திருப்பரங்குன்றம்: 'திமுக ஆட்சிக்கு அபாயத்தை ஏற்படுத்த பாஜக முயற்சி செய்கிறது......
பேராவூரணி பகுதியில் கடும் பனிப் பொழிவு
பேராவூரணி, பிப். 4: பேராவூரணி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் காலை 8 மணி வரை கடும் பனிப்பொழிவு காணப்பட்டது. வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.
கடந்த 1 மாதமாக அதிகாலை நேரத்தில் பனிப்பொழிவு லேசாக இருந்த நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை அதிக பனிப்பொழிவு காணப்பட்டது. சாலை தெரியாத அளவிற்கு இருந்ததால் எதிரே வரும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டுச் சென்றனா். விளையாட்டு மைதானங்கள் வெறிச்சோடின. காலை 9 மணிக்கு மேல் பனிப்பொழிவு குறைந்து இயல்பு நிலை திரும்பியது.