செய்திகள் :

'மனிதநேயமற்ற குற்றம்' - ஆப்கானிஸ்தான் மருத்துவமனை மீது பாகிஸ்தான் தாக்குதல்; 400 பேர் உயிரிழப்பு

post image

கடந்த சில மாதங்களாக, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் முட்டி மோதிக்கொண்டுதான் இருந்தன. இப்போது இந்த முட்டல், மோதல் பெரும் தாக்குதலாக உருமாறி உள்ளது.

இன்று அதிகாலை ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலில் பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல் ஒன்றை நடத்தியுள்ளது. அதில் அங்கு இருந்த மருத்துவமனை ஒன்றில் கிட்டத்தட்ட 400 பேர் உயிரிழந்துள்ளனர்... 250 பேர் காயமடைந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் சொல்லும் குற்றச்சாட்டு

இது குறித்து ஆப்கானிஸ்தானின் துணை அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஹம்துள்ளா ஃபித்ரத் கூறுகையில், "ஆப்கானிஸ்தானின் உள்ளூர் நேரப்படி இரவு 9 மணிக்கு, பாகிஸ்தான் போதை மறுவாழ்வு மருத்துவமனை மீது வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளது.

இதில் 2,000 படுக்கை வசதிகள் கொண்ட கட்டடம் தகர்க்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

மேலும், பாகிஸ்தானின் இந்தச் செயலை மனிதநேயத்திற்கு எதிரான குற்றம் என்று ஆப்கானிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது.

மறுக்கும் பாகிஸ்தான்

ஆனால், ஆப்கானிஸ்தானின் இந்தக் கூற்றை, 'நாங்கள் எந்தவொரு மருத்துவமனை மீதும் தாக்குதல் நடத்தவில்லை' என்று பாகிஸ்தான் மறுக்கிறது.

ஆப்கானிஸ்தானின் ராணுவத் தளவடங்கள் மீதுதான் தாக்குதல் நடத்தினோம் என்று பாகிஸ்தான் கூறுகிறது.

``ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை நிறுத்தியவர்தான் எடப்பாடி பழனிசாமி!” - அடித்து ஆடும் பன்னீர்!

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம், ‘தமிழ்நாடு தலைகுனியாது’ என்ற தலைப்பில் நடந்தது. இதில், அமைச்சர் கீதா ஜீவன், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சிறப்... மேலும் பார்க்க

Rajinikanth: 'காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்' - ஆதவ் அர்ஜுனாவுக்கு ரஜினிகாந்த் பதில்

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வராதது குறித்து தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா சமீபத்தில் பேசியிருந்தார். இது பொதுவெளியில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருந்தது. இந்த நிலையில், ரஜினிகாந்த் ஆதவ் அர்ஜுனா கருத்... மேலும் பார்க்க

"நாங்கள் அப்பாயிண்ட்மெண்ட் செய்யப்பட்ட முதல்வர்கள்" - திமுக கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பளீச்

தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக நேற்று தி.மு.க தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் முன்னிலையில், மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், தொகுதி வார... மேலும் பார்க்க

Kerala: 'அவர் 3 முறை MLA; 4-வதாக மனைவிக்கு சீட்டா?' - சிபிஎம் மாநிலச் செயலாளருக்கு எதிராக போர்க்கொடி

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் சி.பி.எம் கட்சி வலுவாக உள்ளது. கண்ணுர் மாவட்டத்தில் உள்ள தளிப்பறம்பு சட்டசபை தொகுதியில் சிட்டிங் எம்.எல்.ஏ-வாக உள்ளார் எம்.வி.கோவிந்தன். இதற்கு முன்பு இரண்டுமுறை அந்த... மேலும் பார்க்க

முட்டிமோதும் வேலுமணி, செந்தில் பாலாஜி; குறிவைக்கும் பாஜக! - கோவை மாவட்ட களநிலவரம் | முந்துவது யார்?

முந்துவது யார்?தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. தற்போதைய நிலவரப்படி, யார் களத்தில் முந்துகிறார்கள் என்பது குறித்து விவரிக்கும் பக்கம் தான் `முந்துவது யார்?'முந்துவது யார்?கோவை மாவட்டம்1. கோவை தெற்... மேலும் பார்க்க