கொலை வழக்கு: திமுக முன்னாள் எம்எல்ஏ உட்பட 7 பேருக்கு ஆயுள் சிறை - திருவண்ணாமலை ந...
"போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெற முதன்மையான பண்பு இதுதான்" - King Makers IAS சத்யஶ்ரீ பூமிநாதன்
'UPSC/TNPSC குரூப் -1, 2 -தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில் ஆனந்த விகடனும் King Makers IAS அகாடமியும் இணைந்து சென்னையில் ஓர் இலவசப் பயிற்சி முகாமை நடத்தத் திட்டமிட்டிருக்கிறது.
'UPSC/TNPSC குரூப் -1, 2 தேர்வுகளில் வெல்வது எப்படி?' என்ற தலைப்பிலான இந்த இலவசப் பயிற்சி முகாம் வருகிற மார்ச் மாதம் 8ஆம் தேதி சென்னை எழும்பூரில் உள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரியில் நடக்க இருக்கிறது. அதனுடன் ஒரு வருட இலவசப் பயிற்சிக்கான ஸ்காலர்ஷிப் தேர்வும் நடக்கிறது.

இந்த நிகழ்வில் டாக்டர். சி. சைலேந்திர பாபு, (ஐபிஎஸ் (ஓய்வு) தமிழ்நாடு முன்னாள் டிஜிபி/ காவல் துறை தலைவர்), டாக்டர். V. இராம் பிரசாத் மனோகர் (இ.ஆ.ப தலைவர், பெங்களூரு குடிநீர் வடிகால் வாரியம் நிர்வாக இயக்குநர், கர்நாடக மின்சார கழகம்), ஆதில் பெய்க் (சிவில் சர்வீஸஸ் தேர்வு பயிற்சியாளர் - King Makers IAS அகாடமி) ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு போட்டித் தேர்வுகள் குறித்த ஆலோசனைகளை வழங்க உள்ளார்கள்.
இவர்களுடன் King Makers IAS அகாடமியின் இயக்குநர் சத்யஶ்ரீ பூமிநாதனும் ஊக்க உரை ஆற்றுகிறார்.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சி தொடர்பாக நம்மிடம் பேசிய கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி, "வரலாற்றில் மட்டுமின்றி இந்தியாவிலேயே முதல் முறையாக 100% பார்வையற்ற திருமதி. Beno zephaine IFS அதிகாரியை உருவாக்கிய பெருமைமிக்க கோச்சிங் சென்டர் கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி.
UPSC போன்ற போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தங்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு கலை பாடத்தையோ, அறிவியல் பாடத்தையோ, பொறியியல் பாடத்தையோ பட்டப்படிப்பாக எடுத்துப் படிக்கலாம்.
குறிப்பிட்ட பாடத்திட்டம்தான் படிக்க வேண்டும் என்ற எந்தவித கட்டாயமும் இல்லை. கல்லூரியில் படிக்கும்போதே சிவில் சர்வீஸ் தேர்வுக்குத் தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்வது தேர்ச்சி பெறுவதை எளிதாக்கும்.

தற்போது +2 முடித்த மாணவர்கள் கூட கல்லூரியில் சரியான திட்டமிடல் மூலம் முதல் முயற்சியிலேயே UPSC சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெறலாம். கல்லூரியில் ஆப்ஷனல் படிப்பைத் தேர்வு செய்து படிக்கும் அதே வேளையில் கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி வழங்கக் கூடிய மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கான ஒருங்கிணைந்த படிப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
NCERT பாடத்திட்டத்தின் அனைத்துப் பாடங்களையும் முழுமையாகப் படிப்பதன் மூலமும் தினந்தோறும் செய்தித்தாள்களை வாசிப்பதைக் கட்டாயப்படுத்திக் கொள்வதன் மூலமும் முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் வெற்றி பெற முடியும்.
தினமும் நம்மைச் சுற்றி நடக்கக் கூடிய ஒவ்வொரு நிகழ்வுகள், அதன் காரணங்கள் மற்றும் விளைவுகளைக் கூர்ந்து கவனிப்பது அதை அலசி ஆராயக் கூடிய திறனை வளர்த்துக்கொள்வது இந்தப் போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதற்கான முதன்மையான பண்புகளாகும்" என்றார்.
இந்தப் பயிற்சி முகாமிற்கு முன்பதிவு செய்ய 044- 66802997 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுக்கவும். அப்படி இல்லையென்றால் இந்த முகாமில் கலந்துகொள்ள விரும்புகின்றவர்கள் கீழ்க்கண்ட விண்ணப்பத்தில் பதிவு செய்து பயன்பெறலாம்.














