செய்திகள் :

‘மதத்தின் பின்னால் ஒளிந்துகொள்ளலாமா? அமைச்சர் மரிய வில்சன் மன்னிப்பு கேட்க வேண்டும்’ – வானதி காட்டம்

post image

பா.ஜ.க தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், “தமிழ் படித்தவர்களுக்கு 'அன்பின் மொழி, அமைதியின் மொழி, இரக்கத்தின் மொழி' தெரியாது என்ற அமைச்சர் மரிய வில்சன் மன்னிப்பு கேட்க வேண்டும். தமிழ்நாடு சட்டமன்றத்தில் தி.மு.க. உறுப்பினர் ராஜேந்திரன் பேசும்போது, “நிதியமைச்சர் மரிய வில்சன், தமிழில் பிழையின்றிப் பேச வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார்.

இதற்குப் பதிலளித்த நிதியமைச்சர் மரிய வில்சன், ’எனக்கு மொழி, அன்பு மொழி, அமைதி மொழி. இரக்கத்தின் மொழியை கிறிஸ்தவம் எனக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறது. எவ்வளவுதான் தமிழ் படித்தாலும், பலருக்கும் இது தெரியாது. கிறிஸ்தவ மதத்தில் பிறந்த நான், இதையெல்லாம் பைபிளில் படித்திருக்கிறேன்’  என்று கூறியிருக்கிறார்.

அமைச்சர் கிறிஸ்தவ மதத்தின் சிறப்புகளைப் பற்றிப் பேசட்டும். அதை யாரும் கேள்வி கேட்கவில்லை. ஆனால், தாய்த் தமிழில் பிழையின்றிப் பேச வேண்டும் என்று கேட்டால், அதற்கு நேரடியாகப் பதிலளிக்காமல், மதத்தின் பின்னால் ஒளிந்துகொள்வது திசைதிருப்பும் செயலாகும்.

மரிய வில்சன்
மரிய வில்சன்

அதுமட்டுமல்லாமல், போகிற போக்கில், தமிழ் படித்தவர்களுக்கு அன்பின் மொழி, அமைதியின் மொழி, இரக்கத்தின் மொழி தெரியாது என்றும் கூறியிருக்கிறார். தமிழுக்கு நேர்ந்த இந்த அவமானத்தை சட்டமன்றத்தில் இருந்த மற்ற உறுப்பினர்கள் வேடிக்கை பார்த்தது வேதனை அளிக்கிறது. உலகப் பொதுமறையான திருக்குறள் அன்பு, அமைதி, இரக்கம் ஆகியவற்றைப் பற்றிப் பேசவில்லையா? “அன்பே சிவம்” என்று கூறிய திருமந்திரம், தேவாரம், திருவாசகம் போன்ற தமிழ் பக்தி இலக்கியங்கள் அன்பையும், அமைதியையும், இரக்கத்தையும் தானே போதிக்கின்றன?

‘அன்பே சிவம்’ என்ற திருமந்திரத்தின் உயரிய கருத்து, தமிழின் ஆகப்பெரும் சிறப்புகளில் ஒன்றாகும். எனவே, அன்பு, அமைதி, இரக்கம் குறித்து அமைச்சர் மரிய வில்சன் தமிழர்களுக்குப் பாடம் எடுக்க வேண்டாம். தமிழை அவமானப்படுத்திய அமைச்சர் மரிய வில்சன், தமிழ்நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். ‘பிழையின்றித் தமிழில் பேசுங்கள்’ என்று கேட்டதற்கு, ’அப்படித்தான் பேசுவேன்’ என்று கூறிய அமைச்சர் மரிய வில்சனை, முதலமைச்சர் கண்டிக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

அமளி ஒருபக்கம், ஆனாலும் நிறைவேறும் மசோதாக்கள் - நாடாளுமன்றத்தில் விவாதமின்றி நிறைவேறும் மசோதாக்கள்!

ஜூலை 20-ம் தேதி தொடங்கி, நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் நாளையோடு (ஆகஸ்ட் 13) முடிவடைகிறது. 25 நாள்கள் கொண்ட இந்தக் கூட்டத்தொடரில் விடுமுறைகள் போக, 19 நாள்கள் அவை கூடியது... கூடுகிறது. நீட் வ... மேலும் பார்க்க

கோவை அருகே கொசு மருந்து அடித்ததால் இருவர் உயிரிழந்ததாக புகார் – நடந்தது என்ன?

கோவை மாவட்டம் அன்னூர் பேரூராட்சி ஏழாவது வார்டுக்கு உட்பட்ட உப்புத்தோட்டம் பகுதியில் அடுத்தடுத்து 4 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து நேற்று காலை அப்பகுதியில் கொசு மருந்து அடிக்க... மேலும் பார்க்க

``ரஷ்யாவில் விரைவில் தேர்தல்; புதின் போடும் போர் பிளான் இது" - என்ன சொல்கிறார் ஜெலன்ஸ்கி?

ரஷ்யா - உக்ரைன் போர் மீண்டும் தீவிரமடைந்து வருகிறது. அடுத்த மாதத்தில் ரஷ்யாவில் தேர்தல் வேறு வர இருக்கிறது. இந்தப் போரை வைத்து உள்நாட்டில் ரஷ்ய அதிபர் ட்ரம்ப் 'கேம்' ஆடுவதாக தனது எக்ஸ் பக்கத்தில் சாடி... மேலும் பார்க்க

கேரள மாநில பெயர் 'கேரளம்' என மாற்றும் மசோதா மக்களவையில் நிறைவேறியது அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?

கேரள மாநிலத்தின் பெயரை `கேரளம்' என மாற்றும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. கேரள சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது தொடங்கி பல்வேறு நடவடிகைகள் பூர்த்தியடைந்த நிலையில் நேற்று மக்களவையிலும... மேலும் பார்க்க

TN Assembly: தொகுதி மறுவரையறை: தனித்தீர்மானத்தை கொண்டுவரும் முதல்வர் விஜய்! திமுக-வின் முடிவு என்ன? | Live Updates

தனித் தீர்மானமும், திமுகவின் நிலைப்பாடும்!தமிழ்நாடு சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அதில் இன்று தொகுதி மறுவரையறைக்கு எதிரான தனித்தீர்மானத்தைத் தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் ... மேலும் பார்க்க