செய்திகள் :

பொள்ளாச்சி: ரூ.70,000 லஞ்சம் வாங்கிய எஸ்.எஸ்.ஐ கைது - அதிர்ச்சி பின்னணி!

post image

திருநெல்வேலி மாவட்டம், தச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ருஜைனா பாத்திமா. இவரது கணவர் கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த ரவிக்குமார் என்பவரிடம், இரு சக்கர வாகனத்தை அடமானமாக வைத்து பணம் பெற்றுள்ளார். இதனிடையே அந்த வாகனத்தை ரவிக்குமார் தவறான செயல்களுக்கு பயன்படுத்துவதாக ருஜைனா பாத்திமாவின் கணவருக்கு தெரியவந்துள்ளது. இதனால் தன்னிடம் இருந்த மாற்று சாவியை பயன்படுத்தி இருசக்கர வாகனத்தை எடுத்து சென்று, பொள்ளாச்சியில் உள்ள ஒரு வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தி வைத்துள்ளார். இது குறித்து ரவிக்குமார் பொள்ளாச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இது தொடர்பாக சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பூபதி (52) என்பவர் விசாரணை நடத்தி வந்தார். அப்போது ருஜைனா பாத்திமா மற்றும் அவரது கணவரின் மொபைல் போன்களை கைப்பற்றியுள்ளார். பின்னர் பூபதி கோவை காட்டூர் காவல் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், இந்த புகாரை முடித்து வைக்கவும், மொபைல் போன்களை திரும்ப ஒப்படைக்கவும் ரூ.70 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ருஜைனா பாத்திமா கோவை லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை ருஜைனா பாத்திமா, சிறப்பு உதவி ஆய்வாளர் பூபதியிடம் நேற்று வழங்கினார். அப்போது லஞ்ச ஒழிப்பு போலீசார் பூபதியை கையும், களவுமாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். லஞ்ச வழக்கில் காவல் துறை அதிகாரி கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சர்கள் வழங்கிய உதவியை பெற மறுத்த சபரிவர்மன் குடும்பத்தினர்; மரண சந்தேகங்களை தீர்க்க கோரிக்கை!

கன்னியாகுமரி மாவட்டம், தென்தாமரைகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஈத்தன்காடு, நாராயணன்புதூரை சேர்ந்த சபரிவர்மன் (35) சிறையில் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. மாற்றுத்திற... மேலும் பார்க்க

Lockup Death: ரூ.192 மதிப்புள்ள குட்காவுக்காக நடந்த கைது; சிறையில் நடந்த கொடூரம் - FIR விவரம்!

கன்னியாகுமரி மாவட்டம், தென்தாமரைக்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஈத்தன்காடு பகுதியைச் சேர்ந்த சபரிவர்மன்(35) வீட்டுக்கு அருகே பெட்டிக்கடையில் குட்கா விற்பனை செய்ததாக கடந்த 9-ம் தேதி தென் தாமரைக்குள... மேலும் பார்க்க

சென்னை: ரூ.11 லட்சம் மதிப்புள்ள கள்ளநோட்டுகள் பறிமுதல் - டிராவல்ஸ் அதிபர் சிக்கிய பின்னணி!

சென்னை திருவல்லிக்கேணி போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையிலான தனிப்படை போலீஸாருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது. அதன்படி 15.7.2026-ம் தேதி திருவல்லிக்கேணி, தசூதீன்கான் தெருவில் உள்ள லாட்ஜிக்கு தனிப்படை போலீஸா... மேலும் பார்க்க

சென்னை: குட்கா வழக்கில் கைதானவர் சிறையில் உயிரிழப்பு - காவல் நிலையம் முற்றுகை

சென்னை சேலையூர், ஜானகிராமன் தெருவை சேர்ந்தவர் பாலாஜி (44). இவர் மீது சேலையூர் போலீஸார் குட்கா வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் பாலாஜியின் கூட்டாளியான ராமநாதன் என்பவரும் கைது செய்ய... மேலும் பார்க்க

சென்னை: ரயில் நிலையத்தில் பெண் குளிப்பதை வீடியோ எடுத்த மின்வாரிய ஊழியர் - சிக்கியது எப்படி?

மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த 32 வயதான பெண் ஒருவர், குடும்பத்துடன் கேரளாவில் வசித்து வருகிறார். இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு மேற்கு வங்காளத்துக்குச் சென்றார். பின்னர், ரயில் மூலம் கேரளாவுக்குச் ச... மேலும் பார்க்க

Lockup Death: உடலை வாங்காமல் 4 நாள்களாகப் போராடும் சபரிவர்மன் குடும்பம்; எஸ்.ஐ ஆயுதப்படைக்கு மாற்றம்

கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைக்குளம் அருகே ஈத்தங்காட்டைச் சேர்ந்தவர் 35 வயதான மாற்றுத்திறனாளி சபரி வர்மன். இவர் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் விற்றதாகக் கூறி கடந்த ஜூலை 9-ம் தேதி தென் தாமரைக்குளம... மேலும் பார்க்க