செய்திகள் :

மத்தியப் பிரதேச படகு விபத்து: தாய்-மகன் ஒரே Life Jacket அணிந்து தப்பிக்க முயன்று உயிரிழந்த பரிதாபம்

post image

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் அருகில் நர்மதா ஆற்றில் சொகுசு படகில் சுற்றுலாப் பயணிகள் சுற்றிப்பார்க்கச் சென்றனர். படகு ஆற்றின் நடுவில் சென்று கொண்டிருந்தபோது திடீரென பலத்த புயல் காற்று வீசியது. இதனால் படகு மிகவும் ஆட்டம் காண ஆரம்பித்தது. படகு கடுமையான நிலை தடுமாறியதால் உள்ளே தண்ணீர் சென்றது.

பயணிகள் அதிர்ச்சியில் உதவி கேட்டு கத்த ஆரம்பித்தனர். சிறிது நேரத்தில் படகில் தண்ணீர் அதிகரித்து படகு கவிழ்ந்தது. படகில் இருந்த லைஃப் ஜாக்கெட் அணிந்து சிலர் தப்பிக்க முயன்றனர்.

அவர்களை உள்ளூர் மக்கள் கயிறு கட்டி வெளியில் கொண்டு வர முயன்றனர். ஆனால் அனைத்து பயணிகளுக்கும் லைஃப் ஜாக்கெட் கொடுக்கப்படவில்லை. படகில் மொத்தம் 30 பேர் இருந்தனர்.

மத்தியப் பிரதேச படகு விபத்து
மத்தியப் பிரதேச படகு விபத்து

விபத்து குறித்து கேள்விப்பட்டதும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். அதிகமானோர் தண்ணீரில் பல மணி நேரம் உயிருக்குப் போராடியபடி தத்தளித்துக்கொண்டிருந்தனர். அவர்களில் ஒன்பது பேர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.

டெல்லியில் இருந்து நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பம் சுற்றுலாவிற்கு வந்திருந்தனர். அவர்களில் தாய் மற்றும் நான்கு வயது மகன் ஆகியோருக்கு ஒரு லைஃப் ஜாக்கெட் மட்டும் கொடுக்கப்பட்டு இருந்தது. அவர்கள் ஒரே ஜாக்கெட்டை அணிந்து கொண்டு தண்ணீரில் உயிர் பிழைக்க முயன்றனர்.

ஆனால் துரதிஷ்டவசமாக இரண்டு பேரும் உயிரிழந்தனர். அப்பெண்ணின் கணவர் மற்றும் மகள் தண்ணீரில் நீந்தி கரைக்கு வந்தனர். 4 வயது சிறுவன் தனது தாயாரைக் கட்டிப்பிடித்தபடி உயிரிழந்து கிடந்தான்.

மீட்புப் பணிகளை மாநில அமைச்சர் ராகேஷ் சிங் நேரில் பார்வையிட்டார். உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கதறி அழுததைப் பார்த்த அமைச்சர் ராகேஷ் சிங் தனது கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாமல் இருந்தார்.

இந்த விபத்தில் உயிர் தப்பிய உசேன் என்பவர் இது குறித்து கூறுகையில், ''நான் அதிர்ஷ்டவமாகத்தான் உயிர் தப்பினேன். உயிர் பிழைக்கப் போராடியபோது என் தலை மட்டும் தண்ணீருக்கு மேல் இருந்ததால் என்னால் சுவாசிக்க முடிந்தது. ஆனால் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் நான் உயிருக்குப் போராடினேன்.

உடல்கள் என் கண் முன்பு என்னைக் கடந்து செல்வதை என்னால் காண முடிந்தது. அதிர்ஷ்டவசமாக, மீட்புக் குழுவினர் என்னைக் கண்டுபிடித்தார்கள், நான் காப்பாற்றப்பட்டேன்'' என்றார். உயிரிழந்தவர்களில் 5 பேர் குழந்தைகள் ஆவர்.

டெல்லியிலிருந்து கிளம்பிய ஸ்விட்சர்லாந்து விமானம்; இன்ஜினில் தீ பிடித்து விபத்து: 6 பயணிகள் காயம்!

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் சூரிச் நகருக்கு Flight No. LX147 என்ற விமானம் புறப்படத்தயாராக இருந்தது. விமானத்தில் 223 பயணிகள் இருந்தனர். இன்று அதிகாலை விமானம் புறப்பட்டபோது அதன் ஒரு ... மேலும் பார்க்க

கேரளம்: திருச்சூர் பூரத்துக்கு தயாரித்த பட்டாசு வெடித்து விபத்து; 13 பேர் பலி, 5 பேர் கவலைக்கிடம்!

கேரள மாநிலம் திருச்சூரில் நடைபெறும் திருச்சூர் பூரம் எனப்படும் விழா மிகவும் பிரசித்திபெற்றதாகும். திருச்சூர் பூரத்தின்போது பட்டாசுகள் போட்டிப்போட்டுக்கொண்டு வெடிக்கப்படுவது மிகவும் பிரமாண்டமான நிகழ்வா... மேலும் பார்க்க

திறப்பு விழா நேரத்தில் விபரீதம்: ராஜஸ்தான் பெட்ரோகெமிக்கல் வளாகத்தில் தீ - பிரதமர் மோடி வருகை ரத்து!

ராஜஸ்தான் மாநிலம், பலோத்ராவில் உள்ள பச் பத்ரா (Pachpadra) சுத்திகரிப்பு நிலையத்தை பிரதமர் மோடி நாளை (செவ்வாய்க்கிழமை) திறந்து வைக்கவிருந்த நிலையில், இன்று அங்கு ஏற்பட்ட பயங்கர தீ விபத்து காரணமாகத் திற... மேலும் பார்க்க

ஜம்மு காஷ்மீரில் கோர விபத்து: மலைப்பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து 15-க்கும் மேற்பட்டோர் பலி!

ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் இன்று ஒரு பயணிகள் பேருந்து மலையிலிருந்து உருண்டு விழுந்ததில் குறைந்தது 20 பேர் உயிரிழந்ததாகவும், 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்திருக்... மேலும் பார்க்க

ரீல்ஸ் வீடியோவுக்காக கையில் துப்பாக்கியுடன் ஒரே பைக்கில் பயணம்; விபத்தில் சிக்கி 3 சகோதரர்கள் பலி

மத்திய பிரதேச மாநிலம் மௌகஞ்ச் மாவட்டத்தில் 3 சகோதரர்கள் ஒரே பைக்கில் அமர்ந்து கொண்டு சென்றனர். அவர்களில் ஒருவரிடம் துப்பாக்கி இருந்தது. அவர்கள் முன்னால் செல்ல பின்னால் இருந்து மற்றொரு பைக்கில் அவர்களை... மேலும் பார்க்க

விருதுநகர்: பட்டாசு ஆலையில் வெடி விபத்து – 23 பேர் பலி, 6 பேர் காயம்!

விருதுநகரில் தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தால் 23 பேர் உயிரிழந்துள்ளனர். 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்பதால் அங்கு பதற்றநிலை நிலவுகிறது. ... மேலும் பார்க்க