செய்திகள் :

மதுரை கல்வி குழுமம்: மேற்கு ஆஸ்திரேலிய அரசின் பாடத்திட்டம் & மெல்போர்ன் பல்கலைக்கழகத்துடன் ஒப்பந்தம்

post image

தமிழக மாணவர்களுக்கு உலகத்தரமான கல்வி வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில், மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கல்வி குழுமம் (Kalvi Group of Schools), ஆஸ்திரேலியாவின் முன்னணி கல்வி அமைப்புகள் மற்றும் பல்கலைக்கழகங்களுடன் முக்கிய கல்விசார் ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக கல்வி குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் முனைவர் எஸ். செந்தில்குமார் மற்றும் கல்வி குழுமத்தின் தாளாளர் திரு. குமரேஷ் ஆகியோர் ஆஸ்திரேலியாவின் பெர்த் மற்றும் மெல்போர்ன் நகரங்களுக்கு அண்மையில் கல்விசார் பயணம் மேற்கொண்டனர்.

மேற்கு ஆஸ்திரேலிய அரசின் WACE கல்வித் திட்டத்துடன் ஒப்பந்தம்

மேற்கு ஆஸ்திரேலிய அரசின் கல்வித் தரநிலைகள் அமைப்பான School Curriculum and Standards Authority (SCSA) தொடர்புடைய Western Australian Certificate of Education (WACE) கல்வித் திட்டத்திற்கான ஒப்பந்தத்தில் கல்வி குழுமம் ஏற்கெனவே கையெழுத்திட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து பெர்த் நகரில் SCSA அதிகாரிகளை நேரில் சந்தித்து, WACE பாடத்திட்டத்தின் செயல்படுத்தல், கல்வித் தரநிலைகள், மாணவர் மதிப்பீட்டு முறைகள் மற்றும் சர்வதேச உயர்கல்வி வாய்ப்புகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.

இந்தக் கல்விசார் முயற்சியின் மூலம் தமிழக மாணவர்களுக்கு ஆஸ்திரேலிய உயர்நிலைக் கல்வித் திட்டத்தில் பயிலும் வாய்ப்புகளை உருவாக்க கல்வி குழுமம் திட்டமிட்டுள்ளது.

மதுரை கல்வி குழுமம்
மதுரை கல்வி குழுமம்

மெல்போர்ன் பல்கலைக்கழகத்துடன் கல்விசார் ஒப்பந்தம்

ஆஸ்திரேலிய பயணத்தின் மற்றொரு முக்கிய நிகழ்வாக, உலகின் முன்னணி உயர்கல்வி நிறுவனங்களில் ஒன்றான The University of Melbourne உடன் கல்வி குழுமத்தின் சார்பில் கல்விசார் ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஆசிரியர்களின் தொழில்முறை மேம்பாடு, சர்வதேச கல்வித் தரநிலைகள், புதுமையான கற்பித்தல் முறைகள் மற்றும் கல்வித் தர மேம்பாட்டிற்கான ஒத்துழைப்புகளை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகங்களின் கல்வி அனுபவங்களையும் சிறந்த கற்பித்தல் நடைமுறைகளையும் தமிழகப் பள்ளிகளுக்குக் கொண்டு வருவதற்கான முக்கிய முயற்சியாக இந்த ஒப்பந்தம் கருதப்படுகிறது.

மேற்கு ஆஸ்திரேலிய பல்கலைக்கழகத் துணைவேந்தர்களுடன் சந்திப்பு

பெர்த் நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற The University of Western Australia (UWA) பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் அமித் சக்மா (Prof. Amit Chakma) மற்றும் சர்வதேச உறவுகளுக்கான துணைத் துணைவேந்தர் பேராசிரியர் ஜெனிஃபர் ஹோவெல் (Prof. Jennifer Howell) ஆகியோரை கல்வி குழுமத்தின் தலைவர் முனைவர் செந்தில்குமார் மற்றும் தாளாளர் திரு. குமரேஷ் சந்தித்தனர்.

இச்சந்திப்பில் இந்திய மாணவர்களுக்கான சர்வதேச உயர்கல்வி வாய்ப்புகள், மாணவர் திறன் மேம்பாடு, உயர்கல்விக்கான தயார்நிலை மற்றும் எதிர்கால கல்விசார் ஒத்துழைப்புகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

தமிழக மாணவர்களுக்கு உலகளாவிய கல்வி வாய்ப்புகள்

இந்த சர்வதேச கல்வி முயற்சிகள் மூலம் மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பயிலும் மாணவர்களுக்கும் உலகளாவிய கல்வி வாய்ப்புகளை உருவாக்க கல்வி குழுமம் திட்டமிட்டுள்ளது.

சர்வதேச பாடத்திட்டங்கள், திறன் சார்ந்த கற்றல், ஆசிரியர் மேம்பாடு மற்றும் உலகளாவிய உயர்கல்விக்கான தயார்நிலை ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது.

கிராமப்புற மாணவர்களுக்கும் உலகத்தரமான கல்வி – கல்வி குழுமத் தலைவர்

இதுகுறித்து கல்வி குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் முனைவர் எஸ். செந்தில்குமார் கூறியதாவது:

“நான் ஒரு தமிழ்வழி அரசுப் பள்ளியில் கல்வி பயின்றவன். கிராமப்புற மாணவர்களின் திறமைகளையும், அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய கல்வி வாய்ப்புகளின் முக்கியத்துவத்தையும் நன்கு அறிந்தவன்.

உலகத்தரமான கல்வி என்பது பெருநகரங்களிலும் வெளிநாடுகளிலும் பயிலும் மாணவர்களுக்கு மட்டுமே கிடைக்க வேண்டிய ஒன்றல்ல. தமிழகத்தின் கிராமப்புற மாணவர்களுக்கும் அதே தரத்திலான கல்வி வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்பதே எங்களது நோக்கம்.

மேற்கு ஆஸ்திரேலிய WACE கல்வித் திட்டத்திற்கான ஒப்பந்தமும், மெல்போர்ன் பல்கலைக்கழகத்துடனான கல்விசார் ஒப்பந்தமும் இந்த இலக்கை நோக்கிய முக்கியமான முன்னேற்றங்களாகும்.

உலகத்தரமான கல்வியைத் தேடி நமது மாணவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டும் என்ற நிலையை மாற்றி, உலகத்தரமான கல்வி வாய்ப்புகளை நமது மாணவர்களிடம் கொண்டு வருவதே எங்களது இலக்கு.

மதுரை போன்ற நகரங்களிலும் கிராமப்புறங்களிலும் கல்வி பயிலும் மாணவர்களும் உலக அரங்கில் சாதனையாளர்களாக உருவாக வேண்டும் என்பதே எங்களது கனவு” என்றார்.

தமிழகப் பள்ளிக் கல்வியை சர்வதேச கல்வி அமைப்புகளுடன் இணைக்கும் கல்வி குழுமத்தின் இந்த முயற்சிகள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குப் புதிய கல்வி வாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

'பின்னடைவிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளுங்கள்.!'- தேர்வர்களுக்கு ராதாகிருஷ்ணன் IAS வழங்கிய அறிவுரைகள்

UPSC/TNPSC குரூப் -1, 2 தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில் ஆனந்த விகடனும் King Makers IAS அகாடமியும் இணைந்து சென்னையில் ஓர் இலவசப் பயிற்சி முகாமை நடத்தத் திட்டமிட்டிருக்கின்றன.'நீங... மேலும் பார்க்க

UPSC/TNPSC: குரூப் தேர்வுகளில் வெல்வது எப்படி? இலவச பயிற்சி முகாம் -சிறப்புரையாற்றும் விஜயகுமார் IPS

UPSC/TNPSC குரூப் -1, 2 தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில் ஆனந்த விகடனும் King Makers IAS அகாடமியும் இணைந்து சென்னையில் ஓர் இலவசப் பயிற்சி முகாமை நடத்தத் திட்டமிட்டிருக்கின்றன.'நீங... மேலும் பார்க்க

கோவை : இரவில் ஜொலிக்கும் பெரியார் அறிவுலகம்!

பெரியார் அறிவுலகம்பெரியார் அறிவுலகம்பெரியார் அறிவுலகம்பெரியார் அறிவுலகம்பெரியார் அறிவுலகம்பெரியார் அறிவுலகம்பெரியார் அறிவுலகம்பெரியார் அறிவுலகம்பெரியார் அறிவுலகம்பெரியார் அறிவுலகம் மேலும் பார்க்க

அரசுத் தேர்வுகளுக்கு முதல் முறையாக தயாராகும் தேர்வர்கள்; முதல் 3 மாதங்களை எப்படி படிக்க வேண்டும்?

'UPSC/TNPSC குரூப் -1, 2 தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில் ஆனந்த விகடனும் King Makers IAS அகாடமியும் இணைந்து சென்னையில் ஓர் இலவசப் பயிற்சி முகாமை நடத்தத் திட்டமிட்டிருக்கின்றன.'நீ... மேலும் பார்க்க

கல்வி இன்டர்கான்டினென்டல்: நாட்டின் முதல் ‘என்பிஎஸ் வாத்ஸல்யா – நிதி ரீதியாக வலுவூட்டப்பட்ட பள்ளி’

மதுரையில் செயல்பட்டு வரும் கல்வி இன்டர்கான்டினென்டல் பள்ளி, மாணவர்களிடையே நிதி விழிப்புணர்வை ஏற்படுத்தி, சிறு வயது முதலே பொறுப்பான நிதிப் பழக்கங்களை வளர்த்து வருவதற்காக, ‘என்பிஎஸ் வாத்ஸல்யா – நிதி ரீத... மேலும் பார்க்க

இலஞ்சி பாரத் மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவன் மாவட்ட அளவில் சாதனை!

முதலமைச்சர் கோப்பைக்கான மண்டல அளவில் ஜூடோ விளையாட்டுப் போட்டி 2026-27,தென்காசி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் 15/09/2026 அன்று நடத்தியது. இப்போட்டியில் தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி... மேலும் பார்க்க