செய்திகள் :

டூவீலரில் பயணித்தவர்கள் மீது மோதிய கார்; மூவர் உயிரைப் பறித்த கோர விபத்து - ஏர்வாடி அருகே சோகம்!

post image

ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி பகுதியைச் சேர்ந்தவர் லாடசாமி. இவருடைய மகள் பஞ்சவர்ணம் மற்றும் மருமகன் புல்லாணி. இவர்கள் மூவரும் இருசக்கர வாகனத்தில் கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக நேற்றைய தினம் ஏர்வாடி நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.

கொம்பூதி சாலை அருகே இவர்கள் வந்து கொண்டிருந்தனர். அப்போது, எதிர் திசையில் இருந்து அதிவேகமாக வந்த கார் ஒன்று, எதிர்பாராதவிதமாக இவர்களது இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது.

விபத்தில் பலியானவர்கள்

இந்த கோர விபத்தில் காரின் முன்பகுதி இருசக்கர வாகனத்தில் மோதிய வேகத்தில் டூவீலரில் பயணித்த மூவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டனர். இதனால் டூவீலரில் பயணித்த லாடசாமி, பஞ்சவர்ணம், புல்லாணி ஆகிய மூவருக்கும் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தனர்.

விபத்து குறித்து தகவலறிந்த ஏர்வாடி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, விபத்தில் சிக்கி உயிரிழந்த மூவரின் உடல்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . இந்த கோர விபத்து குறித்து ஏர்வாடி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து,விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்துக்குள்ளான டூவீலர்

சுட்டெரிக்கும் வெயில்... தீர்ந்த குடிநீர்: சஹாரா பாலைவனத்தில் 49 உயிர்களைக் குடித்த லாரி ரிப்பேர்!

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரின் சஹாரா பாலைவனப் பகுதியில், பயணம் செய்த லாரி பழுதடைந்ததால் குடிக்கத் தண்ணீரின்றி தாகத்தால் தவித்து 49 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.மாலி ... மேலும் பார்க்க

டெல்லி ஹோட்டல் தீ விபத்து: 'மின்சாரத்தைத் துண்டித்ததால்...' - பல உயிர்களைக் குடித்த அலட்சியம்

டெல்லியில் உள்ள மால்வியா நகரில் இருக்கும் ப்ளோரிஷ் இன் ஹோட்டலில் புதன்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டு ஒன்பது இந்தியர்கள், 12 வெளிநாட்டினர் உட்பட 21 பேர் உயிரிழந்தனர். இது குறித்து போலீஸாரும், தீயணைப்பு... மேலும் பார்க்க

முதியோர் இல்லத்தில் தீ விபத்து: நள்ளிரவில் சூழ்ந்த தீ; 12 முதியவர்கள் பலி! - இயக்குநர் கைது!

மேற்கு இலங்கையில் உள்ள முதியோர் இல்லம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 12 முதியவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 8 பேர் படுகாயமடைந்துள்ளதாக இலங்கை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.அங்குருவதோட்ட... மேலும் பார்க்க

பீகார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அதிகாலையில் தீ விபத்து: 4 நோயாளிகள் உயிரிழப்பு

டெல்லியில் நேற்று ஹோட்டலில் தீவிபத்து ஏற்பட்டு 21 பேர் உயிரிழந்த நிலையில், இன்று பீகார் மருத்துவமனையில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. பீகாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 4 நோய... மேலும் பார்க்க

`அதிக நாள் இருக்க மாட்டார்' - மூத்தவருடன் நேரம் செலவிட வந்து, டெல்லி தீ விபத்தில் பலியான 8 பேர்

டெல்லியின் தெற்கு பகுதியில் உள்ள மால்வியா நகரில் ஹோட்டல் ஒன்றில் நேற்று திடீரென தீப்பிடித்துக்கொண்டதில் 21 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். அவர்களில் அதிகமானோர் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆவர். இந்த தீவ... மேலும் பார்க்க

பள்ளிக்கரணையில் பயங்கர தீ: காவல்துறையினர் பறிமுதல் செய்த வாகனங்கள் நிறுத்துமிடத்தில் தீ விபத்து!

சென்னை பள்ளிக்கரணையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. எங்கு? பள்ளிக்கரணையில் காவல் துறையால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் நிறுத்துமிடத்தில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது... மேலும் பார்க்க