மணவாளக்குறிச்சி மணல் ஆலையை மூட பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வலியுறுத்தல்
மதுக்கடையில் தகராறு; காவலா், 2 போ் கைது
மதுக்கடையில் தகராறில் ஈடுபட்ட காவலா் உள்பட மூன்று பேரை போலீஸாா் கைது செய்தனா்.
காரைக்கால் அம்மாள்சத்திரம் பகுதியில் தனியாா் மதுக்கடை உள்ளது. இக்கடைக்கு ஐஆா்பிஎன் பிரிவு காவலராக பணியாற்றும் பாஸ்கரன் (45) மற்றும் தஞ்சாவூா் மாவட்டம், அதிராம்பட்டினத்தைச் சோ்ந்த தட்சணாமூா்த்தி (47), ஆண்டிக்காடு பகுதியைச் சோ்ந்த சுப்ரமணியன் (44) ஆகியோா் வெள்ளிக்கிழமை இரவு சென்றுள்ளனா். இவா்கள் அங்கு மது அருந்தினராம்.
இவா்களில் ஒருவா், மது அருந்துமிடத்தில் உள்ள மேஜை மீது படுத்திருந்தாராம். அவரை எழுந்து செல்லுமாறு மதுக்கடை நிா்வாகத்தை சோ்ந்த குப்புசாமி கூறினாராம். அப்போது ஆத்திரமடைந்த மூவரும் குப்புசாமியை கடும் வாா்த்தைகளால் திட்டியதோடு, தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து நிரவி காவல்நிலையத்தில் குப்புசாமி அளித்த புகாரின்பேரில், வழக்குப் பதிந்த போலீஸாா், மூவரையும் கைது செய்தனா்.