செய்திகள் :

பொள்ளாச்சி: வாங்கிய லஞ்சத்தைத் திருப்பி தர முயன்ற எஸ்ஐ பணியிட மாற்றம்; வைரல் ஆடியோவின் பின்னணி என்ன?

post image

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த முகேஷ் என்பவருக்கும், ஏற்கனவே திருமணமான ஒரு பெண்ணுக்கும் திருமணத்திற்கு மீறிய உறவு இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனை அறிந்த அப்பெண்ணின் கணவன், மனைவியைச் சமாதானம் பேசி தனது வீட்டுக்கு அழைத்து வந்து வாழ்ந்து வந்துள்ளார்.

இதனால் கோபம் அடைந்த முகேஷ் அந்தப் பெண்ணிற்கும், அவரது கணவனுக்கும் மிரட்டல் விடுத்ததாகத் தெரிகிறது. இதையடுத்து கணவன் மற்றும் மனைவி இருவரும் கடந்த இரு தினங்களுக்கு முன்பு விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு, பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

இந்த விவகாரம் குறித்து பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய காவல் துறையினர் முகேஷை காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்க காவல் உதவி ஆய்வாளர் ஜான்சன் ரூ. 5 ஆயிரம் ரூபாய்  லஞ்சம் பெற்றுக் கொண்டு, எச்சரித்து அனுப்பியதாகக் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் காவல் நிலையத்தில் பணியாற்றும் அனைவருக்கும் தெரியவந்துள்ளது. இதனால் சிறிது நேரத்தில் முகேஷை போனில் தொடர்பு கொண்ட தலைமை காவலர் நாகராஜன், “நீங்கள் கொடுத்த பணத்தைத் திருப்பி உதவி ஆய்வாளர் ஜான்சன் கொடுக்கச் சொன்னார். நீங்க எங்கே இருக்கிறீர்கள்?” எனக் கேட்டுள்ளார்.

அதற்கு முகேஷ், “நான் வெளியில் இருக்கிறேன். காலையில் கோவை சென்று விடுவேன். இப்போது வரமுடியாது” எனக் கூறியுள்ளார்.

பொள்ளாச்சி காவல் நிலையம்
பொள்ளாச்சி காவல் நிலையம்

தொடர்ந்து முகேஷ் தந்த லஞ்சப் பணத்தைத் திரும்ப பெற்றுக் கொள்ளுமாறு தலைமை காவலர் வற்புறுத்தவே, “காலில் வேண்டுமானாலும் விழுகிறேன். கொடுத்த பணம் கொடுத்ததாகவே இருக்கட்டும். பணம் எனக்கு வேண்டாம் இந்தப் பிரச்னையிலிருந்து எனக்கு தீர்வு கிடைத்தால் போதும். திருமணம் ஆகவில்லை என்று தான் அந்தப் பெண்ணிடம் பழகினேன். இனிமேல் நான் அந்தப் பிரச்னைக்கு வரமாட்டேன்” என முகேஷ் புலம்பியுள்ளார்.

இந்த ஆடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் லஞ்சப் புகாரில் சிக்கிய உதவி ஆய்வாளர் ஜான்சன் மற்றும் தலைமை காவலர் நாகராஜன் ஆகிய இருவரையும் ஆயுதப்படைக்குப் பணியிட மாற்றம் செய்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் நடவடிக்கை எடுத்துள்ளார்.

சென்னை: `தனிமையில் இருக்கலாம்' - ரியல் எஸ்டேட் அதிபருக்கு ஆசை காட்டி பணம் பறித்த கும்பல்

சென்னை, அரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் ராஜா (பெயர் மாற்றம்) (53). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரை ஓரினச்சேர்க்கையாளர்கள் பயன்படுத்தும் பிரத்கேய செல்போன் செயலி மூலம் சுதாகர் என்பவர் தொடர்... மேலும் பார்க்க

பெங்களூரு: அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்த டெலிவரி பாய்; தனியாக இருந்த பெண்ணிடம் அநாகரிகச் செயல்

பெங்களூரு மாரத்தஹள்ளியில் கழிவறையைப் பயன்படுத்துவதாகக் கூறி ஒரு பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து தனது அந்தரங்க உறுப்பைத் தனியாக இருந்த பெண்ணிடம் காட்டிய டெலிவரி ஊழியர் கைது செய்யப்பட்டார். தற்போது அதுபோ... மேலும் பார்க்க

கூடங்குள அணுமின் நிலைய சைபர் தாக்குதல் : அபாயப் பின்னணிகள் – அளிக்கும் பாடங்கள்!

நிகழ்ந்தது தரவுத்திருட்டு மற்றும் ஆவணக் கசிவு (மட்டுமே)கூடங்குளம் அணு மின் நிலையத்தின் மீது சமீபத்தில் சைபர் தாக்குதல் நடைபெற்ற தகவல் வெளியானது.(சைபர் தாக்குதல் என்பதை கணினி அமைப்புகள், தகவல் தொடர்பு ... மேலும் பார்க்க

சேலம்: மூக்குத்தி, கம்மலுக்காக வீடுபுகுந்து தம்பதி அடித்துக் கொலை - அச்சத்தில் மக்கள்

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகில் உள்ள ராமப்ப கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஜெயராமன் - அமராவதி தம்பதி. மூத்த குடிமக்களான‌ இருவரும் தென்னை மட்டை பின்னும் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர். இவர்களுக்கு இரவு ... மேலும் பார்க்க

மார்கண்டேயனை படம் பிடிக்கச் சென்ற பத்திரிகையாளர்கள் - நாக்கை துருத்தி மிரட்டல் விடுத்த ஏடிஎஸ்பி!

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நடந்த தி.மு.க பொதுக்கூட்டத்தில் விளாத்திகுளம் தொகுதியின் தி.மு.க எம்.எல்.ஏ மார்கண்டேயன், “எலும்பை உடைத்து விடுவேன்” என முதல்வர் விஜய்யை பார்த்து கொலை மிரட்டல் வி... மேலும் பார்க்க

திருப்பத்தூர்: ரூ.50 லட்சம் செம்மரக்கட்டைகள் திருட்டு - வனத்துறை குடோனில் மர்ம நபர்கள் கைவரிசை!

திருப்பத்தூர் வனக்கோட்டத்துக்குச் சொந்தமான சந்தன மற்றும் செம்மரக் கட்டைகள் விற்பனைக் கிடங்கு, திருப்பத்தூர் அரசு தலைமை மருத்துவமனை எதிரே உள்ளது. இங்கு ஜவ்வாது மலையில் விளையும் உயர்தர சந்தன மரங்கள் மற்... மேலும் பார்க்க