செய்திகள் :

``தேவர்ங்கறது படிச்சு வாங்கின பட்டமா?” - சாதியக் கட்டமைப்பை முகத்தில் அறைந்த பாரதிராஜா

post image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

தமிழ் திரையுலகில், இயக்குனர் சிகரம் பாலசந்தர் சகாப்தத்தைத் தொடர்ந்து, திரைக்கதையை காட்சிப்படுத்தும் திறனில், தனக்கென்று, ஒரு சகாப்தத்தையே உருவாக்கி ஆழமானதொரு தடம் பதித்தவர் மறைந்த பாரதிராஜா ஏன்னு இயக்குனர் இமயம்.

ஏணியாக இருந்த இவர் மூலம் புதிய இயக்குனர்கள் ஆகி சிறப்பு அடைந்தவர்கள் பலர்.

"மண் வாசனை" என்ற வெற்றிப்படம் தந்த தலைப்பைப் போலவே, இவரது நிறைய படங்களில், மண் வாசனை நிரம்பவே இருப்பதை யாரால்தான் மறுக்க இயலும்.

இயக்குனர் இமயம் என்ற சிறப்பு அடைமொழிக்கு பொருத்தமான பாரதிராஜா அவர்கள், தனது 'வேதம் புதிது' திரைப்படத்தில், சங்கரன் என்ற அந்த சிறுவன் கதாப்பாத்திரம் மூச்சுக்கு முன்னூறு தடவை பாலு தேவர்னு சொல்றீங்களே, "பாலுங்கறது உங்க பேரு; தேவர்ங்கறது நீங்க படிச்சு வாங்கின பட்டமான்னு?" கேட்கும் கேள்வியும், "நான் கரை ஏறிட்டேன் நீங்க?ன்னு கேட்கும் காட்சிகள் படமாக்கப்பட்ட விதமும், அதற்க்கான பின்னணி இசையும் நம் முகத்திலேயே அறைவது போல இருக்கின்ற விதத்தை என்றுமே மறக்க முடியாது.

வேதம் புதிது

"வேதம் புதிது" திரைப்படம், அந்தக் காலக்கட்டத்தில், தமிழ் திரையுலகம் கண்டிராத துணிச்சலான, வியாபார நோக்கத்தைக் கடந்த ஒரு திரைப்படம்.

பாடல்களைக் காட்சிப்படுத்தும் முறையில், அவருக்கென்று, ஒரு தனி பாணியை உருவாக்கி தனது பல திரைப்படங்களை ஜனரஞ்சகமாக்கியதில் பாரதிராஜா அவர்களின் பங்களிப்புக்கு

தனி முத்திரையே உண்டு என அழுத்தமாக சொல்லலாம்.

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!

Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

அழியாத காவியங்களின் அலைவரிசை - தமிழ் சினிமாவின் வரலாற்றை மாற்றி எழுதியவருக்கு ஒரு ரசிகனின் அஞ்சலி

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

சாதியச் சாட்டையும் சமூகச் சாட்சியும்! - பாரதிராஜா என்ற ஆகச்சிறந்த சமூக ஆவணம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

எத்தனை யுகங்கள் ஆனாலும் குறையாது இந்த 'மரியாதை'! பாரதிராஜாவுக்கு ஒரு வாசகியின் அஞ்சலி

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

எமனை அழவைத்த இமயம்!

பாரதிராஜா: `தமிழ் சினிமாவின் முகத்தை மாற்றிய மேதை... சினிமாவில் புரட்சிகள் செய்த இயக்குநர் இமயம்!'

தமிழ் சினிமா வரலாற்றை `பாரதிராஜாவுக்கு முன்', 'பாரதிராஜாவுக்குப் பின்' என்று தாராளமாகப் பிரிக்கலாம். 1970-களின் இறுதியில், திரையரங்குகளில் நிலவிய செயற்கையான நாடகத்தன்மைக்கு முற்றுப்புள்ளி வைத்து, மண் ... மேலும் பார்க்க

சட்டை கிழிந்த பிகில் FDFC முதல் GOAT வரை - ஒரு ரசிகனின் எமோஷனல் டைரி!