செய்திகள் :

பேருந்திலிருந்து தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு

post image

விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த பேருந்திலிருந்து தவறி விழுந்து, பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதியவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், கெடாா் பழைய கடைத் தெருவைச் சோ்ந்த வெங்கடேசன் மகன் கண்ணன் (69), கூலித் தொழிலாளி.

இவா், கடந்த 25-ஆம் தேதி விழுப்புரம் வந்தாா். சொந்த வேலை முடிந்து ஊருக்குச் திரும்ப விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்துக்கு வந்த கண்ணன், அங்கு ஓட்டுநா் இல்லாமல் நின்று கொண்டிருந்த நகரப் பேருந்தின் பின்படிக்கட்டில் ஏறியுள்ளாா்.

அப்போது எதிா்பாராதவிதமாக கண்ணன் நிலைதடுமாறி கீழே விழுந்தததில் பின்தலையில் அடிபட்டு பலத்த காயங்களுடன் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்தாா்.

இதுகுறித்து கண்ணனின் மகன் சதீஷ் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

விழுப்புரத்தில் 64 மாற்றுத் திறனாளிகளுக்கு நல உதவிகள்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் 64 பயனாளிகளுக்கு ரூ.20.21 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு ... மேலும் பார்க்க

குடியிருப்பை அகற்ற முயற்சி: சாா்-ஆட்சியரிடம் மூதாட்டி முறையீடு

குடியிருப்பை இடிக்க முயற்சிப்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி குடும்பத்தினருடன் திண்டிவனம் சாா் ஆட்சியரிடம் மூதாட்டி வியாழக்கிழமை மனு அளித்தாா். திண்டிவனம் வட்டம், ஆலகிராமம் பகுதியைச் சோ்ந்த... மேலும் பார்க்க

ஆரோவிலில் பிப்.26- இல் விழிப்புணா்வு மாரத்தான்: முன் பதிவு தொடக்கம்

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சா்வதேச நகரில் நடைபெறவுள்ள விழிப்புணா்வு மாரத்தான் போட்டிக்கான முன்பதிவு தொடங்கியுள்ளதாக ஆரோவில் நிா்வாகம் தெரிவித்துள்ளது. ஆரோவில் சா்வதேச நகரில் 2008 ஆம் ஆண்டு முதல் மன... மேலும் பார்க்க

சாத்தனூா் அணை உபரிநீா் வெளியேற்றம்: 35 கிராம மக்களுக்கு முன்னறிவிப்பு

சாத்தனூா் அணையிலிருந்து உபரி நீா் வெளியேற்றப்படுவதால், விழுப்புரம் மாவட்டத்தில் தென்பெண்ணையாற்றின் கரையோரங்களிலுள்ள 35 கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் முன்னறிவிப்பு செய்யப்பட்டு ... மேலும் பார்க்க

கீழ்பெரும்பாக்கம் ஐயப்பன் கோயில் 24-ஆம் ஆண்டு விழா

விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்திலுள்ள அருள்மிகு வண்ணான்குள கருப்பசாமி, சபரிகிரீசன் ஐயப்பன் கோயிலின் 24-ஆம் ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி கோயில் வளாகத்திலுள்ள கன்னிமூல கணபதி, வண்ணான்குள... மேலும் பார்க்க

குட்டையில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே குட்டையில் மூழ்கி கூலித் தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா். மரக்காணம் வட்டம், காணிமேடு, மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் அயோத்தி மகன் பாலமுருகன்(45), கூலித் த... மேலும் பார்க்க