செய்திகள் :

மதுரை: மும்மதங்களைச் சேர்ந்தவர்களுக்கு முதலாவதாக தங்க மோதிரம் வழங்கிய முதல்வர் விஜய்!

post image

தாய்மாமன் தங்க மோதிர திட்டம் இன்று தொடங்கி இருக்கிறது. திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு வருகை தந்திருந்தார் முதலமைச்சர் விஜய்.

இதற்கு முன்னதாக மதுரை விமான நிலையத்திலிருந்து, மருத்துவமனை வரை முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முதல்வரைக் காண பொதுமக்கள் அதிகளவில் சாலையோரங்களில் கூடி நின்றதால், முதல்வர் விஜய் வாகனத்தின் மீது நின்று கொண்டே மக்களை பார்த்து கை அசைத்து கொண்டே வந்தார்.

மருத்துவமனைக்கு வந்ததும் அங்கு கூடியிருந்த மக்கள் பெரும் சப்தத்தோடு அவரை வரவேற்றனர். தொடர்ந்து விழா மேடைக்குச் சென்றார் முதல்வர் விஜய். மொத்தம் 27 பயனாளிகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரத்தை வழங்கினார் முதல்வர். இதில் மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் 

வகையில்  இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மதங்களைச் சேர்ந்த தாய்மார்களுக்கு தங்க மோதிரம் வழங்கினார்.

தாய்மாமன் தங்க மோதிர திட்டம்

மீதமுள்ள 24 குழந்தைகளின் தாய்மார்களுக்கு மேடைக்கு கீழே இறங்கி சென்று தங்க மோதிரம் வழங்கினார்.  தொடர்ந்து குழந்தைகளின் துணியிலும் முதல்வர் கையெழுத்திட்டார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள் அருண்ராஜ், நிர்மல்குமார், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சு.வெங்கடேசன், மாணிக்கம் தாகூர் ஆகியோர் பங்கேற்றனர்.

ஜெம் வீரமணி: 'விஜய், ஆதவ் , சி.டி.ஆருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க வேண்டும்' - டி.ஆர் பாலு புகார்

ஜெம் வீரமணி தொடர்பான போக்சோ வழக்கில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள முதலமைச்சர் விஜய், அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, சி.டி.ஆர். நிர்மல்குமார் ஆகிய மூவரையும் 'சம்மன்' செ... மேலும் பார்க்க

நெல்லை 'அன்புச் சுவர்': அன்பைப் பகிர்கிறோம்... `பொறுப்பை'யும் பகிர்வோமே!

குவியும் ஆடைகளும் தயங்கும் மக்களும்: நெல்லை அன்புச் சுவரின் நிலை“நமக்குத் தேவையில்லாதது, இன்னொருவருக்குத் தேவையாக இருக்கலாம்” என்ற நோக்கில், 2017-ஆம் ஆண்டு அன்றைய நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூர... மேலும் பார்க்க

``தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தை மதுரையில் தொடங்குவது முதல்வரின் விருப்பம்"- அமைச்சர் நிர்மல்குமார்

அமைச்சர் நிர்மல் குமார், மதுரை அரசு ராஜாஜி தலைமை மருத்துவமனையில் நடைபெறும் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத் தொடக்க விழா ஏற்பாடுகளைப் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது,"மதுர... மேலும் பார்க்க

ஹார்முஸ் ஈரானிடம் இல்லையா? எண்ணெய் விலை சொல்லும் உலக சந்தை, முட்டாளா? - அமெரிக்காவை கலாய்த்த ஈரான்

ஈரான் போர் தொடங்கி ஹார்முஸ் நீர்ச்சந்தி முடக்கப்பட்டதிலிருந்து கச்சா எண்ணெய் விலை ஏறுமுகத்திலேயேதான் பெரும்பாலும் இருக்கிறது. அவ்வப்போது உச்சத்தை வேறு தொட்டிருக்கிறது. ஈரான் போர் தொடங்குவதற்கு முன்பு,... மேலும் பார்க்க

BB TAMIL 10: அடாவடியாக அசரடித்த முனி; பாலின சமத்துவத்துடன் க்ரூப்பிஸம் - நடந்தது என்ன?|சுரேஷ் கண்ணன்

BB TAMIL 10: 3rd WEEKபிக் பாஸ் சீசன் பத்து இன்னமும் கூட சுவாரசியமாகவும் பரபரப்பாகவும் மாறவில்லை. ஆகவே என்னவாவது அதிரடியான மாற்றங்களைச் செய்து பிக்அப் ஆக வைக்கும் முயற்சியில் பிக் பாஸ் டீம் இருக்கிறது.... மேலும் பார்க்க

டெல்லியில் இளைஞரை அறைந்த பாஜக அமைச்சர்: "வாக்களர்களுக்கு அஞ்சாத அதிகார முகம் இது" - ராகுல் காந்தி

டெல்லியைச் சேர்ந்த அமைச்சர் பர்வேஷ் வர்மா. இவரிடம் இளைஞர் ஒருவர் மோசமான சாலைகள் குறித்துக் கேள்வி கேட்டபோது, அந்த இளைஞரை பர்வேஷ் கன்னத்தில் அறைந்திருக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.அமைச... மேலும் பார்க்க