செய்திகள் :

அன்று புரியாத வயது... இன்று புரிகிறது அது படம் அல்ல, காவியம்| பாரதிராஜாவின் காலத்தால் அழியாத படைப்பு

post image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

ஆறாம் வகுப்பு தேர்வு முடிந்து, கோடை விடுமுறையில் இருந்தேன். எனக்கு இன்றும் நன்றாக நினைவிருக்கிறது, முதல் மரியாதை படத்தை அம்மாவோடு டிவியில் சேர்ந்து பார்த்தது. வழக்கம்போல் விடுமுறை என்றாலே நண்பர்களோடு வெளியே சென்று ஊர் சுற்றுவதும், டிவியில் பிடித்த கார்ட்டூன் படங்களையும், அதேசமயம் ஞாயிற்றுக்கிழமைகளில் போடப்படும் படங்களை ஆர்வமாக பார்ப்பதும் இப்படிதான் போகும்.

இப்படி போய்க்கொண்டிருந்த விடுமுறை நாள்களின் இடையில், கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கும்போது நண்பர்களுக்குள் சிறிய சண்டை வந்து அது பெரிய சண்டையாக ஆனது. இதைப் பார்த்த எனது அம்மா, “இனிமேல் விளையாட பசங்க கூட போகக்கூடாது, வீட்லயே தான் இருக்கணும்!” என்று என்னை அடித்து கண்டித்து விட்டார். இருந்தும் அப்போது அப்போது அம்மாவுக்கு தெரியாமல் விளையாட சென்று விடுவேன்.

`முதல் மரியாதை’ ரஞ்சனி

ஞாயிற்றுக்கிழமையில் அம்மாக்கு வேலை இல்லாததால் வீட்டில் தான் இருந்தார். நானும் வீட்டிலேயே இருக்க வேண்டிய சூழ்நிலை வந்தது. எரிச்சலாக இருந்தது. சாப்பிட்டு முடித்துவிட்டு மதிய நேரத்தில் அம்மா டிவியில் முதல் மரியாதை படத்தை பார்க்க ஆரம்பித்தார். அப்போது எனக்கும் பழைய படங்கள் எல்லாம் பிடிக்காது. இருந்தும் அம்மாவோடு சேர்ந்து பார்க்க ஆரம்பித்தேன்.

ஜெயா டிவியில் தான் இந்த படம் ஓடியது இன்றும் ஞாபகம் இருக்கிறது. புரியாமல் நானும் பார்க்க ஆரம்பித்தேன். போகப்போக சிவாஜி கணேசன் அவர்களின் நடிப்பும், இராதா அவர்களின் அப்பாவித்தனமான இரக்கமுள்ள நடிப்பும், அதற்கு இணையாக வடிவுக்கரசி அவர்களின் மிரட்டலான கோபமான நடிப்பும் கொஞ்சம் கொஞ்சமாக என்னைக் கவர்ந்தது. அப்போதெல்லாம் படத்தில் உள்ளவர்களின் நிஜ பெயர் எனக்கு தெரியாது. தெரிந்தது மதிப்பிற்குரிய சிவாஜி கணேசன் அவர்களை தான்.

கதை ஒன்றும் புரியவில்லை. கிராமத்து மண்வாசனையாகவே போய்க்கொண்டிருந்தது. இடையில் இராதா மீன் குழம்பு செய்து வைத்திருப்பார், “அம்புட்டு தான் போதும்.. இன்னொரு மீன் வை.. உனக்கு வயிறு வலிக்கும் இல்ல அதான் நான் சாப்பிடுறேன்.. பசி ருசி அறியாது அதனாலதான்…

உண்மையிலேயே இந்த சாப்பாட சாப்பிடும் போது எங்க ஆத்தா ஞாபகம் தான் வருது”இப்படி எதார்த்தமாகவும், உணர்வுபூர்வமாகவும் பேசி அதிகமாக சாப்பிட்டு விடுவார். சிவாஜி கணேசன் அவர்கள் சாப்பிடுவதை கன்னத்தில் கை வைத்து இராதா அவர்கள் ஏக்கம் கலந்த பூரிப்போடு பார்த்து இரசித்து கொண்டிருப்பார். அதிலும் மீனை முழுவதுமாக வாயில் போட்டு தனியாக மீன் முள்ளை மட்டும் கையால் வெளியே எடுப்பார். அந்தக் காட்சியைப் பார்த்து நானும் அது போல் செய்ததுண்டு.


பூங்காற்று திரும்புமா.. ஏன் பாட்ட விரும்புமா.., வெட்டி வேரு வாசம்.. போன்ற படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் எல்லாம் கேட்டவுடனே எனக்குப் பிடித்தது. பாடலை அம்மா மிகவும் ரசித்து கேட்டுக் கொண்டிருந்தார். அதை நானும் கூர்ந்து கவனித்தேன், அம்மா கால் ஆட்டுவதை வைத்து, இடையில் அம்மா பாடல் வரிகளை கோரசாக பாடினார்.

முதல் மரியாதை

ஊரின் தலைவராகவும், தலைக் கட்டாகவும் சிவாஜி கணேசன் நடித்திருப்பார்.

எப்போது பார்த்தாலும் சிவாஜி கணேசனின் மனைவி அவரை திட்டிக் கொண்டும் கோபமாக தான் இருப்பார். அப்போது புரியவில்லை ஏன் இப்படி செய்கிறார் என்று, குயிலான இராதாவின் மீது இனம் புரியாத அன்போடு சிவாஜி கணேசன் இருப்பதால்தான் திட்டினார் என்று இப்போதுதான் புரிந்தது.

வயதில் மிகவும் மூத்தவரான சிவாஜி கணேசனை இராதா அளவுக்கு அதிகமாக உயிருக்கு நிகராக ஏன் நேசித்தார் என்று அப்போது புரியவில்லை. சிவாஜி கணேசனின் பொறுமையான குணாதிசயமும், தெளிந்த அக்கறையும்,பண்பும், அவரின் சோக பின்னணி வாழ்க்கையும் தான் அவரைப் பிடிக்க காரணமானது என்று இப்போதுதான் புரிந்தது.


சிறையில் இருந்து வந்த ராதா சிவாஜி கணேசனை பார்க்க வருவார். கண்களைத் திறந்து பார்த்த சிவாஜி கணேசன் இராதாவின் கையில் சிகப்பு கருகமணி முத்துக்களை கொடுத்த அடுத்த நிமிடமே இரண்டு பேரின் கைகளும் இறுகப் பற்றிக்கொள்ளும். இரண்டு பேருக்கு இடையில் எந்த ஒரு உரையாடலுமே இருக்காது, இருந்தும் சிவாஜி கணேசன் இராதாவின் கையைப் பிடித்தபடி உயிரை விடுவார். அதற்குப் பிறகு இரயில் பயணத்தின் இறுதியில் இரயிலில் உட்கார்ந்து படி இராதாவின் உயிரும் பிரிந்து விடும்.

ஏன்? இப்படி நடக்குது என்று எனக்கு அப்போது புரியவில்லை. உண்மையான காதலும்,அன்பும் ஒருவரை எவ்வளவு ஆழமாக நேசிக்கிறோம் என்பதில்லை. அந்த நபரை எவ்வளவு புரிந்து நடந்து இருந்திருக்கிறோம் என்பதில்தான் இருக்கிறது. என்பதை இப்போதுதான் இந்தப் படத்தின் மூலம் புரிந்து கொண்டேன்.

முதல் மரியாதை

இந்த படத்தில் வரும் பாடல்களை அப்போது ரசித்திருக்கிறேன். இசைஞானி இளையராஜா அவர்களின் இசை நம்மைக் கட்டிபப் போட்டு விடும்.

ஆனால் அந்தப் பாடல்களின் வரிகளின் அர்த்தங்களை இப்போதுதான் உணர்ந்து கொண்டேன். இந்தப் படத்தை இயக்கியவர் யார் என்பதெல்லாம் எனக்கு அப்போது தெரியாது. 

சினிமாவின் புரிதலும், வயதுக்கு ஏற்ற பக்குவமும் வந்தபோது தான் தெரிந்தது முதல் மரியாதை படத்தை இயக்கியவர் இயக்குனர் இமயம் பாரதிராஜா என்று!!

சிவாஜி கணேசன் மற்றும் இராதாவிற்கு இடையில் இருப்பது அன்பா?? காதலா?? ஈர்ப்பா?? தவிப்பா?? ஏக்கமா?? இரக்கமா?? என்று இதுபோன்று எதற்குள்ளும் அடக்க முடியாத ஒரு தனித்துவமான,உன்னதமான உணர்வு பூர்வமான முதல் மரியாதையை இருவருக்குள்ளும் கடத்தியிருப்பார் இமயம் போற்றும் இயக்குனர் பாரதிராஜா அவர்கள்!!

அது மட்டுமல்லாமல் பாரதிராஜா தமிழ் சினிமாவின் போக்கை மாற்றியதிலும், ஆடம்பரமான அரண்மனை செட்டுகள், வெளிநாடு படப்பிடிப்புகள் போன்ற வர்ணனைகளை தவிர்த்து விட்டு, இயற்கை மணம் மாறாத கிராமத்து வயல் காட்டு வெளிக்கு தமிழ் சினிமாவை திருப்பியவர் என்பதை நினைக்கும் போது ஒரு எழுத்தாளனாக எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது.

அவர் நம்மை விட்டு மறைந்திருந்தாலும்,முதல் மரியாதை போன்ற, தான் இயக்கிய படங்கள் மூலம் எக்காலத்திலும் நம்முடன் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்!!

நன்றி!

செ. ஹரிஷ்,

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!

Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

``தேவர்ங்கறது படிச்சு வாங்கின பட்டமா?” - சாதியக் கட்டமைப்பை முகத்தில் அறைந்த பாரதிராஜா

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

அழியாத காவியங்களின் அலைவரிசை - தமிழ் சினிமாவின் வரலாற்றை மாற்றி எழுதியவருக்கு ஒரு ரசிகனின் அஞ்சலி

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

சாதியச் சாட்டையும் சமூகச் சாட்சியும்! - பாரதிராஜா என்ற ஆகச்சிறந்த சமூக ஆவணம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

எத்தனை யுகங்கள் ஆனாலும் குறையாது இந்த 'மரியாதை'! பாரதிராஜாவுக்கு ஒரு வாசகியின் அஞ்சலி

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

எமனை அழவைத்த இமயம்!

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

பாரதிராஜா: `தமிழ் சினிமாவின் முகத்தை மாற்றிய மேதை... சினிமாவில் புரட்சிகள் செய்த இயக்குநர் இமயம்!'

தமிழ் சினிமா வரலாற்றை `பாரதிராஜாவுக்கு முன்', 'பாரதிராஜாவுக்குப் பின்' என்று தாராளமாகப் பிரிக்கலாம். 1970-களின் இறுதியில், திரையரங்குகளில் நிலவிய செயற்கையான நாடகத்தன்மைக்கு முற்றுப்புள்ளி வைத்து, மண் ... மேலும் பார்க்க