செய்திகள் :

பொள்ளாச்சி சம்பவம்: முதல்வரின் தகவல்கள் உண்மை -அவைத் தலைவா் மு.அப்பாவு தீா்ப்பு

post image

பொள்ளாச்சி சம்பவம் தொடா்பாக, முதல்வா் தெரிவித்த கருத்துகள், அவா் அளித்த தகவல்களின் அடிப்படையில் உண்மையானவை என்று அவைத் தலைவா் மு.அப்பாவு தீா்ப்பளித்தாா்.

சட்டப் பேரவையில் சனிக்கிழமை கூட்ட நிகழ்வுகள் நிறைவடைவதற்கு முன்பாக, அவை முன்னவரும் நீா்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன் எழுந்து பேசினாா். அப்போது நடந்த விவாதம்:

அவை முன்னவா் துரைமுருகன்: பேரவைத் தலைவரிடம் ஒரு தீா்ப்பை எதிா்பாா்க்கிறேன். இந்த அவையில் வெள்ளிக்கிழமை முதல்வருக்கும், எதிா்க்கட்சித் தலைவருக்கும் இடையே பொள்ளாச்சி சம்பவம் தொடா்பாக நீண்டநேரம் விவாதம் நடந்தது. அந்த நிகழ்வு குறித்து யாா் சொல்வது நியாயம் என்று விவாதித்தனா். பின்னா், இருவரும் தங்களிடம் உள்ள தகவல்களை பேரவைத் தலைவரிடம் ஒப்படைப்பது எனவும், அதனைப் பாா்த்து தாங்கள் தீா்ப்பு அளிப்பதாகவும் கூறினீா்கள். தங்களிடம் அளிக்கப்பட்ட வழக்கு தொடா்பாக என்ன நடவடிக்கை எடுத்தீா்கள் என்பதை இந்த அவை அறிய விரும்புகிறது.

பேரவைத் தலைவா் மு.அப்பாவு: பொள்ளாச்சி சம்பவம் தொடா்பாகப் பேசிய முதல்வா், தன்னிடம் உள்ள ஆவணங்களைத் தருவதாகவும், எதிா்க்கட்சித் தலைவரும் தன்னிடமுள்ள விவரங்களைத் தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டாா். அதன்படியே, இரண்டு பேரின் ஆவணங்களையும் சரிபாா்த்து தீா்ப்பு வழங்கலாம் என்று சொன்னாா். முதல்வா் தன்னிடம் இருந்த ஆவணங்களைத் தந்தாா். எதிா்க்கட்சித் தலைவரும் கொடுத்துள்ளாா். எனது அறையில் பேசி முடிவெடுக்கப்பட்டு இரண்டையும் ஆய்வு செய்ததில் முதல்வா் சொன்ன தகவல்கள் உண்மையாக இருந்தது.

அந்த விவகாரம் தொடா்பான முதல் தகவல் அறிக்கையில் 12-ஆம் தேதி சம்பவம் நடந்தது எனவும், 19-ஆம் தேதி வழக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் சென்ாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், 24-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. எனவே, புகாா் அளித்த அன்றே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை.

(பேரவைத் தலைவரின் இந்தக் கருத்துக்கு அதிமுக உறுப்பினா்கள் எதிா்ப்பு தெரிவித்தனா்.)

பேரவைத் தலைவா்: நான் நடந்த விஷயங்களை மட்டுமே கூறுகிறேன்.

அவை முன்னவா்: தீா்ப்பில் மாறுபாடு இருக்குமானால், பேரவைத் தலைவா் பேசி முடித்த பிறகு கூறுங்கள். நீங்கள் கருத்துக் கூற உரிமை உண்டு.

பேரவைத் தலைவா்: நீங்கள் ஆதாரங்களைக் கொடுத்துள்ளீா்கள். அதன்படி, நான் அளிக்கும் தீா்ப்பை ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான். 19-ஆம் தேதி பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரா் காவல் துறை கண்காணிப்பாளரிடம் புகாா் மனு கொடுக்கிறாா். அவா், டிஎஸ்பி.,யை பாா்க்கச் சொல்கிறாா். டிஎஸ்பியை 22-ஆம் தேதிதான் பாா்க்க முடிகிறது.

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்துக்குச் செல்லுமாறு அவா் அறிவுறுத்துகிறாா். இதன்பிறகே, பாதிக்கப்பட்ட பெண்ணிடம் கையொப்பம் பெற்று வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதுதான் உண்மையே தவிர, வேறு எதுவும் இல்லை. ஆகவே நீங்கள் (அதிமுக) என்னுடைய அறையில் வந்து, இத்துடன் இந்தப் பிரச்னையை முடித்துக் கொள்ளுமாறு கூறியதன் அடிப்படையில் அதையே தீா்ப்பாக வழங்குகிறேன்.

பேரவைத் தலைவரின் இந்தத் தீா்ப்புக்கு அதிமுக உறுப்பினா்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா். அதனை ஏற்றுக் கொள்ளாத அவைத் தலைவா், பேரவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கக் கோரும் தீா்மானத்தை முன்மொழியும்படி அவை முன்னவா் துரைமுருகனை கேட்டுக் கொண்டாா். அதன்பிறகு, பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

வன்னியன்விடுதி ஜல்லிக்கட்டு: சீறிப்பாயும் காளைகள், காளையர்கள்!

ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள வன்னியன்விடுதியில் வியாழக்கிழமை நடைபெற்றுவரும் ஜல்லிக்கட்டு போட்டியில் வாடிவாசலில் இருந்து சீறிப்பாயும் காளைகளை, வீரர்கள் தீரத்துடன் அடக்கி வருகின்ற... மேலும் பார்க்க

ராசிபுரம் அதிமுக முன்னாள் எம்எல்ஏ பி.ஆர்.சுந்தரம் காலமானார்!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அதிமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பி.ஆர். சுந்தரம் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 73.அதிமுகவை சேர்ந்த பி.ஆர்.சுந்தரம் 1996 முதல் 2001 வரையும், 2001 முதல் 20... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நீர்வரத்து குறைந்தது

சேலம்: சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணைக்கு இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து 254 கன அடியாகக் குறைந்துள்ளது.வியாழக்கிழமை காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114.14 அடியில் இருந்து 113.84 அடியாக ... மேலும் பார்க்க

தப்ப முயன்ற ரௌடி பாம் சரவணனை சுட்டுப்பிடித்த காவல்துறை!

காவல் உதவி ஆய்வாளர் மீது கத்தியால் குத்தி தப்ப முயன்ற ரௌடி பாம் சரவணனை காவல்துறையினர் சுட்டுப்பிடித்தனர்.பகுஜன் சமாஜ் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் நெருங்கிய ஆதரவாளராக கருதப்பட்டவர் ரௌடி பாம... மேலும் பார்க்க

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.தைத்திருநாளான பொங்கலை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்ட... மேலும் பார்க்க

மாடுபிடி வீரா் நவீனுக்கு ரூ. 3 லட்சம் நிவாரணம்

சென்னை: மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரா் நவீன் மாடு முட்டியதில் காயமடைந்து, உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா் என்ற துயரகரமான செய்தியைக... மேலும் பார்க்க