செய்திகள் :

போட்டோ ஷூட் என வரவழைத்து கொலை; தண்டவாளத்தில் சடலம் வீச்சு; விசாரணையில் வெளியான காதல் பின்னணி

post image

கோவை மாவட்டம் தடாகம் அடுத்த மடத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன் (24). புகைப்படக் கலைஞரான இவர், கடந்த வாரம் வியாழக்கிழமை தனக்குப் புதிய புகைப்பட ஆர்டர் ஒன்று வந்து இருப்பதாகக் கூறிவிட்டு, ஒட்டன்சத்திரத்திற்குப் புறப்பட்டுச் சென்று உள்ளார்.

அதன்பின் அவர் வீடு திரும்பாததால், சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் தடாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து அவரைத் தீவிரமாகத் தேடி வந்தனர்.

​இதனிடையே கிணத்துக்கடவு அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தில் பிரவீன் உடல் கண்டெடுக்கப்பட்டது. பிரவீன் தற்கொலை செய்திருக்கலாம் எனக் கருதப்பட்ட நிலையில், ரயில்வே காவல் துறையினர் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். ​

இந்நிலையில், இவ்வழக்கில் திடீர் திருப்பமாக கரூரைச் சேர்ந்த மனோஜ் மற்றும் அவரது நண்பர் கார்த்திக் ஆகியோர் கோவை நீதிமன்றத்தில் ஆஜராகி, “நாங்கள்தான் பிரவீனைத் திட்டமிட்டுக் கொலை செய்து தண்டவாளத்தில் வீசினோம்” எனக்கூறி சரணடைந்தனர்.

மனோஜ்
மனோஜ்

இதையடுத்து காவல் துறையினர் அவர்களிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. ​கரூரைச் சேர்ந்த மனோஜ்குமார் என்பவரும், கோவை சாய்பாபா காலனியைச் சேர்ந்த ஒரு பெண்ணும் கடந்த 4 வருடங்களாக இன்ஸ்டாகிராம் மூலமாகக் காதலித்து வந்து உள்ளனர். இதற்கிடையே, அந்தப் பெண் பிரவீனுடனும் பழகி வந்து உள்ளார்.

இது குறித்து அறிந்த மனோஜ் தங்களது காதலுக்கு பிரவீன் இடையூறாக இருப்பதாகக் கருதி, அவரைக் கொலை செய்யத் திட்டமிட்டதாகத் தெரிகிறது.

கார்த்திக்
கார்த்திக்

இன்ஸ்டாகிராம் மூலம் பிரவீனைத் தொடர்பு கொண்ட மனோஜ், ஒட்டன்சத்திரத்தில் ஒரு போட்டோ ஷூட் இருப்பதாகக் கூறி வரவழைத்துள்ளார். அதனை நம்பி சென்ற பிரவீனை மது குடிக்க வைத்து, தனது நண்பர் கார்த்திக் காரில் அழைத்துச் சென்று கழுத்தை நெறித்து கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.

பின்னர் கொலையை மறைக்க வேண்டி பிரவீனின் சடலத்தைக் கொண்டு சென்று, ரயில் தண்டவாளத்தில் போட்டுள்ளனர். ​அப்போது அவ்வழியாக வந்த ரயில் பிரவீனின் உடல் மீது ஏறியதில், அவரது உடல் துண்டாகி சிதறியது. இந்த நிலையில் காவல் துறையினர் தங்களைக் கண்டுபிடித்து விடுவார்கள் என்ற அச்சத்தில் இருவரும் நீதிமன்றத்தில் சரண் அடைந்ததாகத் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Udhayanidhi: திமுக இளைஞரணிச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுகிறாரா உதயநிதி ஸ்டாலின்?

கட்சி மறுசீரமைப்புப் பணிகளில் தி.மு.க கவனம் செலுத்திவரும் நிலையில், இளைஞரணிச் செயலாளர் பொறுப்பிலிருந்து உதயநிதி ஸ்டாலின் விலகுவதாக தகவல்கள் கசிந்துவரும் நிலையில், அறிவாலய வட்டாரங்களில் நாமும் விசாரித்... மேலும் பார்க்க

’ஓமந்தூர் ராமசாமி முதல் விஜய் வரை’ - முதல்வர்கள் போட்டோ பிரச்னைக்கு கோவை மாநகராட்சியில் நூதன தீர்வு!

கோவைமாநகராட்சிமாமன்றக்கூட்டம்டவுன்ஹால் பகுதியில் உள்ளமாநகராட்சிபிரதானஅலுவலகவளாகத்தில்நடைபெற்றது. மேயர்ரங்கநாயகி தலைமையில் நடத்த இந்தக் கூட்டத்தில், மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா,துணைமேயர்வெற்றிச்... மேலும் பார்க்க

கோவை மாநகராட்சியில் திமுக, காங்கிரஸ் கவுன்சிலர்கள் மோதல்; சிபிஐ, சிபிஎம் கவுன்சிலர்கள் சஸ்பெண்ட்

கோவைமாநகராட்சிமாமன்றக்கூட்டம்டவுன்ஹால் பகுதியில் உள்ளமாநகராட்சிபிரதானஅலுவலகவளாகத்தில்நடைபெற்றது.மேயர்ரங்கநாயகிதலைமையில் நடத்த இந்தக் கூட்டத்தில், மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, துணை மேயர் வெற்றிச... மேலும் பார்க்க

பத்திரிகையாளர் விஜயனிடம் விசாரணை: "காவல்துறை Reels Mafiaக்களின் கட்டுப்பாட்டில் உள்ளதா?" - அப்பாவு

தவெக ஆட்சியைக் கவிழ்க்க ஊத்தங்கரை எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் பேரம் பேசியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் திருவல்லிக்கேணி போலீசார் இதுவரை 8 பேரைக் கைது செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் தனியார் தொலைக்காட்ச... மேலும் பார்க்க

கூடங்குளம் தரவுகள் கசிவு: 'நாட்டின் பாதுகாப்பு குறித்த கவலையை எழுப்பியுள்ளது'- மாணிக்கம் தாகூர்

திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தின் உள்கட்டமைப்பு குறித்த ஆவணங்கள் டார்க் வெப்பில் கசிந்துள்ளது. 'World Leaks' என்னும் ஹேக்கர் குழு தான் டார்க் வெப்பில் வெளியிட்டிருக்க... மேலும் பார்க்க

பழனி கோயில் நில மோசடி வழக்கு: அறநிலையத்துறை அதிகாரிகளிடம் சிபிசிஐடி விசாரணை தொடங்கியது

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் சந்நிதி வீதியில் அமைந்துள்ள அருள்மிகு தண்டபாணி சுவாமிகள் மடத்திற்குச் சொந்தமான 100 கோடி மதிப்புள்ள நிலம், நீதிமன்ற உத்தரவுகளை மீறிப் போலி ஆவணங்கள் மூலம் வெறும் 2 கோட... மேலும் பார்க்க