செய்திகள் :

`மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி' - உதயமானது தவெக தலைமையிலான புதிய கூட்டணி!

post image

இன்று (செப்டம்பர் 9) பனையூரில் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியது.

இந்தக் கூட்டத்திற்கான அழைப்பு தவெக ஆட்சி அமைக்க ஆதரவளித்த கட்சிகளுக்கு விடுக்கப்பட்டது. அவை - காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக்.

வைகோ, விஜய்
வைகோ, விஜய்

தவெக, மதிமுக

வைகோவின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் கடந்த சட்டமன்றத் தேர்தலில் உதய சூரியனில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்ததால், தவெக ஆட்சி அமைக்க ஆதரவு வழங்க முடியாத நிலை.

ஆனால், தற்போது வைகோ திமுகக் கூட்டணியில் இருந்து விலகித் தவெகக் கூட்டணியில் இணைந்துவிட்டார். இதனால், மதிமுகவிற்கும் இந்தக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

கம்யூனிஸ்ட் நிலைப்பாடு

ஆரம்பத்திலிருந்தே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ‘ஆட்சி அமைக்க மட்டுமே ஆதரவு, கூட்டணி இல்லை’ என்பதில் தெளிவாக உள்ளது.

இதையொட்டி, இந்த இரு கட்சிகளும் இன்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.

இதனால், இந்த இரு கட்சிகளைத் தவிர்த்து, அழைப்பு விடுக்கப்பட்ட மற்ற அனைத்துக் கட்சிகளும் கலந்துகொண்டன.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

புதிய பெயர்

தவெக, காங்கிரஸ், விசிக, முஸ்லீம் லீக், மதிமுக ஆகிய கட்சிகளின் கூட்டணிக்கு இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில், ‘மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

தவெக தவிர்த்து, முன்பு திமுகவில் இந்தக் கட்சிகள் கூட்டணியில் இருந்தபோது, அந்தக் கூட்டணிக்கு ‘மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி’ என்று பெயர் இருந்தது குறிப்பிடத்தக்கது.

தொழில் முதலீடு, மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி: இன்று பிரிட்டன் செல்கிறார் முதல்வர் விஜய்!

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் ஏழு நாள் பயணமாக இன்று பிரிட்டன் கிளம்புகிறார். மீண்டும் அவர் வருகிற 17-ம் தேதி தமிழ்நாடு திரும்புகிறார். இது தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான பயணம் என்று தமிழ்நாடு அரசு அறிக்... மேலும் பார்க்க

தமிழக இடைத்தேர்தல்: மதுராந்தகம், தாராபுரத்திற்கான வேட்பாளர்களை அறிவித்த அதிமுக - யார் அவர்கள்?

வருகிற அக்டோபர் 6-ம் தேதி, தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இந்தத் தேர்தலில் அதிமுக சார்பாகக் களமிறங்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது அதிமுக. மதுராந்த... மேலும் பார்க்க

"ஒரு மதத்தைத் திருப்தி செய்ய அரசியல் செய்கிறீர்கள்" - மாணிக்கம் தாகூருக்கு நயினார் நாகேந்திரன் பதில்

இன்று செய்தியாளர் சந்திப்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர், "நான் கோவிலுக்கு செல்வேன். இதையெல்லாம் மதவாதம் என்று சொல்லிவிடமுடியாது, இன்னொரு மதத்திற்கு எதிரானது கிடையாது. நயினார்... மேலும் பார்க்க

புதிய தலைமைச் செயலகம்: ``முதலமைச்சர் விஜய்யின் நோக்கம் இதுதான்" - அமைச்சர் அருண்ராஜ் விளக்கம்!

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டுவதற்கான அறிவிப்பு வெளியானதிலிருந்து எதிர்க்கட்சிகளும், தவெக-வின் கூட்டணியில் இருக்கும் சி.பி.ஐ உள்ளிட்ட இடதுசாரிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பட்டினப... மேலும் பார்க்க

`பொறுப்புணர்வுடன் முன்னெடுத்துச் செல்வேன்' - தவெக எம்.எல்.ஏ. கனிமொழிக்கு கூடுதல் பொறுப்பு!

கோவை கவுண்டம்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக த.வெ.க-வைச் சேர்ந்த கனிமொழி சந்தோஷ் இருக்கிறார். இந்த நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவையின் சட்ட விதிகள் ஆய்வுக்குழு உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் தேர்வு செ... மேலும் பார்க்க

`விஏஓ-வுக்கு லஞ்சம் கொடுக்கணும், பிச்சை போடுங்க!' - தட்டுடன் வலம் வந்த கள்ளக்குறிச்சி விவசாயி

கள்ளக்குறிச்சி மாவட்டம், எலவனாசூர்கோட்டை வருவாய் கிராமம், நொணைவாடி பகுதியைச் சேர்ந்த அப்துல் சலீம் ஷேக், பூர்வீகச் சொத்துப் பட்டாவில் தன்னுடைய பெயரை சேர்ப்பதற்காக எலவனாசூர்கோட்டை வருவாய் கிராம அலுவலகத... மேலும் பார்க்க