செய்திகள் :

"பொய் என நிரூபிக்கப்பட்ட 'சர்க்காரியா அறிக்கை'யை வாசிக்க வெட்கமில்லையா?" - விஜய்க்கு அப்பாவு கேள்வி

post image

இன்று சட்டப்பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பேசிய உரையைக் கடுமையாக விமர்சித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் தமிழ்நாடு சட்டமன்றத்தின் முன்னாள் சபாநாயகர் அப்பாவு.

அப்பாவு, "சட்டமன்றத்தில் இன்று காவல்துறை மானியத்திற்குப் பதிலளித்த முதல்வர். தமிழக மாணவ, மாணவிகளைச் சீரழித்து வரும் போதைப் பொருள் கலாசாரத்தைக் கட்டுப்படுத்தவும், தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களிலிருந்து கடத்தி விற்பனை செய்து வரும் கஞ்சா போன்ற போதைப் பொருட்களைக் கட்டுப்படுத்தவும் எந்தப் பதிலும் சொல்லாமல், இது 100 நாள்களில் உருவானதல்ல பல ஆண்டுகளாக வேரூன்றி இருக்கிறது என்று பொறுப்பற்ற பதில் சொல்லி கஞ்சா போன்ற போதைப் பொருள் கடத்தலுக்கும், விற்பனைக்கும் துணைநிற்கும் செயலில் ஈடுபட்டுவிட்டீர்களே CM sir ?

விஜய் உரை
விஜய் உரை

தமிழ்நாட்டில் நடைபெற்று வரும்கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுப்பதாகப் பதில் சொல்ல முடியாமல், 50 ஆண்டுகளுக்கு முன் பொய்க் குற்றச்சாட்டு என்று நிரூபிக்கப்பட்ட 'சர்காரியா கமிஷன்' அறிக்கையை சட்டமன்றத்தில் வாசிக்க வெட்கமாக இல்லையா CM sir ?

சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடுத்து வைத்த மக்கள் பிரச்னைக்குப் பதில் சொல்ல திராணியில்லாமல் திமுக மேடை பேச்சிகளை எடுத்து பதிலளிக்கும் முதல்வரே!

உங்கள் அமைச்சரவை பெண் உறுப்பினர் அலைபேசி மூலம் "லட்சுமணன்" என்பவரை ஜட்டியோடு உட்கார வைத்து அடித்துக் கொன்று விடுவேன் என்று மிரட்டியதையும் சட்டமன்றத்தில் பேசியிருக்கலாமே CM sir?

தமிழ்நாட்டில் தவெக நிர்வாகிகளும் உறுப்பினர்களும் செய்து வருகின்ற கொலை கொள்ளை போதைப் பொருள் விற்பனை பாலியல் சீண்டல் போன்ற வழக்குகள் மீது உறுதியான நடவடிக்கையை எடுப்போம் என்று தெரிவிப்பதை விட்டுவிட்டு

FIR பதிவு செய்து இருக்கிறோம் என அலட்சியமாகச் சொன்ன பதில் மக்களை ஏமாற்றும் செயல் இல்லையா CM sir ?

நாட்டின் சட்டம் ஒழுங்கை நிலை நிறுத்துவதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? அடுத்து என்ன நடவடிக்கை எடுக்க போகிறோம் என்பது பற்றி எந்தப் பதிலும் பேசாமல் அண்டை மாநில உதவியாளர்கள் எழுதிக் கொடுத்ததை சினிமா அங்க அசைவுகளோடு (நடித்து) வாசித்து பொதுக் கூட்டத்தில் நான்காம் தர மேடைப் பேச்சாளரைப் போன்று தரம் தாழ்ந்து பேசியது சட்டமன்றத்தின் மாண்பைச் சந்தி சிரிக்க வைத்துவிட்டதே CM Sir?" என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

"தவெக-வினரே பெண்கள் மீது தவறான பதிவுகளைப் பதிவிடுகிறார்கள்" - பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு

தமிழக சட்டமன்றத்தில் காவல்துறை, தீயணைப்புத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், "காவல... மேலும் பார்க்க

போர் நிதி: `ஆபாசப் படங்களுக்கு அரசு அங்கீகாரம்' - உக்ரைன் எடுத்திருக்கும் முடிவின் பின்னணி என்ன?

ரஷ்யாவிற்கு எதிரான போருக்கான நிதியைத் திரட்ட, உக்ரைன் நாடு ஆபாசப் பட தயாரிப்பை சட்டப்பூர்வமாக்கும் புதிய மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.உக்ரைனில் ஆபாசப் படங்களைத் தயாரிப்பது மற்றும் விநி... மேலும் பார்க்க

லண்டன் கிளம்ப இருந்த முதல்வர் விஜய்... ஆளுநரின் ஒரு போன் காலில் மாறிய திட்டம்!

வெளிநாடு முதலீடுகளை ஈர்ப்பதற்காக, வரும் செப்டம்பர் 10-ம் தேதி வாக்கில், முதல்வர் விஜய் லண்டன் கிளம்புவதாக திட்டமிடப்பட்டிருந்தது. இந்தச்சூழலில், அவருடைய பயணம் தள்ளிப்போகவிருப்பதாகச் சொல்கின்றன கோட்டை ... மேலும் பார்க்க

KN Nehru FIR: "அமைச்சராக இருந்தப்போது Party Fund ஆக ரூ.1,020 கோடி பெற்றார்" - லஞ்ச ஒழிப்புத் துறை

கடந்த சனிக்கிழமை (செப்டம்பர் 5), லஞ்ச ஒழிப்புத் துறை திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, அவரது சகோதரர்கள் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் இடங்களில் சோதனை மேற்கொண்டது. அந்தச் சோதனையின் எஃப்.ஐ.ஆர் ... மேலும் பார்க்க

முதல்வர் உரை: "பதிலற்ற பதிலுரை; Prepare well next time.!" - உதயநிதி விமர்சனம்

மூன்று நாள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டமன்றம் இன்று கூடியிருக்கிறது. காவல்துறை, தீயணைப்புத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தின் போது பல்வேறு கட்சி உறுப்பினர்கள், சட்டம் ஒழுங்கு தொடர்பாக எழுப்பிய... மேலும் பார்க்க

``கொடநாட்டில் வாட்ச்மேன் வேலை பார்த்த விஜய் ஆட்சிக்கு வந்தது ஒரு விபத்து" - உதயநிதி காட்டம்

மூன்று நாள் விடுமுறைக்குப் பிறகு இன்று சட்டமன்றம் கூடியது. இன்று எதிர்க்கட்சித் தலைவர்கள் கேட்ட கேள்விகளுக்கு முதல்வர் பதிலளிப்பார் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், முதல்வர் சட்டமன்றத்தில் சுமார் ... மேலும் பார்க்க