செய்திகள் :

போதைப்பொருள் கடத்தலில் சிக்கிய 2 ஆசிரியைகள் - QR Code மூலம் பணம் பெற்ற அதிர்ச்சி பின்னணி!

post image

கேரள மாநிலத்தில் போதைப்பொருட்களை தடுக்கும் நோக்கில் `ஆபரேஷன் தூஃபான்' திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆபரேஷன் தூஃபான் சோதனையில் இரண்டு வாரங்களுக்கு முன்பு ரிஸ்வான் என்பவரை எம்.டி.எம்.ஏ போதைப்பொருளுடன் வடகரை காவல்துறை கைது செய்தது. அவரிடம் நடத்திய விசாரணையில் போதைப்பொருள் விற்பனை நெட்வொர்க்கில் பெண் ஆசிரியைகள் இருப்பது தெரியவந்தது.

ரிஸ்வான் செய்து வந்த போதைப்பொருள் வியாபாரத்தின் பணம் இந்த ஆசிரியர்களின் வங்கிச் கணக்குகளுக்கு சென்று சேர்ந்துள்ளன. இதையடுத்து சர்வசிக்‌ஷா அப்யான் திட்டத்தில் ஸ்பெஷல் எஜுகேட்டராக பணியாற்றி வந்த கூராச்சுண்டு செறுகாடு பகுதியைச் சேர்ந்த கே.காவ்யா மற்றும் அவரது தோழியான மருதோங்கரையைச் சேர்ந்த ஆசிரியை கே.சி.கீர்த்தனா ஆகியோரை போலீஸார் கைதுசெய்தனர். கடந்த 11-ம் தேதி கீர்த்தனாவும், அதைத் தொடர்ந்து காவ்யாவும் கைது செய்யப்பட்டனர்.

​இவர்கள் இருவரின் வங்கிச் கணக்குகளையும் காவல்துறை தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது. இவர்களுடன் தொடர்புடையவர்களின் வங்கி விவரங்கள் மற்றும் மொபைல் எண்களும் பரிசோதிக்கப்பட்டுவருகின்றன. சிறையில் அடைக்கப்பட்டுள்ள இருவரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்த காவல்துறை திட்டமிட்டுள்ளது.

எம்.டி.எம்.ஏ

கோழிக்கோடு மாவட்ட சர்வ சிக்ஷா அபியான் அமைப்பின் கீழ் இயங்கும் பிளாக் ரிசோர்ஸ் சென்டர் கட்டுப்பாட்டில் உள்ள செறூவாளூர் அரசு எல்.பி. பள்ளிக்கு அருகில் உள்ள ஆட்டிசம் பள்ளியில் காவ்யா ஆசிரியராக இருந்தார். கீர்த்தனா வேறொரு பள்ளியில் பணியாற்றி வந்தார். வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே இவர்களுக்குப் பணி இருந்தது. ஆசிரியர் வேலையை பயன்படுத்தியே இவர்கள் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.​

எம்.டி.எம்.ஏ போதைப்பொருள் வியாபாரத்திற்காக கீர்த்தனா கியூ.ஆர் கோட் மூலமே பணத்தைப் பெற்று வந்துள்ளார். ஒரு பரிவர்த்தனைக்கு 2,000 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. பணம் கிடைத்தவுடனே, போதைப்பொருள் இருக்கும் இடத்தின் லொகேஷன் சம்பந்தப்பட்ட நபருக்கு அனுப்பப்படும். அந்த இடத்திற்குச் செல்பவர்களுக்கு வேறொரு நபர் போதைப்பொருளைக் கொடுப்பார்.

கைதுசெய்யப்பட்ட ஆசிரியைகள்

வங்கிக் கணக்கில் அதிகதொகை சேர்ந்தவுடன், கீர்த்தனா அந்தப் பணத்தைக் காவ்யாவின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பி விடுவார். காவ்யாவின் கணக்கிற்கு நேரடிப் பணப் பரிமாற்றங்களும் நடந்துள்ளதாகக் காவல்துறை கண்டறிந்துள்ளது. காவ்யா சமீபத்தில் விலை உயர்ந்த ஆடம்பரக் கார் ஒன்றை வாங்கியிருந்தார். இது குறித்துப் பள்ளியில் சக ஆசிரியர்கள் கேட்டபோது, வெளிநாட்டில் வேலை செய்யும் தனது சகோதரரின் கார் என்று பதிலளித்துள்ளார்.

கடந்த 2022-ம் ஆண்டு நடந்த கார் விபத்தில் காவ்யா பலத்த காயமடைந்தபோது, கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் அனைவரும் சேர்ந்து பணம் திரட்டியே அவரது மருத்துவச் சிகிச்சைக்கான செலவை கவனித்துக்கொண்டனர். ஆனால், இப்போது அவரிடம் அதிக அளவு பணம் புழங்குவதற்கு போதைப்பொருள் விற்பனையே காரணம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. போதைப்பொருள் விற்பனையில் ஆசிரியர்கள் கைதுசெய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவை: இந்து கடவுள் முருகனை இழிவுபடுத்தியதாக தவெக நிர்வாகி கைது – நடந்தது என்ன?

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த ராக்கிபாளையம் அன்னை இந்திரா நகரை சேர்ந்தவர் மைக்கேல் ராஜ் (31). இவர் அப்பகுதியில் உள்ள தொழிற்சாலையில் சிஎன்சி ஆப்ரேட்டராக பணியாற்றி வருகிறார். மேலும் இவர் ... மேலும் பார்க்க

கர்நாடகா: மான் வேட்டையில் ஈடுபட்டதாக மூவரைச் சுட்டுக்கொன்ற வனத்துறை; காவிரி சரணாலயத்தில் பயங்கரம்

கர்நாடக மாநிலம் காவிரி வனவிலங்கு சரணாலயத்தைச் சேர்ந்த வனத்துறையினர் இன்று அதிகாலை வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். ஹனூர் தாலுகாவிற்கு உட்பட்ட ஷாக்யா வனப்பகுக்குள் வேட்டை கும்பலைச் சேர்ந்த... மேலும் பார்க்க

அரிய வகை குரங்குடன் வீடியோ வெளியிட்ட விவகாரம்: விசாரணை வளையத்தில் விக்ரம்.. வெளியான அதிர்ச்சி தகவல்!

'லார் கிப்பன்' (Lar Gibbon) எனப்படும் அரியவகை மனித குரங்குடன் கொஞ்சி விளையாடும் வீடியோவை நடிகர் விக்ரம் கடந்த சில தினங்களுக்கு முன்பு சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தார். சர்ச்சையானதைத் தொடர்ந்து அந்த... மேலும் பார்க்க

பாலியல் கொடுமை செய்யப்பட்ட 4 வயது சிறுமி; இளைஞரை ஓட ஓட அரிவாளால் வெட்டிய பாட்டி - கரூர் அதிர்ச்சி!

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் கூலித் தொழிலாளியின் 4 வயது மகளை, 3 நாள்களுக்கு முன்பு குண்டாங்கல்பாறை, புத்தர் நகர்ப் பகுதியில் வசித்து வரும் தங்கராசு மகன் விஜய் (எ) மாண... மேலும் பார்க்க

புதுச்சேரி: `போலீஸே எனக்கு பயப்படுவாங்க!’- மாமூல் தர மறுத்த கடையில் பெட்ரோல் குண்டு வீசிய ரௌடி

புதுச்சேரி, வில்லியனூர் மார்க்கெட் வீதியில் பாபு மற்றும் அவரது சகோதரர் ராஜேந்திரன் இருவரும் இணைந்து பாபு டிரேடர்ஸ் என்ற பெயரில் அரிசிக்கடை நடத்தி வருகின்றனர். நேற்று மாலை சுமார் 6.30 மணியளவில் அங்கு ச... மேலும் பார்க்க

ஆட்டோ வாங்கி கொடுத்தும் `திருந்தாத’ குடிகாரக் கணவன் - சேர்ந்து வாழ மறுத்ததால் பெண் போலீஸ் கொலையா?

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகேயுள்ள எர்த்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீராம். இவரது மகள் தாமரைச்செல்வி (40). இவர், குடியாத்தம் நகரக் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வந்தார். இவரு... மேலும் பார்க்க