செய்திகள் :

போலீஸாரை கொலை செய்துவிட்டு தலைமறைவு வாழ்க்கை; காட்டிக்கொடுத்த போன்கால்: 27 ஆண்டுகளுக்கு பின் கைது

post image

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் 27 ஆண்டுகளுக்கு முன்பு வீடு ஒன்றில் நடந்த கொள்ளை முயற்சியில் இரண்டு போலீஸாரை கொள்ளையர்கள் கொலை செய்தனர். இக்கொள்ளை மற்றும் கொலையில் முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட புரா என்பவன் தொடர்ந்து தலைமறைவாக இருந்தான். அவனை போலீஸார் தேடி வந்தனர். ஆனால் அவன் கிடைக்கவில்லை. அவனை பற்றி தகவல் கொடுத்தால் 50 ஆயிரம் சன்மானம் கொடுக்கப்படும் என்று போலீஸார் அறிவித்தனர். புரா தனது குடும்பத்தினர் யாரையும் தொடர்பு கொள்ளவில்லை. இதனால் அவன் இறந்துவிட்டதாக முறைப்படி அறிவிக்கப்பட்டது.

ஆனாலும் போலீஸார் தொடர்ந்து தேடிக்கொண்டே இருந்தனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புராவின் கூட்டாளி ஒருவன் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டான். அவன் புராவின் மைத்துனரை சந்தித்து பேசி இருக்கிறான். அப்போது அவர்கள் மது அருந்தினர்.

மது அருந்தியபோது புராவுடன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தான் போனில் பேசியதாக சிறையில் இருந்து வெளியில் வந்த நபர் தெரிவித்தார். இந்த தகவல் போலீஸாருக்கு கிடைத்தது. உடனே போலீஸார் மீண்டும் தேடுதல் முயற்சியை தீவிரப்படுத்தினர். போலீஸ் உளவாளிகளும் இதில் பயன்படுத்தப்பட்டனர்.

இத்தேடுதலில் அவன் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் இருப்பது தெரிய வந்தது. உடனே அவனை போலீஸார் மத்திய பிரதேசம் சென்று மடக்கி பிடித்து கைது செய்தனர். அவனை கைது செய்தவுடன் தான் அவர்கள் தேடும் நபர் கிடையாது என்று தெரிவித்தான். ஆனால் அவனிடம் போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில் உண்மையை ஒப்புக்கொண்டான். அவனிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் அவன் கடந்த 27 ஆண்டுகளாக எப்படி வாழ்ந்தான் என்ற விபரம் தெரிய வந்தது. அவன் போலீஸாரை கொலை செய்துவிட்டு மத்திய பிரதேசம் சென்று சில ஆண்டுகள் கட்டிட தொழிலாளியாக பணியாற்றிவிட்டு பின்னர் போபால் சென்று லாரி டிரைவராக பணியாற்றியுள்ளான்.

அங்கு தனது பெயரை ஜமீல் என்று மாற்றிக்கொண்டு அங்கேயே ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்தான். அங்கு அவனுக்கு குழந்தைகளும் இருக்கின்றன. 27 ஆண்டுகளுக்கு பிறகு இறந்ததாக அறிவிக்கப்பட்ட கொலைக்குற்றவாளி ஒரு போன் அழைப்பால் போலீஸாரிடம் சிக்கிக்கொண்டான்.

கூடங்குள அணுமின் நிலைய சைபர் தாக்குதல் : அபாயப் பின்னணிகள் – அளிக்கும் பாடங்கள்!

நிகழ்ந்தது தரவுத்திருட்டு மற்றும் ஆவணக் கசிவு (மட்டுமே)கூடங்குளம் அணு மின் நிலையத்தின் மீது சமீபத்தில் சைபர் தாக்குதல் நடைபெற்ற தகவல் வெளியானது.(சைபர் தாக்குதல் என்பதை கணினி அமைப்புகள், தகவல் தொடர்பு ... மேலும் பார்க்க

சேலம்: மூக்குத்தி, கம்மலுக்காக வீடுபுகுந்து தம்பதி அடித்துக் கொலை - அச்சத்தில் மக்கள்

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகில் உள்ள ராமப்ப கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஜெயராமன் - அமராவதி தம்பதி. மூத்த குடிமக்களான‌ இருவரும் தென்னை மட்டை பின்னும் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர். இவர்களுக்கு இரவு ... மேலும் பார்க்க

மார்கண்டேயனை படம் பிடிக்கச் சென்ற பத்திரிகையாளர்கள் - நாக்கை துருத்தி மிரட்டல் விடுத்த ஏடிஎஸ்பி!

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நடந்த தி.மு.க பொதுக்கூட்டத்தில் விளாத்திகுளம் தொகுதியின் தி.மு.க எம்.எல்.ஏ மார்கண்டேயன், “எலும்பை உடைத்து விடுவேன்” என முதல்வர் விஜய்யை பார்த்து கொலை மிரட்டல் வி... மேலும் பார்க்க

திருப்பத்தூர்: ரூ.50 லட்சம் செம்மரக்கட்டைகள் திருட்டு - வனத்துறை குடோனில் மர்ம நபர்கள் கைவரிசை!

திருப்பத்தூர் வனக்கோட்டத்துக்குச் சொந்தமான சந்தன மற்றும் செம்மரக் கட்டைகள் விற்பனைக் கிடங்கு, திருப்பத்தூர் அரசு தலைமை மருத்துவமனை எதிரே உள்ளது. இங்கு ஜவ்வாது மலையில் விளையும் உயர்தர சந்தன மரங்கள் மற்... மேலும் பார்க்க

கேரள மருத்துவ மாணவர் நிதின்ராஜ் தற்கொலை வழக்கு; 3 மாதங்களுக்குப்பின் HOD கைது - நடந்தது என்ன?

கேரள மாநிலம் கண்ணூர் அஞ்சரகண்டி தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.டி.எஸ் மாணவர் நிதின் ராஜ் கடந்த 10.04.2026 அன்று கல்லூரி விடுதி கட்டடத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். ... மேலும் பார்க்க

தருமபுரி : 'அவனைக் காண நானும் செல்கிறேன்' - பிளஸ் டூ மாணவி எடுத்த விபரீத முடிவு

பள்ளியில் தன்னுடன் படித்த காதலன் தற்கொலை செய்துகொண்டதால் அதன் துயரம் தாங்காமல் மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பாலக்கோடு பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைதருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே... மேலும் பார்க்க