செய்திகள் :

`பேராசை கொண்டவர்களை பிராங்க் செய்தேன்'- சேலத்தில் பெண்களை மொட்டையடிக்க வைத்த நபர் `கூல்' வாக்குமூலம்

post image

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகில் உள்ள புது கொத்தாம்பாடி கிராமத்தைச் சேர்ந்த பழனியம்மாள் என்ற பெண்மணியிடம், தாசில்தார் என செல்போனில் தொடர்புகொண்ட நபர் ஒருவர், ``கொரோனா போன்ற புதுவித நோய் பரவலில் இருந்து தற்காத்துக் கொள்ள மொட்டை அடிக்க வேண்டும். அதற்கு ஊக்கத்தொகையாக பெண்களுக்கு 15 ஆயிரம் ரூபாயும் ஆண்களுக்கு 6 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும்" எனக் கூறியிருக்கிறார். அதை உண்மையென நம்பிய பெண்கள் சுமார் 20 பேர், இரவோடு இரவாக மொட்டை அடிக்கத் தயாரான நிலையில், 3 பெண்கள் மொட்டை அடித்துக் கொண்டனர். அதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட நபரைத் தொடர்புகொண்டு தொகையை கேட்க முயற்சி செய்துள்ளனர்.

கைதான சதீஷ் குமார்

ஆனால், அவரின் செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. அதையடுத்து தாங்கள் ஏமாற்றப்பட்டதை தாமதமாக அறிந்த பெண்கள், காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த காவல்துறையினர், அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகில் உள்ள மேட்டுக்குப்பம் பகுதியைச் சேர்ந்த சதீஷ் குமார் என்கிற 40 வயது நபரைக் கைதுசெய்து விசாரித்துள்ளனர். அப்போது, பேராசை கொண்ட நபர்களை பிராங்க் செய்யவே இப்படி நடந்து கொண்டேன் என வாக்குமூலம் அளித்திருக்கிறார் அந்த நபர். பெண்களை மோசடி செய்து மொட்டை அடிக்க வைத்த சதீஷ்குமார் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்துள்ளனர்.

கோவை: இந்து கடவுள் முருகனை இழிவுபடுத்தியதாக தவெக நிர்வாகி கைது – நடந்தது என்ன?

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த ராக்கிபாளையம் அன்னை இந்திரா நகரை சேர்ந்தவர் மைக்கேல் ராஜ் (31). இவர் அப்பகுதியில் உள்ள தொழிற்சாலையில் சிஎன்சி ஆப்ரேட்டராக பணியாற்றி வருகிறார். மேலும் இவர் ... மேலும் பார்க்க

கர்நாடகா: மான் வேட்டையில் ஈடுபட்டதாக மூவரைச் சுட்டுக்கொன்ற வனத்துறை; காவிரி சரணாலயத்தில் பயங்கரம்

கர்நாடக மாநிலம் காவிரி வனவிலங்கு சரணாலயத்தைச் சேர்ந்த வனத்துறையினர் இன்று அதிகாலை வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். ஹனூர் தாலுகாவிற்கு உட்பட்ட ஷாக்யா வனப்பகுக்குள் வேட்டை கும்பலைச் சேர்ந்த... மேலும் பார்க்க

அரிய வகை குரங்குடன் வீடியோ வெளியிட்ட விவகாரம்: விசாரணை வளையத்தில் விக்ரம்.. வெளியான அதிர்ச்சி தகவல்!

'லார் கிப்பன்' (Lar Gibbon) எனப்படும் அரியவகை மனித குரங்குடன் கொஞ்சி விளையாடும் வீடியோவை நடிகர் விக்ரம் கடந்த சில தினங்களுக்கு முன்பு சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தார். சர்ச்சையானதைத் தொடர்ந்து அந்த... மேலும் பார்க்க

பாலியல் கொடுமை செய்யப்பட்ட 4 வயது சிறுமி; இளைஞரை ஓட ஓட அரிவாளால் வெட்டிய பாட்டி - கரூர் அதிர்ச்சி!

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் கூலித் தொழிலாளியின் 4 வயது மகளை, 3 நாள்களுக்கு முன்பு குண்டாங்கல்பாறை, புத்தர் நகர்ப் பகுதியில் வசித்து வரும் தங்கராசு மகன் விஜய் (எ) மாண... மேலும் பார்க்க

புதுச்சேரி: `போலீஸே எனக்கு பயப்படுவாங்க!’- மாமூல் தர மறுத்த கடையில் பெட்ரோல் குண்டு வீசிய ரௌடி

புதுச்சேரி, வில்லியனூர் மார்க்கெட் வீதியில் பாபு மற்றும் அவரது சகோதரர் ராஜேந்திரன் இருவரும் இணைந்து பாபு டிரேடர்ஸ் என்ற பெயரில் அரிசிக்கடை நடத்தி வருகின்றனர். நேற்று மாலை சுமார் 6.30 மணியளவில் அங்கு ச... மேலும் பார்க்க

ஆட்டோ வாங்கி கொடுத்தும் `திருந்தாத’ குடிகாரக் கணவன் - சேர்ந்து வாழ மறுத்ததால் பெண் போலீஸ் கொலையா?

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகேயுள்ள எர்த்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீராம். இவரது மகள் தாமரைச்செல்வி (40). இவர், குடியாத்தம் நகரக் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வந்தார். இவரு... மேலும் பார்க்க