செய்திகள் :

குன்னூர்: மலைப்பாதையில் கவிழ்ந்த ஆந்திர சுற்றுலா வாகனம்; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர் படுகாயம்

post image

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த குடும்ப உறவினர்கள் 22 பேர் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு வேன் மூலம் சுற்றுலா சென்றுள்ளனர்.

குடும்பமாக ஊட்டி, குன்னூரைச் சுற்றிப் பார்த்துவிட்டு நேற்றிரவு குன்னூர் மலைப்பாதை வழியாகச் சொந்த ஊருக்குத் திரும்ப முடிவு செய்திருக்கிறார்கள்.

நந்தகோபாலா பாலம் அருகில் சென்றுக் கொண்டிருந்த இவர்களின் சுற்றுலா வாகனம் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியிருக்கிறது.

ஆம்புலன்ஸ்
ஆம்புலன்ஸ்

இதில் தூக்கி எறியப்பட்ட பயணிகள் அலறித் துடித்துள்ளனர். விபத்தைக் கண்டுப் பதறிய சக வாகன ஓட்டுநர்கள், இவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் குன்னூர் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து குறித்து குன்னூர் காவல்துறையினர், "பெண்கள், சிறுவர்கள் என வேனில் பயணம் செய்த 22 சுற்றுலாப் பயணிகளில் 18 பேருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது.

இதில் 14 பேருக்குப் படுகாயம். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்துக்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம். மலைப்பாதைகளில் கூடுதல் கவனத்துடன் வாகனங்களை இயக்க வேண்டும்" என்றனர்.

கரூர்: லாரி மீது கார் மோதி விபத்து; 8 மாத கர்ப்பிணிப் பெண் உட்பட 3 பேர் பலியான சோகம்

உசிலம்பட்டியைச் சேர்ந்த அரவிந்த், பெங்களூரில் முறுக்கு தயாரித்து விற்பனை செய்யும் தொழிற்சாலை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில், அவர் தனது சொந்த ஊரான உசிலம்பட்டி நோக்கி காரில் குடும்பத்துடன் திரும்பி... மேலும் பார்க்க

டூவீலரில் பயணித்தவர்கள் மீது மோதிய கார்; மூவர் உயிரைப் பறித்த கோர விபத்து - ஏர்வாடி அருகே சோகம்!

ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி பகுதியைச் சேர்ந்தவர் லாடசாமி. இவருடைய மகள் பஞ்சவர்ணம் மற்றும் மருமகன் புல்லாணி. இவர்கள் மூவரும் இருசக்கர வாகனத்தில் கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக நேற்றைய தினம் ஏர்... மேலும் பார்க்க

சுட்டெரிக்கும் வெயில்... தீர்ந்த குடிநீர்: சஹாரா பாலைவனத்தில் 49 உயிர்களைக் குடித்த லாரி ரிப்பேர்!

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரின் சஹாரா பாலைவனப் பகுதியில், பயணம் செய்த லாரி பழுதடைந்ததால் குடிக்கத் தண்ணீரின்றி தாகத்தால் தவித்து 49 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.மாலி ... மேலும் பார்க்க

டெல்லி ஹோட்டல் தீ விபத்து: 'மின்சாரத்தைத் துண்டித்ததால்...' - பல உயிர்களைக் குடித்த அலட்சியம்

டெல்லியில் உள்ள மால்வியா நகரில் இருக்கும் ப்ளோரிஷ் இன் ஹோட்டலில் புதன்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டு ஒன்பது இந்தியர்கள், 12 வெளிநாட்டினர் உட்பட 21 பேர் உயிரிழந்தனர். இது குறித்து போலீஸாரும், தீயணைப்பு... மேலும் பார்க்க

முதியோர் இல்லத்தில் தீ விபத்து: நள்ளிரவில் சூழ்ந்த தீ; 12 முதியவர்கள் பலி! - இயக்குநர் கைது!

மேற்கு இலங்கையில் உள்ள முதியோர் இல்லம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 12 முதியவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 8 பேர் படுகாயமடைந்துள்ளதாக இலங்கை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.அங்குருவதோட்ட... மேலும் பார்க்க

பீகார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அதிகாலையில் தீ விபத்து: 4 நோயாளிகள் உயிரிழப்பு

டெல்லியில் நேற்று ஹோட்டலில் தீவிபத்து ஏற்பட்டு 21 பேர் உயிரிழந்த நிலையில், இன்று பீகார் மருத்துவமனையில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. பீகாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 4 நோய... மேலும் பார்க்க