செய்திகள் :

`பொண்டாட்டினு கூட பார்க்காம அசிங்கமா வீடியோ எடுத்து.!’ அதிர வைக்கும் வரதட்சனை புகார்; விபரீத முடிவு

post image

விழுப்புரம் மாவட்டம் பக்கிரிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த எம்.ஏ பட்டதாரியான பிரியங்காவுக்கும், புதுச்சேரி பிள்ளையார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த கார்த்திகேயனுக்கும் கடந்த 2025 அக்டோபர் 31-ம் தேதி திருமணம் நடைபெற்றது.

திருமணமான சில நாட்களிலேயே வரதட்சணை தொடர்பாக கணவன் மனைவிக்கிடையே இடையே கருத்து வேறுபாடு நிலவியிருக்கிறது. அவ்வப்போது அது தொடர்பாக இருவருக்கும் வாக்குவாதமும் ஏற்பட்டிருக்கிறது.

அப்படியான ஒரு வாக்குவாதத்தால்  கணவரிடம் கோபித்துக் கொண்டு, சில நாட்களுக்கு முன்பு தன்னுடைய பெற்றோர் வீட்டுக்குச் சென்று தங்கியிருக்கிறார் பிரியங்கா.

தற்கொலை செய்து கொண்ட பிரியங்கா

இந்தச் சூழலில்தான் கடந்த 20.01.2026 அன்று மாலை தன்னுடைய வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.  அதையடுத்து, `வரதட்சணை கொடுமை காரணமாகவே என்னுடைய மகள் தற்கொலை செய்து கொண்டாள்.

என் மகளை ஆபாசமாக வீடியோ எடுத்ததுடன், வரதட்சணை தரவில்லை என்றால் அதை என் மகள் வேலை செய்யும் இடத்திற்கு அனுப்பி விடுவதாகவும் கணவர் கார்த்திகேயன் மிரட்டியிருக்கிறார்.

அதனால் கார்த்திகேயன் மற்றும் அவரது பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்டமங்கலம் காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கிறார் பிரியங்காவின் தாய் சுமதி.

இந்த சம்பவம் தொடர்பாக நம்மிடம் பேசிய பிரியங்காவின் உறவினர்கள், ``பிரியங்கா எம்.ஏ., இங்லீஷ் படிச்சவ. ரொம்ப அமைதியான பொண்ணு. பிரைவேட் ஸ்கூல்ல டீச்சரா வேலை பார்த்துக்கிட்டு இருந்தா.

கல்யாணத்தப்ப பத்து பவுன் நகையும், சீர்வரிசை சாமான்களும் வாங்கிக் கொடுக்கறதா சொல்லியிருந்தோம். ஆனா அப்போ 5 பவுன்தான் போட முடிஞ்சுது. மீதி பவுனை நிலத்தை வித்துப் போடறோம்னு சொல்லி இருந்தோம்.

சரியான விலை கிடைக்காததால நிலத்தை விற்க முடியல. அதனால அந்தப் பவுனை சொன்ன நேரத்துல எங்களால போட முடியல. ஆனா மாமியார் வீட்ல எங்க பொண்ணுகிட்ட மீதி நகையை கேட்டு அவளை டார்ச்சர் பண்ணி இருக்காங்க.

அதனாலதான் அவ கோச்சிக்கிட்டு எங்க வீட்டுக்கு வந்தா. பொண்டாட்டினு கூட பார்க்காம அவளை அசிங்கமா வீடியோ எடுத்ததோட இல்லாம, `அதை நெட்ல போட்ருவேன்… நீ வேலை பாக்கற ஸ்கூலுக்கு அனுப்பிடுவேன்'னு சொல்லி மிரட்டி இருக்கான் அவளோட வீட்டுக்காரன்.

அதுலதான் புள்ள பயந்து போய்ட்டா. மீதி பவுனை போட்டாலும், மறுபடியும் இவங்ககிட்ட போய் எப்படி வாழறதுனு தெரியாமதான் இந்த முடிவை எடுத்திருக்கா. பணத்தை பெரிசா நினைக்கற குடும்பத்துல எப்படி ஒரு பொண்ணால வாழ முடியும் ? அதுல வெறுத்துப் போய்தான் எங்க பொண்ணு எங்களை விட்டுப் போயிட்டா" என்றனர்.

இந்த தற்கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்திருக்கும் கண்டமங்கலம் போலீஸார், விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல திருமணமாகி ஒரு வருடத்திற்குள் பெண் தற்கொலை செய்து கொண்டிருப்பதால் வருவாய் கோட்டாட்சியர் தலைமையிலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

தற்கொலை தடுப்பு மையம்

முக்கோண காதல்: நண்பனை கொலை செய்து 190 கி.மீ தூரம் எடுத்துச்சென்று உடலை எரித்து மும்பை போலீஸ்காரர்

மும்பை அருகில் உள்ள நவிமும்பையில் போலீஸ்காரராக இருப்பவர் பந்து பிசே (49). இவர் தான் விரும்பும் பெண்ணை தனது நண்பரும் விரும்பியதால் தனது கூட்டாளிகள் சிலருடன் சேர்ந்து தனது நண்பரை கொலை செய்து கிணற்றில் த... மேலும் பார்க்க

பேரணாம்பட்டு: பேருந்தில் கல்லூரி மாணவியிடம் சில்மிஷம் - தோல் வியாபாரி கைது

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்த 18 வயது கல்லூரி மாணவி ஒருவர், நேற்று மாலை கல்லூரியில் இருந்து வீடு திரும்பியிருக்கிறார். குடியாத்தத்தில் இருந்து பேரணாம்பட்டு செல்லும் தனியார் பேருந்தில... மேலும் பார்க்க

குடியாத்தம்: பாலியல் வன்முறைக்குள்ளான 14 வயது சிறுமி - போலீஸார் தீவிர விசாரணை

திருவண்ணாமலையைச் சேர்ந்த ஒரு தம்பதியின் 14 வயது வளர்ப்பு மகள், வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியிலுள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்து பத்தாம் வகுப்புப் பயின்றுவந்தார். இந்த நிலையில், கடந்த 2 நாள்களுக... மேலும் பார்க்க

நாமக்கல்: சொத்து வரி மாற்றத்திற்கு ரூ.20 ஆயிரம் லஞ்சம்; வருவாய் அலுவலர் வசமாகச் சிக்கியது எப்படி?

நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்ன அய்யம்பாளையத்தைச் சேர்ந்தவர் கதிர்வேல். விவசாயியான இவரது பெயரில் உள்ள நான்கு வீடுகளை அவரது மகன் பெயருக்கு மாற்றி, சொத்து வரி விதிக்கக் கோரி, நாமக்கல் மாநகராட்சியி... மேலும் பார்க்க

`வெறுப்புப் பேச்சு'- அண்ணாமலைக்கு சம்மன்; பியூஷ் மானுஷ் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவு!

2023-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி சென்னையில் நடந்த போராட்டத்தில் பங்கேற்று பேசிய அப்போதைய தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, “1956-ம் ஆண்டு மதுரையில் நடந்த விழாவில் பகுத்தறிவுக் கருத்துகளைப் பேசிய அற... மேலும் பார்க்க

அதானி குழுமம் மீது ஊழல் பதிவுகள், செய்தி கட்டுரைகள்; செய்தியாளருக்கு சிறைத் தண்டனை! - விவரம் என்ன?

குஜராத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் ரவி நாயர். இவர் அவதூறு பரப்பும் வகையில் தொடர்ந்து எக்ஸ் பக்கத்தில் பதிவுகள் மற்றும் பொய்யான செய்திக் கட்டுரைகளை வெளியிட்டதாக குஜராத் நீதிமன்றத்தில் வழக்கைத் தொடர்ந்த... மேலும் பார்க்க