செய்திகள் :

'மத்திய அரசாங்கத்தின் பெயரைக்கூட சொல்ல விரும்பவில்லை; அது வேண்டாத அரசாங்கம்' - அமைச்சர் ஐ.பெரியசாமி

post image

திண்டுக்கல், ஆத்தூர் தொகுதிக்குட்பட்ட சித்தையன் கோட்டை பேரூராட்சியில் பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்துகொண்டு, பொதுமக்களுக்கு பொங்கல் தொகுப்பினை வழங்கினார்.

பின் நிகழ்ச்சி மேடையில் அமைச்சர் ஐ.பெரியசாமி பேசும்போது, ``100 நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தை 125 நாள்களாக மத்திய அரசு அதிகரித்துள்ளது. நான் அமைச்சராகப் பொறுப்பேற்று 2023 - 24ல் தமிழ்நாட்டில் 41 கோடி நபர்களுக்கு 100 நாள் வேலை வாய்ப்பு கொடுக்கப்பட்டு, ரூ.13000 கோடி பணம் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது மத்தியில் இருக்கும் அரசாங்கத்தின் பெயரைக்கூட சொல்ல விரும்பவில்லை. அது வேண்டாத அரசாங்கம். அதனால் பேர் சொல்ல விரும்பவில்லை. பெயர் சொல்லாத என வைத்துக் கொள்ளுங்கள். தற்போது, அவர்கள் 12 கோடி பேருக்குத்தான் வேலை கொடுப்போம் எனக் கூறுகின்றனர். இதனால் உடன் பிறந்தவர்கள் பலர் பாதிப்பு அடைகின்றனர்.

அமைச்சர் ஐ.பெரியசாமி

வறுமை கோட்டிற்குக் கீழே கீழே இருப்பவர்களுக்குத்தான் கொடுப்போம் எனக் கூறுகின்றனர். வளர்ந்த மாநிலங்களுக்கு இனி கொடுக்க மாட்டார்களாம். மத்திய அரசு அம்பேத்கர் கொடுத்த மாநில சட்ட உரிமைகளைப் பறிக்க நினைக்கிறது.

பெயர் சொல்ல முடியாத அடக்குமுறை அரசு, மாற்றான் தாய் மனசு உள்ள அரசு மத்தியில் இருக்கிறது. இந்த அரசு தமிழ்நாட்டிற்கு கேடுதான் விளைவிக்கும்.

மத்திய அரசு நாளை உங்களிடம் வந்து பொய் மூட்டைகளைச் சொல்லும். அவர்களுக்கு மக்களிடம் ஓட்டு கேட்க எந்த தகுதியும் இல்லை. நாம் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சமமாக வாழ வேண்டும், ஏற்றத்தாழ்வு இல்லாத சமுதாயத்தை உருவாக்கிட வேண்டும், சாதி, மதம் இருக்கக் கூடாது, ஏழையாக இருந்தாலும் பணக்காரராக இருந்தாலும் ஆட்சி அதிகாரத்தில் மந்திரிக்கு சட்டத்தில் இருக்கக்கூடிய உரிமை அனைவருக்கும் இருக்க வேண்டும். இந்த உரிமையைப் பறிக்கக் கூடாது என்பதுதான் திராவிட மாடல் ஆட்சி.

ஐ.பெரியசாமி ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர்

பேரூராட்சிகளிலும் வீடு கட்டித் தர வேண்டும் என முதலமைச்சரிடம் பேசியுள்ளேன். அதையும் செய்வோம் எனக் கூறியுள்ளார். முதியோர் உதவித்தொகை அனைவருக்கும் கொடுக்க வேண்டும் என முதலமைச்சரிடம் கூறியுள்ளேன்” என்றார்.

SIR மதுரை: "ஒரே பாகத்தில் இறந்தவர்கள் உட்பட முறைகேடாக 42 பெயர்கள் சேர்ப்பு" - சரவணன் புகார்

மதுரை வடக்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பாகம் எண் 98 இல் இறந்தவர்கள் உட்பட 42 பெயர்கள் முறைகேடாகச் சேர்க்கப்பட்டுள்ளன என்று முன்னாள் எம்.எல்.ஏ-வும் அதிமுக மருத்துவ அணி இணைச் செயலாளருமான டாக்டர் சரவ... மேலும் பார்க்க

'2025-ம் ஆண்டு 8 முறை மோடி ட்ரம்பிடம் பேசியுள்ளார்' - அமெரிக்காவிற்கு இந்தியா பதில்

"இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ட்ரம்பிடம் பேசினால், இந்தியா - அமெரிக்கா வர்த்தகப் பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்துவிடும்" - இது பாட்காஸ்ட் ஒன்றில் அமெரிக்க வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக்கின் ... மேலும் பார்க்க

கிரீன்லாந்து: வல்லரசின் `நிலப்' பசி; ஆக்டோபஸ் கரத்தை நீட்டும் ட்ரம்ப் - தப்பிக்குமா டென்மார்க்?

உலகின் வல்லரசு நாடுகளின், `நாடு பிடிக்கும் போட்டி'யில், ரஷ்யா - உக்ரைன், இஸ்ரேல் - காஸா, சீனா - தைவானுக்குப் பிறகு அந்த வரிசையில் தனக்கான ஒரு துண்டைப் போட்டிருக்கிறது அமெரிக்கா. அமெரிக்க அதிபர் ட்ரம்ப... மேலும் பார்க்க

மோடி 'இதை' மட்டும் செய்தால் இந்தியா - அமெரிக்கா வர்த்தகப் பேச்சுவார்த்தை சக்சஸ்! - ட்ரம்பின் அதிகாரி

இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள 50 சதவிகித வரி நிச்சயம் ஏற்றுமதியாளர்களுக்குப் பெரும் சுமை. இந்தியா, அமெரிக்கா இடையே நடந்துகொண்டிருக்கும் வர்த்தகப் பேச்சுவார்த்தை கைகூடினால், இந்தச் சுமை குறையும் எ... மேலும் பார்க்க

அதிமுக: இரட்டை இலை சின்னத்தைப் பயன்படுத்த தடைக்கோரி வழக்கு; இபிஎஸ்-க்கு எதிரான மனு தள்ளுபடி

அதிமுக-வில் உட்கட்சி விவகாரம் தொடர்பாக, நிலுவையில் உள்ள வழக்குகள் முடிவுக்கு வரும் வரை, அதிமுக-வுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக்கூடாது என்பதற்காகவும், எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராகத் தேர... மேலும் பார்க்க