What To Watch: 'என்ன விலை', 'மொத ராத்திரி', 'சண்டைக்காரி' - இந்த வாரம் ரிலீஸ்கள்...
'மஞ்சள் முதல் பழங்கள் வரை; இயற்கையில் மலர்ந்த விநாயகர்!' - 'Vikatan Organic Vinayagar Contest 2026'
விநாயகர் சதுர்த்தி என்றாலே விநாயகரை விதவிதமாக அலங்கரிப்பது வழக்கம். ஆனால், இயற்கையில் கிடைக்கும் பொருள்களையே விநாயகராக மாற்றினால்? இந்தக் கேள்விக்கான அழகான பதிலாக அமைந்தது, விகடன் நடத்திய 'Organic Vinayagar Contest 2026'!
தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக, செப்டம்பர் 11 முதல் 14 வரை நடைபெற்ற இந்த டிஜிட்டல் போட்டிக்கு கிடைத்த வரவேற்பு உண்மையிலேயே பிரமிக்க வைத்தது. இந்தியா முழுவதிலிருந்தும் 300-க்கும் மேற்பட்ட பதிவுகள் வந்து குவிந்ததோடு, எல்லைகளைக் கடந்து கனடாவிலிருந்தும் ஒரு பதிவு வந்தது.
இந்தப் போட்டியின் ஹைலைட்டே பங்கேற்பாளர்களின் கற்பனைதான்!
பரிசுக்குத் தேர்வான ஐந்து படங்கள்





மஞ்சள், பூக்கள், இலைகள், பருப்பு வகைகள், அரிசி மாவு, கோதுமை மாவு, களிமண், வெல்லம் என இயற்கைப் பொருள்கள் ஒவ்வொன்றும் விநாயகர் உருவம் பெற்றன. அதிலும், பழங்களைச் செதுக்கி உருவாக்கப்பட்ட விநாயகர்கள் பார்த்தவர்களை வியக்க வைத்தன.
"இதையும் வைத்து விநாயகர் செய்ய முடியுமா?" என்று ஆச்சரியப்பட வைக்கும் அளவுக்கு ஒவ்வொரு படைப்பிலும் புதுமை! குறிப்பாக, குழந்தைகள் காட்டிய உற்சாகமும் கற்பனைத்திறனும் இந்தப் போட்டிக்கு தனி அழகு சேர்த்தன. வீட்டில் கிடைத்த பொருள்களை வைத்தே தங்களுடைய கற்பனையில் விநாயகரை உருவாக்கிய குட்டீஸின் படைப்புகள், கலைக்கு வயது ஒரு தடையல்ல என்பதை அழகாகச் சொல்லின.
ஒருபுறம் பக்தி மற்றும் பாரம்பர்யம்... மறுபுறம் படைப்பாற்றல் மற்றும் சுற்றுச்சூழல் அக்கறை... இவை நான்கையும் ஒன்றாக இணைத்ததுதான் இந்த Organic Vinayagar Contest-ன் தனிச்சிறப்பு.
டிஜிட்டல் தளத்தில் நடைபெற்றாலும், அதன் வரவேற்பு நாடு கடந்து சென்றது. 300+ பதிவுகள் என்பது வெறும் எண்ணிக்கை அல்ல; இயற்கையோடு இணைந்து பண்டிகையைக் கொண்டாட வேண்டும் என்ற மக்களின் ஆர்வத்துக்கான சாட்சி!
போட்டியில் கலந்துகொண்டு கருத்தை கவர்ந்த விநாயகர் படங்கள்


















































இந்தப் படைப்பாற்றல் கொண்டாட்டத்தை மேலும் சிறப்பிக்கும் வகையில் RMKV பரிசு ஸ்பான்சராக இணைந்திருந்தது. மண்ணிலிருந்து மஞ்சள் வரை... பூக்களிலிருந்து பழங்கள் வரை... இயற்கை தந்த ஒவ்வொரு பொருளிலும் விநாயகரைக் கண்ட இந்தப் போட்டி, கொண்டாட்டத்துக்கு ஒரு புது அர்த்தத்தையே தந்திருக்கிறது!















