செய்திகள் :

மசினகுடி: 11 நாளில் 3 பெண் யானைகள்; எல்-நினோ தாக்கத்தால் வறட்சியில் அடுத்தடுத்து மடியும் பேருயிர்

post image

எல்-நினோ தாக்கம் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் நடப்பாண்டுக்கான தென்மேற்கு பருவமழை பொய்த்திருக்கிறது. சமவெளி பகுதிகளுக்கு இணையாக ஊட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதுடன் வறட்சியின் தாக்கமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நீர்நிலைகள் வறண்டு வரும் நிலையில் குடிநீர்,

உயிரிழந்த பெண் யானை

வேளாண்மை போன்றவற்றிற்கான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. அதேவேளையில் வனங்களில் உள்ள நீரோடைகளும் வறண்டு வருவதால் வனவிலங்குகள் தண்ணீர் தேடி இடம்பெயரும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக யானைகள் தண்ணீரின்றி தவித்து வருகின்றன. முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதிகளிலும் கடுமையான வறட்சி நிலவி வருவதால், கடந்த 11 நாள்களில் 3 யானைகள் உயிரிழந்துள்ளன.

இது குறித்து பேசும் வனத்துறை அதிகாரிகள், " மசினகுடி வனச்சரகத்திற்கு உட்பட்ட குதிரை பாறை பகுதியில் பெண் யானை ஒன்று இறந்துக்கிடந்ததை நேற்று கண்டறியப்பட்டது. அதேபோல் மாவனல்லா அருகில் உள்ள அரலட்டிகோட்டை வனப்பகுதியில் மற்றொரு பெண் யானை இறந்து கிடப்பதை இன்று கண்டறிந்துள்ளோம். கடந்த 8- ம் தேதியும் ஒரு பெண்‌ யானை இறந்தது குறிப்பிடத்தக்கது. வறட்சி காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கிறோம்‌. உடற்கூறாய்வு முடிவுகள் அடிப்படையில் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம்" என்றனர்.

உயிரிழந்த பெண் யானை

இது குறித்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயல்பாட்டாளர்கள், " மழைப்பொழிவின்மை, கடும் வெயில் காரணமாக சீகூர், ஆனைக்கட்டி ஆறுகள் வறண்டுள்ளன. யானைகள் தண்ணீர் கிடைக்காமல் உயிரிழந்து வருகின்றன. அதிக தண்ணீர் தேவைப்படும் உயிரினமான யானைகளைப் பாதுகாக்கும் வகையில் வனப்பகுதிகளில் உள்ள தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணியை வனத்துறை உடனடியாக முன்னெடுக்க வேண்டும்" என்றனர்.

கொசஸ்தலையாற்றில் கொத்துக்கொத்தாக செத்து மிதந்த மீன்கள் — எண்ணூர் பகுதியில் வெப்ப மாசு அச்சம்

சென்னை எண்ணூர் அருகே கொசஸ்தலையாறு மற்றும் எண்ணூர் முகத்துவாரப் பகுதியில் ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் டன் கணக்கில் மீன்கள் மற்றும் பிற நீர்வாழ் உயிரினங்கள் செத்து கரை ஒதுங்கி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்ப... மேலும் பார்க்க

`10 லட்சம் விதைப்பந்துகள் இலக்கு’ - வேலூர் மலைகளைப் பசுமையாக்க ஆர்வம் காட்டும் மென்பொருள் பொறியாளர்

வேலூர் சத்துவாச்சாரி அருகேயுள்ள ரங்காபுரத்தில் வசித்து வருபவர் தினேஷ் சரவணன். மென்பொருள் பொறியாளரான இவர்... கோடைக்காலத்தில் பறவைகளின் தாகம் தணிக்கத் தனித்துவமான ஏற்பாடு செய்தல், ஏரிக்கரைகளில் பனை விதை... மேலும் பார்க்க

கோவை அருகே ரயில் மோதி காட்டு யானைகள் உயிரிழப்பு – யானைகள் தினத்தில் நடந்த சோகம்!

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு – கேரளம் எல்லைப்பகுதியான வாளையார் வனப்பகுதி வழியாக கேரளத்திற்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கேரள மாநிலத்திற்கு உட்பட்ட பகுதியில் 4 யானைகள் கொண்ட ஒரு யானை... மேலும் பார்க்க

புனித நீராட வந்த பக்தர்கள் ஏமாற்றம்... அமலைச் செடிகளால் ஆக்கிரமிக்கப்பட்ட பழநி சண்முகநதி!

பழநி சண்முகநதிபழநி சண்முகநதிபழநி சண்முகநதிபழநி சண்முகநதிபழநி சண்முகநதிபழநி சண்முகநதிபழநி சண்முகநதி மேலும் பார்க்க

ஒரு மனிதன், ஒரு லட்சம் மரங்கள் - விவேக் விதைத்த கனவை நனவாக்கும் விழுப்புரம் சசி ராஜா

ஒரு நாட்டின் உண்மையான செல்வம் என்பது பணமும் கட்டடங்களும் அல்ல; நம்மைச் சுற்றியுள்ள பசுமையும், நாம் சுவாசிக்கும் சுத்தமான காற்றும்தான். ஆனால், நவீன நாகரிகத்தின் வளர்ச்சி என்ற பெயரில் நாம் நாள்தோறும் வெ... மேலும் பார்க்க

Elephant Day: வாழிடமும், வழித்தடமும் பாதுகாக்கப்பட்டால் மட்டுமே இந்தப் பேருயிர்களைக் காக்க முடியும்!

சம காலத்தில் நிலத்தில் வாழ்ந்து வரும் மிகப்பெரிய உயிரினமான யானைகள் அழிந்து வரும் பட்டியலில் உள்ளன. சூழலியல் பாதுகாப்பில் அளப்பரிய பங்காற்றி வரும் யானை இனத்தைப் பாதுகாக்க உலக அளவில் பல்வேறு முயற்சிகளை ... மேலும் பார்க்க