செய்திகள் :

மசூதி அருகே ஆக்கிரமிப்பு அகற்றம்: போராட்டம், கல்வீச்சில் ஈடுபட்ட மக்கள் - டெல்லியில் நிலவிய பதற்றம்!

post image

டெல்லி ராம்லீலா மைதானத்திற்கு அருகில் உள்ள சையத் ஃபைஸ் எலாஹி மசூதிக்கு அருகில் உள்ள நிலத்தில் ஏராளமான ஆக்கிரமிப்புகள் இருந்தது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இதையடுத்து இன்று காலை மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் போலீஸார் என 300 பேர் வந்து ஆக்கிரமிப்புகளை இடிக்கும் பணிகளில் ஈடுபட்டனர். மசூதிக்கு வரும் சாலைகள் தடுப்புகள் மூலம் அடைக்கப்பட்டன. ஏராளமான பொதுமக்கள் மசூதிக்கு வெளியில் கூடி நின்று இடிப்புக்கு எதிராக கோஷமிட்டனர். ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் போராட்டம் மற்றும் கல்வீச்சுத் தாக்குதலில் ஈடுபட்டனர்.

இதனால் போலீஸார் கூட்டக்த்தை கலைக்க கல்வீச்சுத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர். பொதுமக்கள் தடுப்பை உடைத்துக்கொண்டு இடிக்கும் பகுதிக்குச் செல்ல முயன்றனர். அவர்கள்மீது போலீஸார் லேசாகத் தடியடி நடத்தினர். பொதுமக்கள் நடத்திய கல்வீச்சுத் தாக்குதலில் சில போலீஸார் காயமடைந்தனர். சட்டவிரோதமாக ஹால் ஒன்றும், மருத்துவமனை ஒன்றும் கட்டப்பட்டு இருந்தது. அவை இரண்டும் இடிக்கப்பட்டன.

பாதுகாப்புப் பணியில் போலீஸார்

கல்வீச்சுத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸார் தெரிவித்தனர். தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், கல்வீச்சுத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், கண்காணிப்பு கேமரா பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

ஒரே நேரத்தில் 30 புல்டோசர்கள் கொண்டு வரப்பட்டு சட்டவிரோதக் கட்டுமானங்கள் இடித்துத் தள்ளப்பட்டன. கடந்த நவம்பர் மாதம் டெல்லி உயர் நீதிமன்றம் ராம்லீலா மைதானம் அருகில் இருக்கும் சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்ற டெல்லி மாநகராட்சிக்கு மூன்று மாதங்கள் அவகாசம் கொடுத்து இருந்தது. அதனடிப்படையில் டெல்லி மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கோவை கல்லூரி மாணவி மீது கத்தியால் குத்தி தாக்குதல் - சக மாணவன் வெறிச் செயல்

கோவை சத்தி உள்ள தனியார் பொறியியல் கல்லூரி இயங்கி வருகிறது. அங்கு 17 வயது மாணவி ஒருவர் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். அதே வகுப்பில் ஹர்ஷவர்தன் என்கிற 18 வயது மாணவர் படித்து வருகிறார். ஹர்ஷவர்தன் மாணவ... மேலும் பார்க்க

குஜராத்: 33 கிராமங்களுக்காக ரூ.21 கோடிக்கு கட்டிய தண்ணீர் தொட்டி- திறக்கப்படுவதற்கு முன்பே இடிந்தது!

குஜராத் மாநிலம் சூரத் அருகில் உள்ள தட்கேஷ்வர் என்ற கிராமத்தில் மாநில அரசு, 33 கிராமங்களுக்கு தண்ணீர் சப்ளை செய்வதற்காக ரூ.21 கோடியில் 9 லட்சம் லிட்டர் தண்ணீரை சேமிக்கும் வகையில் 15 மீட்டரில் பிரம்மாண்... மேலும் பார்க்க

நெல்லை: சாலையில் தூக்கி வீசப்பட்ட ஆண் சிசுவின் சடலம்; நாய் கவ்விச் சென்ற அவலம்; பின்னணி என்ன?

நெல்லை, மேலப்பாளையம் அருகில் உள்ளது மேலநத்தம். இங்கு பழைய அரிசி ஆலை ஒன்று உள்ளது. இந்த ஆலைக்குச் செல்லும் சாலையின் ஓரத்தில் தெருநாய் ஒன்று சிவப்பு நிறத் துணி சுற்றப்பட்ட ஒரு பார்சலை கவ்விச் சென்று வாய... மேலும் பார்க்க

`பொண்டாட்டினு கூட பார்க்காம அசிங்கமா வீடியோ எடுத்து.!’ அதிர வைக்கும் வரதட்சனை புகார்; விபரீத முடிவு

விழுப்புரம் மாவட்டம் பக்கிரிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த எம்.ஏ பட்டதாரியான பிரியங்காவுக்கும், புதுச்சேரி பிள்ளையார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த கார்த்திகேயனுக்கும் கடந்த 2025 அக்டோபர் 31-ம் தேதி திரும... மேலும் பார்க்க

தூத்துக்குடி: திருமணம் மீறிய உறவுக்கு இடையூறு; 4 வயது பெண் குழந்தையை வன்கொடுமை செய்து கொன்ற கொடூரன்

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோயில் இருளப்பபுரத்தைச் சேர்ந்தவர் சத்யா . இவருக்கும் ராஜா என்பவருக்கும் திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. ராஜா இறந்து விட்டதால், தற்போது அந்தக்குழந்தை ராஜாவின் தாயிடம் வ... மேலும் பார்க்க

பொங்கல் பரிசுத் தொகை: முதியவர்களைக் குறிவைத்து ரூ. 500ஐ அமுக்கிய ரேஷன்கடை ஊழியர்; அதிகாரிகள் விசாரணை

தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசாக குடும்ப அட்டைக்கு ரூ.3000 மற்றும் ஒரு கரும்பு, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சீனி மற்றும் வேட்டி, சேலை அறிவித்தது. இந்தப் பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப... மேலும் பார்க்க