செய்திகள் :

`தவெக அரசு மக்களுக்கு விரோதமாகச் செயல்பட்டால், வீதியில் இறங்கிப் போராடுவோம்!' - சி.பி.எம் பேபி

post image

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வென்று, தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்தது. இருப்பினும் ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மையை உறுதி செய்வதில், அந்தக் கட்சிக்குச் சிக்கல் நீடித்தது.

அதையடுத்து திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் ஐ.யூ.எம்.எல் உள்ளிட்டவை, தவெக ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்தன. இதில் காங்கிரஸ், விசிக மற்றும் ஐ.யூ.எம்.எல் கட்சிகள் அமைச்சர் பதவிகளைப் பெற்று ஆட்சியிலும் பங்கெடுத்திருக்கின்றன.

தவெக விஜய்
முதல்வர் விஜய்

கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆரம்பம் முதலே, `நாங்கள் தவெக ஆட்சியமைக்க மட்டுமே ஆதரவு தெரிவித்திருக்கிறோமே தவிர... ஆட்சிக்கு ஆதரவு இல்லை' எனக் குறிப்பிட்டு வருகின்றன.

இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி, ``தவெக ஆட்சி அமைக்க நாம் ஆதரவுக் கடிதம் அளித்ததைத் தொடர்ந்து, தவெக தலைவர் ஜோசப் விஜய் நமக்கு அமைச்சரவையில் இடமளிக்க முன்வந்தார்.

எம். ஏ. பேபி
எம். ஏ. பேபி

எனினும், அந்தப் பதவி வாய்ப்பை மறுத்து, கொள்கைக்காக வெளியிலிருந்து மட்டுமே ஆதரவளிக்கும் முடிவை இடதுசாரிக் கட்சிகள் எடுத்தன. மக்களுக்கான நல்வாழ்வுத் திட்டங்கள், இளைஞர்கள், பெண்கள், தொழிலாளர்கள், விவசாயிகளின் நலன்கள் மற்றும் மதச்சார்பின்மை விழுமியங்களை தவெக அரசு பாதுகாக்கும் வரை ஆதரிப்போம். மக்களுக்கு விரோதமாகச் செயல்பட்டால், வீதியில் இறங்கி போராடுவோம்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

மநீம: `தேர்தல் முடிவுகளை தாங்கிக்கொள்ள முடியாமல் பழிகளைச் சுமத்திச் செல்கின்றனர்' - முரளி அப்பாஸ்

மக்கள் நீதி மய்யத்திலிருந்து சில மாநில நிர்வாகிகள் விலகியுள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலச் செயலாளர் முரளி அப்பாஸ், இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.அப்போது அவர், “தமிழகத்தில் தற்போது கட்ச... மேலும் பார்க்க

தர்மஸ்தலா கோயில் விவகாரம்: `இரண்டு நாள்களில் நானே நேரில் சொல்கிறேன்' - நடிகர் பிரகாஷ் ராஜ் விளக்கம்!

கர்நாடகா தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ளது தர்மஸ்தலா மஞ்சுநாத சுவாமி கோயில். "இந்தக் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் 1995-ம் ஆண்டிலிருந்து 2014-ம் ஆண்டு வரை, பல பெண்கள் மற்றும் மாணவிகளின் உடல்களை அடக்... மேலும் பார்க்க

'அமெரிக்கா தான் இந்தியாவை ரஷ்ய எண்ணெயை வாங்க சொன்னது; இங்கே நடிக்க வேண்டாம்'- ஜெய்சங்கர் 'நச்' பதில்

தற்போது இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பின்லாந்து பயணத்தில் இருக்கிறார். பின்லாந்தில் நடந்த குழு விவாதத்தில் பத்திரிகையாளர் ஒருவர் ஜெய்சங்கரிடம், 'இந்தியா ரஷ்யாவிடம் அதிகமாக பரிவு காட்டுக... மேலும் பார்க்க

கடலூர்: கிணறுகள் அமைக்க ஹிந்துஸ்தான் ஆயில் நிறுவனம் திட்டம்; அரசுக்கு அன்புமணியின் கோரிக்கை என்ன?

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் 4 ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க ஹிந்துஸ்தான் எண்ணெய் கண்டுபிடிப்பு நிறுவனம் (Hindustan Oil Exploration Company - HOEC) முடிவு செய்திருப்பத... மேலும் பார்க்க

மாற்றி மாற்றிப் பேசும் ட்ரம்ப்; பிடிகொடுக்காத இஸ்ரேல்... முடிவுறாமல் தொடரும் ஈரான் போர்!

'இதுவரையில் இல்லாத அளவிலான தாக்குதல்', 'கடுமையான தாக்குதல்' - இப்படி இரண்டு - மூன்று நாள்களுக்கு ஒருமுறை கூறி வருகிறார், அமெரிக்க அதிபர் ட்ரம்ப். அதன்படி, நேற்று மாலை (இந்திய நேரப்படி), ட்ரம்ப் ஈரான் ... மேலும் பார்க்க