செய்திகள் :

நிதி அயோக் கூட்டத்தை புறக்கணித்த முதல்வர் ரங்கசாமி! – `மக்களுக்கான துரோகம்’ எனச் சாடும் நாராயணசாமி

post image

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. ஆனால் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்திருக்கிறார் முதல்வர் ரங்கசாமி. இந்த நிலையில் புதுச்சேரியின் முன்னாள் முதல்வர் நாராயணசாமி இன்று செய்தியாளர்களுக்கு அனுப்பிய வீடியோ பதிவில், ``பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் டெல்லியில் நடக்கிறது. அந்தக் கூட்டத்தில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநில முதலமைச்சர்களும் பங்கேற்று, தங்கள் மாநிலத்துக்கு தேவையான வளர்ச்சித் திட்டங்கள், நிதி போன்றவை குறித்து தங்கள் கருத்துகளை பதிவு செய்துள்ளனர்.

ரங்கசாமி
ரங்கசாமி

மிக முக்கியமான இந்த கூட்டத்தில் புதுச்சேரிக்கு தேவையான மாநில அந்தஸ்து, நிதி கமிஷனில் புதுவையை இணைப்பது, மாநிலத்தின் கடன்களை தள்ளுபடி செய்வது, சிறப்பு நிதி வழங்குவது போன்ற கோரிக்கைகளை முதலமைச்சர் ரங்கசாமி வைத்திருக்க வேண்டும். ஆனால் இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் ரங்கசாமி பங்கேற்கவில்லை. இதற்கு அரசியல் காரணங்கள் இருக்கலாம். என்.ஆர்.காங்கிரஸுக்கும், பா.ஜ.க-வுக்கும் இடையே நிலவும் விரிசலால் முதல்வர் ரங்கசாமி டெல்லிக்கு செல்லவில்லையா? பிரதமர் தலைமையிலான கூட்டத்தை புறக்கணிக்க முதல்வர் ரங்கசாமி முடிவு செய்துள்ளாரா என தெரியவில்லை. ஆனால் மாநிலத்தின் வளர்ச்சிக்காகப் பேச வேண்டிய சிறந்த வாய்ப்பை முதல்வர் ரங்கசாமி இழந்துவிட்டார்.

அதன்மூலம் புதுவை மாநில வளர்ச்சிக்கு ரங்கசாமி மிகப்பெரும் துரோகம் இழைத்துள்ளார். ரங்கசாமி கட்சி தொடங்கியது முதல் மாநில அந்தஸ்து பெறுவோம் என கூறி வருகிறார். ஆனால் மத்தியில் உள்ள மோடி அரசு அவர் கோரிக்கையை நிராகரித்துள்ளது. நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் ரங்கசாமி அழுத்தம் கொடுத்து புதுவைக்கு மாநில அந்தஸ்து பெற முயற்சி செய்திருக்கலாம். முதலமைச்சர் ரங்கசாமி இந்தக் கூட்டத்தில் பங்கேற்று பேசியிருந்தால் பிரதமர் பதில் கூறியிருப்பார். நல்ல வாய்ப்பை ரங்கசாமி தவறவிட்டுள்ளார். இது மிகவும் துரதிஷ்டவசமானது. பா.ஜ.க-வை புறக்கணிக்கவும், தனது எதிர்ப்பைக் காட்டவும், இந்தக் கூட்டத்தை புறக்கணித்திருக்கிறார் ரங்கசாமி.

 பிரதமர் மோடி
பிரதமர் மோடி

ஆனால் இந்த நிதி ஆயோக் கூட்டம் எதிர்ப்பை பதிவு செய்யும் கூட்டம் அல்ல. மாநிலத்தின் பிரச்னைகளை எழுப்ப வேண்டிய கூட்டம். புதுவை மக்கள் மத்தியில் இந்தக் கூட்டத்தில் பங்கேற்காததற்கு பகிரங்கமாக ரங்கசாமி மன்னிப்பைக் கேட்க வேண்டும். ஒரு கூட்டத்துக்கும் ரங்கசாமி செல்வதில்லை. புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு ரங்கசாமி உறுதுணையாக இல்லை. அதை புதுச்சேரி மக்கள் இதை புரிந்துகொள்ள வேண்டும். என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க கூட்டணி ஆட்சி ஆரம்பத்திலேயே மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளது. முதல்வர் ரங்கசாமி நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காதது உண்மையில் கண்டனத்துக்குரியது" என்று பேசியிருக்கிறார்.

நிதி ஆயோக் கூட்டம்: `ஆக்கப்பூர்வ ஒத்துழைப்பு டு நீட் எதிர்ப்பு...' - முதல்வர் விஜய் பேசியது என்ன?

நிதி ஆயோக் கவுன்சிலின் 11-வது கூட்டம் டெல்லி ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் உள்ள கலாசார மையத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை முதல் மாலை வரை நடந்தது. இந்தக் கூட்டத்துக்கு பிரதமர் மோடி தலைமை தாங்கினார். இதில... மேலும் பார்க்க

மயிலாடுதுறை: `ஓப்பன் பார்'ஆக மாறிய பஸ் ஸ்டாப்; அச்சத்தில் மக்கள்... நடவடிக்கை எடுக்குமா அரசு?!

மயிலாடுதுறை மாவட்டம், கூறைநாடு கடைவீதி பகுதியில் மதுபானக்கடை ஒன்று, சுமார் ஒன்பது ஆண்டுகளுக்கு மேலாகச் செயல்பட்டு வருகிறதுகூறைநாடு பகுதியானது பல்வேறு ஜவுளிக்கடைகள், திருமண மண்டபங்கள், பள்ளிக்கூடங்கள்,... மேலும் பார்க்க

அறிவிக்கப்படாத மின்வெட்டு: 'மக்கள் கேட்கும் கேள்வி இதுதான்' - எடப்பாடி பழனிசாமி!

தவெக அரசு ஆட்சி அமைத்ததிலிருந்து தமிழ்நாட்டில் தொடர்ந்து மின்வெட்டு சம்பவங்கள் அதிகரித்திருக்கின்றன என்கிற குற்றச்சாட்டு அதிகரித்துள்ளது. இது தொடர்பாக தினம் ஒரு செய்தி வந்துகொண்டே இருக்கிறது. இந்த நில... மேலும் பார்க்க

``KG படிக்கும் குழந்தை பேசுவதைப் போல..." - திமுக-வை சாடும் காங்கிரஸ் அமைச்சர் விஸ்வநாதன்!

தமிழ்நாட்டிலிருந்து நாடாளுமன்றத்துக்கு தவெக அரசால் தேர்வு செய்யப்பட்ட காங்கிரஸ் மேலிடப் பொருப்பாளர் பிரவீன் சக்ரவர்த்தி சென்னை தி.நகரில் உள்ள முன்னாள் முதல்வர் காமராஜர் இல்லத்துக்கு சென்றிருந்தார். அங... மேலும் பார்க்க

'நல்ல கேள்வி.. அடுத்த கேள்வி! - டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை குறித்து RTI-யில் கிடைத்த விநோத பதில்!

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை எத்தனை? அவற்றில் பள்ளி, கல்லூரிகளின் அருகிருந்த கடைகள் எத்தனை? அவற்றுள் எத்தனை கடைகள் மூடப்பட்டிருக்கின்றன? போன்ற தகவல்களை சமூக ஆர்வலர் ஒருவர் RTI மூலம் டா... மேலும் பார்க்க

`தளபதி படம் பார்ப்பீங்களா?’ - அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வகுப்பெடுத்து ரீல்ஸ் போட்ட தவெக நிர்வாகி!

விழுப்புரம் மாவட்டம், மாம்பழப்பட்டு பகுதியில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப்பள்ளியில், சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். நேற்று முன் தினம் பத்துக்கும் மேற்பட்ட தன்னுடைய ஆதரவாளர்க... மேலும் பார்க்க