை அவமானப்படுத்தினார்.
அதோடு உறவினர்கள் முன்னிலையில் இறந்து போன எனது தந்தையின் கைவிரல் ரேகையை வெற்றுப்பேப்பரில் எடுத்துக்கொண்டார்'' என்றார்.
சுமனின் கணவர் ரமேஷ் இது குறித்து கூறுகையில்,''சத்ரபாலின் உடலிலிருந்து கட்டைவிரல் ரேகை எடுக்கப்படுவதைக் கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். அந்த வெற்றுத் தாள்கள் எதற்காகப் பயன்படுத்தப்படவுள்ளன என்று அவர்கள் கேள்வி கேட்டனர்'' என்றார்.
மகேந்திரா தனது இறந்து போன தந்தையின் விரலில் ரேகை எடுக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் இருக்கிறது. சகோதரிகளிடம் இருக்கும் சொத்தை அபகரிக்க இந்த கைரேகையை பயன்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.



















