செய்திகள் :

'மனம் வலிக்கிறது; விமர்சனங்கள் செய்தால் பரவாயில்லை ஆனால்..!'- சுந்தர்.சி வருத்தம்

post image

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 'மூக்குத்தி அம்மன்- 2' படம் வெளியாக இருக்கிறது.

சுந்தர்.சி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் நயன்தாரா, ரெஜினா கசாண்ட்ரா, அபிநயா, ஊர்வசி, யோகிபாபு, மைனா நந்தினி, சிங்கம்புலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

நவம்பர் 6 ஆம் தேதி இந்தத் திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் ப்ரி ரிலீஸ் ஈவென்ட் நேற்று (அக்.28) நடைபெற்றது.

 'மூக்குத்தி அம்மன்- 2'
'மூக்குத்தி அம்மன்- 2'

இதில் கலந்துகொண்டு பேசிய சுந்தர்.சி, " இந்தப் படத்தில் இதுவரை எந்த படத்துக்கும் போடாத ஒரு உழைப்பை போட்டு இருக்கிறேன். நான் என்றைக்குமே ஹீரோவுக்காக கதை எழுதியதில்லை.

நான் எழுதிய கதைக்கு தான் நடிகர்களை தேர்ந்தெடுத்திருக்கிறேன். ஒரு ஐடியா என்னிடம் இருந்தது. ஆனால் அது அம்மன் கதையாக இல்லை. அந்த சமயத்தில் தான் ஐசரி சார் 'மூக்குத்தி அம்மன் - 2' நீங்கள் எடுக்குறீர்களா? எனக் கேட்டார். அது தெய்வீக சக்தி போல் இருந்தது.

மூக்குத்தி அம்மன் முதல் பாகத்திற்கும் இரண்டாம் பாகத்திற்கும் நான்கு விஷயங்கள் தான் சம்பந்தப்பட்டிருக்கிறது.

படத்தின் டைட்டில், ஐசரி சார், நயன்தாரா மற்றும் ஊர்வசி மேடம். இந்த படத்தை ஆரம்பிக்கும் போது இவ்வளவு பெரிய உழைப்பு தேவைப்படும் என யாருமே நினைக்க இல்லை.

நானும் வெங்கட் என்பவரும் 2 வருட உழைப்பை இதில் போட்டிருக்கிறோம். 800 பேர் ஒன்றரை வருடம் உழைத்திருக்கிறார்கள்.

சுந்தர். சி
சுந்தர். சி

சிஜி-யை பொறுத்தவரை கிட்டத்தட்ட 400 கலைஞர்கள் வேலை பார்த்துள்ளனர். இது சாதாரணமானது கிடையாது. ஆனால் யூடியூபில் சில விமர்சனங்களை பார்க்கும் போது வருத்தமாக இருந்தது.

விமர்சனங்கள் செய்தால் பரவாயில்லை விஷயமே தெரியாமல், ஏ.ஐ என பேசும்போதுதான் மனது வலிக்கிறது. இந்தப் படத்தில் மொத்தம் 3000 ஷாட்டுகளுக்கு மேல் சி.ஜி இருக்கிறது.

அதில் 15 ஷாட்டுக்குத்தான் ஏ.ஐ-யைப் பயன்படுத்தினோம். படத்தை பாருங்கள், சி.ஜி நல்லாயிருந்தால் பாராட்டுங்கள், நல்லா இல்லை என்றால் தட்டிக் கொடுங்கள். என்னுடைய வாழ்க்கையில் ரொம்ப கஷ்டப்பட்டு எடுத்த படம் இந்தப் படம்” என்று பேசியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

அனிருத் - காவ்யா திருமணம்: `பிரதமர் மோடி முதல் தனுஷ் வரை...' - யாருக்கெல்லாம் அழைப்பு?!

இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் திருமணம் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. அனிருத் மற்றும் காவ்யா தம்பதி நவம்பர் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் ... மேலும் பார்க்க

"காலமானவர்களை அந்த நிலையில் பார்க்க விரும்பவில்லை" - இசைக் கலைஞர் சதானந்தத்திற்கு இளையராஜா இரங்கல்

இசையமைப்பாளர் இளையராஜாவின் ஆஸ்தான கிதார் இசைக் கலைஞரான சதானந்தம் (79) சென்னையில் இன்று (அக்.29) காலமானார்.ஏவிஎம் நிறுவனத்தின் ஆஸ்தான இசையமைப்பாளர்களில் ஒருவர் ஆர். சுதர்சனம். அன்றைய காலக்கட்டத்தில் பல... மேலும் பார்க்க

Jafar Panahi: பிரபல இயக்குநர் ஜாஃபர் பனாகிக்கு 5 ஆண்டுகள் சிறை; பின்னணியும் தொடரும் ஒடுக்குமுறைகளும்

ஈரானிய சினிமாவின் முக்கியமான இயக்குநர் ஜாஃபர் பனாகிக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. ஈரானில் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் ஒடுக்குமுறை, அவர்கள் மீது சுமத்தப்படும் அரசியல் ரீதிய... மேலும் பார்க்க

``என் கணவர் பழி போடுறவறா இருக்கக் கூடாது; அவருக்கு சமைக்கத் தெரிஞ்சிருந்தா... " - நடிகை சாய் பல்லவி

நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் ‘ராமாயணம் - தி ரைஸ் ஆஃப் எ லெஜண்ட்’. இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும் நடிக... மேலும் பார்க்க

`சுந்தர் சி நான் தத்தெடுத்த குழந்தை...' - 'மூக்குத்தி அம்மன்- 2 பட நிகழ்வில் நெகிழ்ந்த குஷ்பு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 'மூக்குத்தி அம்மன்- 2' படம் வெளியாக இருக்கிறது. சுந்தர்.சி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் நயன்தாரா, ரெஜினா கசாண்ட்ரா, அபிநயா, ஊர்வசி, யோகிபாபு, மைனா நந்தினி, சிங்கம்புலி... மேலும் பார்க்க

"அந்த அவமானம் என் வாழ்நாள் முழுவதும் இருக்கும்!" - 'பெத்தி' பட சர்ச்சை குறித்து ஜான்வி கபூர்

ராம் சரண் நடிப்பில் வெளியான 'பெத்தி' திரைப்படத்திற்காகத் தான் சந்தித்த விமர்சனங்கள் குறித்து நடிகை ஜான்வி கபூர் பேசியிருக்கிறார். ஜான்வி கபூர் கரண் ஜோஹர் தொகுத்து வழங்கும் 'காஃபி வித் கரண்' நிகழ்ச்சிய... மேலும் பார்க்க