செய்திகள் :

மன்னார்குடி: `அப்பா வந்திருக்கேன் எழுந்திரி ராசா'- கார் மோதி 3 பள்ளி குழந்தைகள் பலி; கதறும் பெற்றோர்

post image

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள காரக்கோட்டை அரசுப் பள்ளியில் லோகேஷ், ரச்சித் ஆகிய இருவர் சிறுவர்கள் ஆறாம் வகுப்பும், ராஜமுரளி என்ற சிறுவன் ஏழாம் வகுப்பும் படித்து வந்தனர். இன்று மாலை வழக்கம் போல் பள்ளி முடிந்து மூன்று மாணவர்களும் வீட்டுக்குச் செல்வதற்காக சாலையோரத்தில் நடந்து சென்றுள்ளனர்.

விபத்து

அப்போது தஞ்சாவூரிலிருந்து மன்னார்குடி நோக்கி டவேரா கார் ஒன்று அதிவேகமாக வந்துள்ளது. இதில் சாலையில் நடந்து சென்ற பள்ளி மாணவர்கள் மீது கார் மோதியதில், மூன்று பேரும் தூக்கி வீசப்பட்டனர். கார் தலைகுப்புற கவிழ்ந்தது. மாணவர்களின் புத்தகப்பையில் இருந்து புத்தகங்கள் சிதறின. ரத்த வெள்ளத்தில் கிடந்த மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

இதை பார்த்த அப்பகுதியினர் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக மூன்று பேரையும் மீட்டு மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவர்கள் பரிசோதித்து மாணவர்கள் இறந்து விட்டதை உறுதி செய்தனர். இது குறித்து மூன்று பேரின் பெற்றோர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. மருத்துவமனைக்கு வந்த பெற்றோர் கதறி அழுதது காண்போரை கண்கலங்கச் செய்தது. மகனை இழந்த தந்தை ஒருவர், கட்டிக்கொண்டு, `எழுந்திரிடா என் ராசா, ஏண்டா இப்படியே கிடக்க... அப்பா வந்திருக்கேன், கண் திறடா' எனக் கதறியவரை யாராலும் தேற்ற முடியவில்லை.

விபத்து ஏற்படுத்திய கார்

இந்த விபத்து குறித்து மன்னார்குடி மற்றும் வடுவூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மன்னார்குடி அருகே உள்ள லட்சணங்குடி பகுதியைச் சேர்ந்தவர் கார் ஓட்டியுள்ளார். காரில் மேலும் இரண்டு பேர் இருந்துள்ளனர். காரை ஓட்டியவர் உட்பட மூன்று பேரும் மது அருந்தியுள்ளனர். போதை தலைக்கேறியதால் நிதானத்தை இழந்து காரை வேகமாக ஓட்டி விபத்தை ஏற்படுத்தியிருக்கிறார். இதனால் அப்பாவி மாணவர்கள் பலியாகியுள்ளனர். இந்தச் சம்பவம் மன்னார்குடி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மூன்று பேரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.

குன்னூர்: மலைப்பாதையில் கவிழ்ந்த ஆந்திர சுற்றுலா வாகனம்; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர் படுகாயம்

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த குடும்ப உறவினர்கள் 22 பேர் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு வேன் மூலம் சுற்றுலா சென்றுள்ளனர். குடும்பமாக ஊட்டி, குன்னூரைச் சுற்றிப் பார்த்துவிட்டு நேற்றிரவு குன்னூ... மேலும் பார்க்க

கரூர்: லாரி மீது கார் மோதி விபத்து; 8 மாத கர்ப்பிணிப் பெண் உட்பட 3 பேர் பலியான சோகம்

உசிலம்பட்டியைச் சேர்ந்த அரவிந்த், பெங்களூரில் முறுக்கு தயாரித்து விற்பனை செய்யும் தொழிற்சாலை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில், அவர் தனது சொந்த ஊரான உசிலம்பட்டி நோக்கி காரில் குடும்பத்துடன் திரும்பி... மேலும் பார்க்க

டூவீலரில் பயணித்தவர்கள் மீது மோதிய கார்; மூவர் உயிரைப் பறித்த கோர விபத்து - ஏர்வாடி அருகே சோகம்!

ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி பகுதியைச் சேர்ந்தவர் லாடசாமி. இவருடைய மகள் பஞ்சவர்ணம் மற்றும் மருமகன் புல்லாணி. இவர்கள் மூவரும் இருசக்கர வாகனத்தில் கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக நேற்றைய தினம் ஏர்... மேலும் பார்க்க

சுட்டெரிக்கும் வெயில்... தீர்ந்த குடிநீர்: சஹாரா பாலைவனத்தில் 49 உயிர்களைக் குடித்த லாரி ரிப்பேர்!

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரின் சஹாரா பாலைவனப் பகுதியில், பயணம் செய்த லாரி பழுதடைந்ததால் குடிக்கத் தண்ணீரின்றி தாகத்தால் தவித்து 49 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.மாலி ... மேலும் பார்க்க

டெல்லி ஹோட்டல் தீ விபத்து: 'மின்சாரத்தைத் துண்டித்ததால்...' - பல உயிர்களைக் குடித்த அலட்சியம்

டெல்லியில் உள்ள மால்வியா நகரில் இருக்கும் ப்ளோரிஷ் இன் ஹோட்டலில் புதன்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டு ஒன்பது இந்தியர்கள், 12 வெளிநாட்டினர் உட்பட 21 பேர் உயிரிழந்தனர். இது குறித்து போலீஸாரும், தீயணைப்பு... மேலும் பார்க்க

முதியோர் இல்லத்தில் தீ விபத்து: நள்ளிரவில் சூழ்ந்த தீ; 12 முதியவர்கள் பலி! - இயக்குநர் கைது!

மேற்கு இலங்கையில் உள்ள முதியோர் இல்லம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 12 முதியவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 8 பேர் படுகாயமடைந்துள்ளதாக இலங்கை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.அங்குருவதோட்ட... மேலும் பார்க்க