செய்திகள் :

மகாராஷ்டிரா: ரீல்ஸ் மோகம்... குளத்தில் மூழ்கி இரண்டு சிறுமிகள் உட்பட 4 மைனர் சிறார்கள் உயிரிழப்பு

post image

மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி மாவட்டத்தில் உள்ள கோலாப்புரி பகுதியை சேர்ந்த இளம்பெண்கள் மற்றும் வாலிபர்கள் அருகில் இருக்கும் தத்கேதா பகுதியில் இருக்கும் குளத்திற்கு சென்றனர். அவர்கள் விடுமுறையை மகிழ்ச்சியாக கொண்டாட அங்கு சென்றனர். சாப்பாடு எடுத்துச்சென்று அங்கேயே சாப்பிட்டனர். அதன் பிறகு ஒரு சிறுமி ரீல்ஸ் எடுப்பதற்காக குளத்தில் இறங்கினான். ஏரியின் ஆழம் தெரியாமல் உள்ளே இறங்கியபோது எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டாள். இதனால் அவன் தண்ணீரில் மூழ்க ஆரம்பித்தாள். உடனே அவனை காப்பாற்ற பாயல் என்ற பெண் ஏரிக்குள் இறங்கினார்.

சிறார்கள் இறந்த குளம்

ஆனால் அவரும் சேர்ந்து நீரில் மூழ்க ஆரம்பித்தனர். இதனால் கரையில் இருந்த மேலும் இரண்டு பேர் தண்ணீருக்குள் இறங்கி உயிருக்கு போராடிக்கொண்டிருந்தவர்களை காப்பாற்ற முயன்றனர். ஆனால் துரதிஷ்டவசமாக அவர்கள் நான்கு பேரும் நீரில் மூழ்கி இறந்துபோனார்கள். இது குறித்து கேள்விப்பட்டதும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து அவர்களது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஒரே நேரத்தில் மூன்று குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்து இருப்பது அவர்களது கிராமத்தில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இறந்தவர்களில் இரண்டு பேர் சகோதரன், சகோதரிகள் ஆவர்.

இறந்தவர்கள் பெயர் முறையே சோனாலி(16), ஆதித்யா(12), பாயல்(14), கஜானன்(13) என்று தெரிய வந்துள்ளது. விசாரணையில் முதலில் சோனாலிதான் தண்ணீருக்குள் இறங்கி ரீல்ஸ் எடுக்க முயன்றதாக தெரிய வந்தது. அவளை அவளது சகோதரனும், பாயலும் சேர்ந்து காப்பாற்ற சென்றுள்ளனர். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை-புனே நெடுஞ்சாலையில் கார் விபத்து; சரத்பவார் மகள் சுப்ரியாவைக் காப்பாற்றிய சீட்பெல்ட்

முன்னாள் மத்திய அமைச்சர் மகளும், பாராமதி தொகுதி எம்.பி.யுமான சுப்ரியா சுலே புனேயில் இருந்து மும்பைக்கு காரில் வந்து கொண்டிருந்தார். புனே-மும்பை நெடுஞ்சாலையில் கார் வந்து கொண்டிருந்தபோது அதே வழித்தடத்த... மேலும் பார்க்க

டெல்லி: 4 மாடி குடியிருப்பில் தீ விபத்து; 9 பேர் பலி; 5 பேரைக் காணவில்லை; ஏ.சி வெடித்ததுதான் காரணமா?

டெல்லியில் மக்கள் நெருக்கடி அதிகமுள்ள விவேக் விகார் பகுதியில், இன்று அதிகாலை 4 மணிக்கு நான்கு மாடிகள் கொண்ட குடியிருப்புக் கட்டிடத்தில் திடீரெனத் தீப்பிடித்துக்கொண்டது. கட்டிடத்தின் 2வது மாடியில் பற்ற... மேலும் பார்க்க

ஆரஞ்சு அலர்ட் மீறல்; 'நோ' ஜாக்கெட் - மத்திய பிரதேச க்ரூஸ் விபத்து காரணங்கள்; 5 தமிழர்கள் உயிரிழப்பு

நேற்று முன்தினம் (ஏப்ரல் 30), மத்திய பிரதேசம் பர்கி அணையில் க்ரூஸ் விபத்து ஒன்று நடந்தது. அது இரவு 6 - 6.30 மணியளவில் நடந்துள்ளது. இந்த விபத்திற்கு காரணம் என்ன? க்ரூஸ் விபத்து கமாரியா தீவிற்கு அருகே ந... மேலும் பார்க்க

மத்தியப் பிரதேச படகு விபத்து: தாய்-மகன் ஒரே Life Jacket அணிந்து தப்பிக்க முயன்று உயிரிழந்த பரிதாபம்

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் அருகில் நர்மதா ஆற்றில் சொகுசு படகில் சுற்றுலாப் பயணிகள் சுற்றிப்பார்க்கச் சென்றனர். படகு ஆற்றின் நடுவில் சென்று கொண்டிருந்தபோது திடீரென பலத்த புயல் காற்று வீசியது. இதன... மேலும் பார்க்க

டெல்லியிலிருந்து கிளம்பிய ஸ்விட்சர்லாந்து விமானம்; இன்ஜினில் தீ பிடித்து விபத்து: 6 பயணிகள் காயம்!

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் சூரிச் நகருக்கு Flight No. LX147 என்ற விமானம் புறப்படத்தயாராக இருந்தது. விமானத்தில் 223 பயணிகள் இருந்தனர். இன்று அதிகாலை விமானம் புறப்பட்டபோது அதன் ஒரு ... மேலும் பார்க்க

கேரளம்: திருச்சூர் பூரத்துக்கு தயாரித்த பட்டாசு வெடித்து விபத்து; 13 பேர் பலி, 5 பேர் கவலைக்கிடம்!

கேரள மாநிலம் திருச்சூரில் நடைபெறும் திருச்சூர் பூரம் எனப்படும் விழா மிகவும் பிரசித்திபெற்றதாகும். திருச்சூர் பூரத்தின்போது பட்டாசுகள் போட்டிப்போட்டுக்கொண்டு வெடிக்கப்படுவது மிகவும் பிரமாண்டமான நிகழ்வா... மேலும் பார்க்க