செய்திகள் :

மக்களவையில் நிறைவேறிய தேர்வுகள் முறைகேடு தடுப்பு திருத்த மசோதா 2026 - விவரம் என்ன?

post image

நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த 'பொதுத் தேர்வுகள் (முறைகேடு தடுப்பு) திருத்த மசோதா 2026', மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறப்பட்டது.

பொதுத் தேர்வுகளில் நடக்கும் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளைத் தடுக்க மத்திய அரசு 'பொதுத் தேர்வுகள் (முறைகேடுகளைத் தடுக்கும்) திருத்த மசோதா, 2026'-ஐ நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது.

இந்த மசோதா மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் காரசாரமாக நடைபெற்றது. இந்நிலையில் குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த மசோதா தற்போது நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

சட்டத் திருத்தத்தின்படி, வினாத்தாள் கசிவு அல்லது தேர்வு முறைகேடுகளில் ஈடுபடும் தனிநபர்களுக்கு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையுடன் ரூ.50 லட்சம் வரை அபராதமும், முறைகேடு கும்பலால் திட்டமிட்டு அரங்கேற்றப்படும் குற்றங்களுக்கு குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையுடன் ரூ.10 கோடி வரை அபராதமும் விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது.

வழக்கு விசாரணையை விரைந்து முடிப்பதற்காக விரைவு நீதிமன்றங்கள் அமைப்பது உள்ளிட்ட அம்சங்களும் இந்த 'பொதுத் தேர்வுகள் (முறைகேடு தடுப்பு) திருத்த மசோதா 2026'-வில் இடம்பெற்றுள்ளன.

மதுரை: `எந்த layout வந்தாலும் என்னிடம் அப்ரூவல் வாங்கிய பிறகே அனுமதி'- எம்எல்ஏ கார்த்திகேயன்

மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆலத்தூர் ஊராட்சியில் சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் த.வெ.க சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் கலந்துகொண்டு பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: 88 மணி நேர தாக்குதலின் ரகசியங்களை முதன்முறையாக உடைத்த அஜித் தோவல்!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா நடத்திய 88 மணி நேர ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கை குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) அஜித் தோவல் முதன்முறையாக விரிவாக பேசியிருக்கிறார். ... மேலும் பார்க்க

சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்கள்: ``தமிழ்நாடு அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும்" - சிபிஎம் சண்முகம்

கர்​நாடக மாநிலம், சாம்​ராஜநகர் மாவட்​டத்​தில் உள்ள ஹனூர் அரு​கில், காவிரி வனவிலங்கு சரணால​யத்​துக்கு உட்​பட்ட ஷாக்யா வனப்​பகுதி உள்​ளது. நேற்று அதி​காலை 5 மணி​யள​வில் தோமை​யார்​பாளை​யத்தை ஒட்​டி​யுள்ள... மேலும் பார்க்க

அமுதன் கொலை: ``பெற்றோரின் புகாரைப் பெற மறுத்த குற்றச்சாட்டில் உண்மையில்லை" - அமைச்சர் சம்பத் குமார்

கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர்-பொள்ளாச்சி சாலையில் உள்ள பிரபல கல்வி நிறுவனத்தில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த மாணவர் அமுதன் தனது நண்பருடன் நடந்துச் சென்றுகொண்டிருந்தபோது அவர்களை வழிமறித்து சக மா... மேலும் பார்க்க

அமுதன் கொலை: ``இதற்கு பிறகும் வாயைத் திறக்காமல் மயக்கத்தில் இருக்குறீர்களே CM sir?"- அப்பாவு காட்டம்

கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர்-பொள்ளாச்சி சாலையில் உள்ள பிரபல கல்வி நிறுவனத்தில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த மாணவர் அமுதன் தனது நண்பருடன் நடந்துச் சென்றுகொண்டிருந்தபோது அவர்களை வழிமறித்து சக மா... மேலும் பார்க்க