செய்திகள் :

மனு பாக்கரை ஒலிம்பிக் நாயகியாக்கிய `குரு' - கோச் ஜஸ்பால் ராணா திடீர் மரணம்; சாம்பியனை இழந்த இந்தியா

post image

இந்தியாவின் துப்பாக்கிச் சுடுதல் ஜாம்பவானும், பாரீஸ் ஒலிம்பிக் நாயகி மனு பாக்கரின் பயிற்சியாளருமான ஜஸ்பால் ராணா (49), உடல்நலக்குறைவால் திடீரென காலமானார். டெல்லியில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், வியாழக்கிழமை இரவு அவர் உயிர் பிரிந்ததாக இந்திய தேசிய துப்பாக்கிச் சுடுதல் சங்கத்தின் (NRAI) தலைவர் கலிகேஷ் நாராயண் சிங் தியோ உறுதிப்படுத்தியுள்ளார். அவரது இந்த திடீர் மறைவு, இந்திய விளையாட்டு உலகை அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.

சமீபத்தில் ஜெர்மனியின் முனிச் நகரில் நடந்த ஐ.எஸ்.எஸ்.எஃப் உலகக் கோப்பையின் போதே, ஜஸ்பால் ராணாவுக்கு நெஞ்சு வலி மற்றும் அசௌகரியம் ஏற்பட்டுள்ளது. ஆனால், அதனை அமிலத்தன்மை (acidity) காரணமாக இருக்கலாம் என எண்ணி, அவர் தனது பயணத்தைத் தொடர்ந்திருக்கிறார். இந்தியா திரும்பும் விமானப் பயணத்தின்போதும் மீண்டும் இதே பிரச்னை ஏற்படவே, டெல்லி வந்திறங்கியதும் உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். "ஆரம்பத்தில் அவர் அந்த வலியை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை," என்று அவரது சகோதரர் சுபாஷ் ராணா சில நாட்களுக்கு முன்பு ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார்.

மருத்துவப் பரிசோதனையில், இதய ரத்தக் குழாயில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டு, அவருக்கு 'ஸ்டென்ட்' பொருத்தப்பட்டது. அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், சில நாட்கள் கழித்து இரண்டாவது ஸ்டென்ட் பொருத்த திட்டமிடப்பட்டிருந்ததாகவும் தகவல்கள் வெளிவந்தன. அவர் குணமடைந்து வருகிறார் என அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்த செய்தி அனைவரையும் நிலைகுலைய வைத்துள்ளது.

பயிற்சியாளராக ஜஸ்பால் ராணாவின் பங்களிப்பு இந்திய துப்பாக்கிச் சுடுதலில் மகத்தானது. குறிப்பாக, இளம் வீராங்கனை மனு பாக்கரின் அசுர வளர்ச்சிக்குப் பின்னால் இருந்த முக்கிய சக்தி அவர்தான். சமீபத்தில் நடந்து முடிந்த பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளில், மனு பாக்கர் இரண்டு பதக்கங்களை வென்று வரலாற்று சாதனை படைத்தபோது, அதன் பின்னணியில் இருந்த குரு ஜஸ்பால் ராணா. மனு பாக்கரை ஒரு ஒலிம்பிக் நாயகியாக செதுக்கிய பெருமை அவரையே சாரும்.

மனு பாக்கர் manu bhaker

பயிற்சியாளராக மட்டுமல்லாமல், ஒரு வீரராகவும் ஜஸ்பால் ராணா படைத்த சாதனைகள் ஏராளம். காமன்வெல்த் போட்டிகளின் வரலாற்றில், இந்தியாவின் வெற்றிகரமான வீரர்களில் ஒருவராக அவர் திகழ்கிறார். 1994, 1998, 2002 மற்றும் 2006 என நான்கு தொடர்ச்சியான காமன்வெல்த் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தினார். 2006-ல் தோஹாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், 25 மீட்டர் சென்டர் ஃபயர் பிஸ்டல் பிரிவில் உலக சாதனையை சமன் செய்து மூன்று தங்கப் பதக்கங்களை வென்றது அவரது வாழ்வின் உச்சமாக பார்க்கப்படுகிறது. தனது 18-வது வயதிலேயே, 1994-ல் மிலனில் நடந்த ஜூனியர் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் உலக சாதனையுடன் தங்கம் வென்று, உலக அரங்கில் தனது வருகையை அழுத்தமாக பதிவு செய்தவர்.

ஒரு வீரராகவும், பயிற்சியாளராகவும் இந்திய விளையாட்டுத் துறைக்கு ஈடுசெய்ய முடியாத பங்களிப்பை வழங்கிய ஜஸ்பால் ராணாவின் மறைவு, ஒரு சகாப்தத்தின் முடிவாகவே பார்க்கப்படுகிறது

Praggnanandhaa: நார்வே செஸ் தொடரில் கெய்மரை வீழ்த்தி பட்டம் வென்ற பிரக்ஞானந்தா; வரலாற்று சாதனை!

நார்வே செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியிருக்கிறார் பிரக்ஞானந்தா. நார்வே செஸ் போட்டி மே 25 முதல் ஜூன் 5ஆம் தேதி வரை நடைபெற்றன. இதில் குகேஷ், பிரக்ஞானந்தா, மாக்னஸ் கால்சன் வின்சென்ட் கெய்மர்... மேலும் பார்க்க

Praggnanandhaa: நார்வே செஸ் பட்டம் வென்ற முதல் இந்தியர்; வரலாற்று சாதனை படைத்த பிரக்ஞானந்தா! |Live Updates

நார்வே செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியிருக்கிறார் பிரக்ஞானந்தா. நார்வே செஸ் போட்டி மே 25 முதல் ஜூன் 5ஆம் தேதி வரை நடைபெற்றன. இதில் குகேஷ், பிரக்ஞானந்தா, மாக்னஸ் கால்சன் வின்சென்ட் கெய்மர்... மேலும் பார்க்க

வடகொரிய மகளிர் கால்பந்து அணி வரலாற்றுச் சாதனை! அதிபர் கிம் ஜாங் உன்னுடன் கொண்டாடிய அரிய காட்சி

உலக நாடுகளை எப்போதுமே தனது ராணுவ பலத்தால் அதிரவைக்கும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், முற்றிலும் ஒரு மாறுபட்ட நெகிழ்ச்சியான கோணத்தில் உலகிற்கு காட்டியுள்ளனர் அந்நாட்டு மகளிர் கால்பந்து அணியினர். 'ஏஎப்ச... மேலும் பார்க்க

ஒண்ணு இல்ல, ரெண்டு! ஒரே தொடரில், கார்ல்சனின் சொந்த ஊரில் இருமுறை வீழ்த்தி பிரக்ஞானந்தா செய்த சம்பவம்

செஸ் உலகின் சக்கரவர்த்தி என வர்ணிக்கப்படும் மேக்னஸ் கார்ல்சனை, அதுவும் அவரது சொந்த மண்ணில், ஒரே தொடரில் இருமுறை வீழ்த்துவதெல்லாம் நினைத்துக்கூட பார்க்க முடியாத சாதனை. அந்த அசாத்திய சாதனையை நிகழ்த்திக்... மேலும் பார்க்க

'காலத்துக்கு ஏத்த மாதிரி மாறனும்!' - 38 வயதில் விராட் கோலி எப்படி சாதித்தார்?

ஆர்.சி.பி அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக சாம்பியன் ஆகியிருக்கிறது. விராட் கோலியின் நீண்ட கால கனவு இது. ஆனால், அவருடைய கேப்டன்சியில் இந்த சாதனையை அவரால் நிகழ்த்தவே முடியவில்லை. ரஜத் பட்டிதார் வந்த பிற... மேலும் பார்க்க

RCB: "ஹாட்ரிக் கப் அடிக்கிறதுக்கு ஐடியா பண்ணப் போறோம்!" - உற்சாகத்தில் ரஜத் பட்டிதார்

ஐ.பி.எல் இறுதிப்போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி பெங்களூரு அணி சாம்பியன் ஆகியிருக்கிறது. தொடர்ந்து இரண்டாவது முறையாக கோப்பையை வென்றிருக்கும் பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் பத்திரிகையாளர் சந... மேலும் பார்க்க