செய்திகள் :

மதுராந்தகம் இடைத்தேர்தல்: 'வெளியூர் வேட்பாளர்களைக் களமிறக்கிய கழகங்கள்...' - பின்னணி என்ன?

post image

மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்த வேகத்தில், வேட்பாளர்களையும் அறிவித்திருக்கின்றன த.வெ.க, தி.மு.க, அ.தி.மு.க. மதுராந்தகம் தொகுதிக்கு மூன்று தரப்பும் வெளியூர் ஆட்களை களமிறக்கியிருப்பது, பேசுபொருளாகியுள்ளது!

பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்துடன் மரகதம் குமரவேல்

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மரகதம் குமரவேல் மதுராந்தகம் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார். இவர் திருப்போரூர் தொகுதியின் தையூரைச் சேர்ந்தவர். கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் தையூரிலுள்ள பூத்தில்தான் வாக்குச் செலுத்தியிருக்கிறார். அதேபோல, தி.மு.க வேட்பாளர் பரந்தாமன் சென்னை எழும்பூர் தொகுதியில் வசிக்கிறார். எழும்பூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ-வான இவர், எழும்பூரில்தான் வாக்களித்துவருகிறார். அ.தி.மு.க-வின் வேட்பாளரான கணிதா சம்பத் 2021-ல் செய்யூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இவர் செய்யூர் தொகுதியில்தான் வாக்களித்து வருகிறார். எனவே மூன்று வேட்பாளர்களும் மதுராந்தகத்தைச் சார்ந்தவர்களோ அங்கே வசிப்பவர்களோ இல்லை. த.வெ.க-வுக்கு மரகதம் குமரவேலை நிறுத்த வேண்டிய அழுத்தம் இருப்பதால், அவர்களும் மாற்று வேட்பாளர்கள் குறித்து சிந்திக்கவில்லை.

இது குறித்து தி.மு.க, அ.தி.மு.க நிர்வாகிகளிடம் பேசினோம். "2001-க்குப் பிறகே அங்கே வெளியூர் நிர்வாகிகள்தான் வென்றிருக்கிறார்கள். அதனால், அந்த தொகுதியில் ஆளுமைகள் என எவரும் உருவாகவில்லை. மேலும் பட்டியல் சமூகத்தைச் சார்ந்த வேட்பாளர்களுக்கு ஒருமுறைக்கு மேல் வாய்ப்பு வழங்குவதில்லை என்பதால், மீண்டும் மீண்டும் ஒரே ஆள் மதுராந்தகம் தொகுதியில் நிற்க முடிவதில்லை. 2005-ல் மதுராந்தகத்தார் எனும் மதுராந்தகம் ஆறுமுகம் மறைவுக்குப் பிறகு பெரிய ஆளுமைகள் யாரும் உருவாகவில்லை. அதனால் மாற்று தொகுதியைச் சார்ந்தவர்களையே களமிறக்குகிறார்கள்" என்றனர்.

ஐ. பரந்தாமன் - ஸ்டாலின்
ஐ. பரந்தாமன் - ஸ்டாலின்

நம்மிடம் பேசிய அரசியல் நோக்கர்கள், "பொதுவாகவே `தனித்தொகுதிகளி்ல் ஒருவர் வெற்றிபெற்றால், அந்த தொகுதியில் தனி ஆதிக்கம் செலுத்திவிடுவார்’ எனக் கருத்து உண்டு. இதன் காரணமாகவே தனித்தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளருக்கு, தி.மு.க-விலுள்ள இதர சாதியினரே சில சமயங்களில் ஓட்டுப்போடுவதில்லை, வேலையும் பார்ப்பதில்லை. தனித் தொகுதிகளை கூட்டணிக்கு தள்ளிவிடுவதிலேயே குறியாக இருப்பதும் உண்டு. 2011 சட்டமன்றத் தேர்தல் மூலம் தனித் தொகுதியானது மதுராந்தகம்.

2026 சட்டமன்றத் தேர்தலில் மதுராந்தகத்தைச் சார்ந்த அமுலு பொன்மலர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால் அவர் வெற்றிக்கு முழு ஒத்துழைப்புடன் நிர்வாகிகள் பணியாற்றவில்லை. 10 ஆயிரம் வாக்குகளில் வெற்றியை தவறவிட்டார். அதேநேரம், வெளியூர் வேட்பாளரை நிறுத்தினால் உள்ளூர் கட்சிப் பொறுப்பு பெற முடியாது.

கணிதா சம்பத்
கணிதா சம்பத்

உதாரணமாக பரந்தாமன் மதுராந்தகத்தில் வென்றாலுமே மாவட்டச் செயலாளர் பொறுப்பைப் பெற முடியாது. 2005 வரை உயிருடன் இருந்த மதுராந்தகம் ஆறுமுகம் தி.மு.க-விலும் ம.தி.மு.க-விலும் ஆளுமையாக இருந்திருக்கிறார். அதற்கு பிறகு மதுராந்தகம் தொகுதியில் ஆளுமை மிக்கவர்கள் உருவாகவில்லை என்பதிலிருந்தே அதன் காரணத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது" என்றனர்.

நாதக: 'இடைத்தேர்தலில் கண்டிப்பா போட்டியிடணுமா?' - தயக்கத்தில் தம்பிகள்.. சீமான் முடிவென்ன?

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் 'நாம் கண்டிப்பாக போட்டியிட வேண்டுமா..' என்ற கேள்விகள் நா.த.க சீனியர்கள் மத்தியில் எழுந்துள்ளது. நிர்வாகிகளின் விருப்பத்துக்கு மாறாக 'கண்டிப்பாக போட்டியிட வேண்டும்... மேலும் பார்க்க

`பட்டினப்பாக்கத்தில் புதிய ஒருங்கிணைந்த தலைமைச் செயலகம்' - வெளியானது அரசாணை!

தமிழகத்தின் புதிய ஒருங்கிணைந்த தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்ற வளாகம் கட்டப்படும் என முதல்வர் விஜய் கடந்த செப்டம்பர் 3-ஆம் தேதி சட்டமன்றத்தில் 110-வது விதியின் கீழ் அறிவித்திருந்தார். ரூ.1,200 கோடி ம... மேலும் பார்க்க

Vijay : "மூத்தோரை மதிப்பது மனித மாண்புகளில் மிகவும் உயர்ந்ததாகும்.!" - சுட்டிகாட்டும் திருமா

காவல்துறை மானியக் கோரிக்கை குறித்து நடைபெற்ற விவாதத்திற்குக் கடந்த திங்கட்கிழமை முதல்வர் விஜய் சட்டமன்றத்தில் பதிலுரை அளித்திருந்தார். சட்டமன்றத்தில் அவர் பேசும்போது வெளிப்படுத்திய உடல்மொழியை அரசியல் ... மேலும் பார்க்க

`என் பொறுப்பு' - அடித்து ஆடிய உதயநிதி; இறுதியில் மாறிய பட்டியல்! - பரந்தாமன் தேர்வான பின்னணி

இடைத்தேர்தலில் தி.மு.க போட்டியிடுமா.. புறக்கணிக்குமா.. என்ற குழப்பம் நீடித்துவந்த நிலையில், வேட்பாளர்களை அறிவித்து ஷாக் கொடுத்திருக்கிறார் அக்கட்சித் தலைவர் மு.க ஸ்டாலின். 'போட்டியிட வேண்டும்' என்ற மு... மேலும் பார்க்க

இடைத்தேர்தலில் திமுக: முன்னாள் விசிக MLA-வை வைத்து ஸ்டாலின் போடும் கணக்கு... ரேஸில் யார் யார்?

இடைத்தேர்தலில் தி.மு.க போட்டியிடுமா.. புறக்கணிக்குமா.. என்ற குழப்பம் ஒருபக்கம் இருந்தாலும், இடைத்தேர்தலில் தி.மு.க தரப்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என்ற விவாதம் ஓடிக் கொண்டிருக்கிறது. இச்சூழலில... மேலும் பார்க்க

உலகிலேயே அதிக சம்பளம் பெறும் அரசுத் தலைவர்; சிங்கப்பூர் பிரதமரின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் தலைவரான சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்கின் (Lawrence Wong) ஆண்டுச் சம்பளம் தற்போது சுமார் 64 சதவிகிதம் உயர்த்தப்பட்டிருக்கிறது. இதன் மூலம் அவரது ஆண்டுச் சம்பளம் 2.2 மி... மேலும் பார்க்க