செய்திகள் :

மாணவர்கள் போராட்டம்: ``அனைத்தும் நியாயமான கேள்விகள்" - கைதுக்குப் பிறகு ராகுல் காந்தி வீடியோ!

post image

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் உடனடியாக விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேற்று காலை மக்களவைச் சபாநாயகரைச் சந்தித்துப் பேசினார். அப்போது, மாணவர்களுக்கு நேர்ந்த அநீதி குறித்து அவையில் விவாதிக்க அனுமதிப்பது மிகவும் அவசியம் எனக் வலியுறுத்தினார். அதற்கு, அரசின் அனுமதி பெற வேண்டும் என சபாநாயகர் தெரிவித்த நிலையில், அரசிற்கு இச்சம்பவம் குறித்து விவாதிக்க எந்தவொரு விருப்பமும் இல்லை என்பது அடுத்தடுத்த நிகழ்வுகள் மூலம் தெளிவானது.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

அரசு விவாதத்திற்கு மறுத்ததைத் தொடர்ந்து, நீட் விவகாரத்தையும் மாணவர்களின் பிரச்சினைகளையும் தேசிய அளவுக் கவனத்திற்குக் கொண்டுவரும் நோக்கில், டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் இல்லம் எதிரே எதிர்க்கட்சிகள் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டன. இந்தப் போராட்டத்தின் போது ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

அதைத் தொடர்ந்து ராகுல் காந்தி தன் எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், ``இந்தியக் கல்வி முறை ஏன் சீர்குலைந்து வருகிறது? வினாத்தாள்கள் ஏன் மீண்டும் மீண்டும் கசிகின்றன? இந்தியாவில் கல்வி ஏன் இவ்வளவு விலை உயர்ந்ததாக மாறியுள்ளது? பிள்ளைகளின் படிப்புக்காகக் குடும்பங்கள் ஏன் தங்களை நிதி ரீதியாக அழித்துக்கொள்ள வேண்டியுள்ளது? இவை அனைத்தும் நியாயமான கேள்விகள். இதைக் கேட்பதில் எந்தத் தவறும் இல்லை. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் உடனடியாகத் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களைத் தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் உடனடியாகத் திரும்பப் பெறப்பட வேண்டும். மேலும், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இதுகுறித்து நாளை விரிவான விவாதம் நடத்தப்பட வேண்டும். முழு எதிர்க்கட்சியும் நாட்டின் மாணவர்களுடன் உறுதியாக நிற்கிறது. தேர்வு முறை மற்றும் கல்வி முறையில் முழுமையான சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். மாணவர்களின் குரலுக்காகவும், அவர்களின் பிரகாசமான எதிர்காலத்திற்காகவும் எங்கள் போராட்டம் தொடர்ந்து நீடிக்கும்" என உறுதிபடத் தெரிவித்தார்.

சென்னை மாணவர்கள் போராட்டம்: வலுகட்டாயமாக அப்புறப்படுத்திய காவல்துறை; களத்தில் என்ன நடந்தது?

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பல்வேறு குளறுபடிக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் காக்ரோச் ஜனதா கட்சியினர் இரவிலும் தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர். அதேபோல, தமிழ்நாட்டிலும் ஜூலை 22-ந... மேலும் பார்க்க

மாணவர்கள் போராட்டம்: மௌனம் கலைத்த கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்! - என்ன சொல்கிறார்?

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பல்வேறு குளறுபடிகளுக்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும் என்றும், கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தி டெல்லி... மேலும் பார்க்க

மாணவர்கள் போரட்டம்: மூக்கில் ரத்தம்; குண்டுகட்டாக கைது செய்யப்பட்ட ராகுல் காந்தி! - என்ன நடந்தது?

காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக, டெல்லி 10, ராஜாஜி மார்க்கில் உள்ள அவரது இல்லத்திற்கு காங்கிரஸ் கட்சி எம்.பி-க்கள் அழைக்கப்பட்ட... மேலும் பார்க்க

"டாஸ்மாக்கில் பாட்டலுக்கு 10 ரூபாய் வாங்குவது குறைந்துள்ளது" - அமைச்சர் விக்னேஷ் தகவல்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மதுவிலக்குத் துறை அமைச்சர் விக்னேஷ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், “போதையில்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்பது இன்... மேலும் பார்க்க

"16 வருச உழைப்புக்குக் கிடைச்ச அங்கீகாரம்" - வீட்டு வசதி வாரியத் தலைவர் சிவா நெகிழ்ச்சி

வீட்டு வசதி வாரியத்தின் தலைவராக தவெக நிர்வாகியான சிவாவை நியமித்து நியமன ஆணையையும் வழங்கியிருக்கிறார் முதல்வர் விஜய்.Sivaசிவா, தவெகவின் பெரம்பூர் தொகுதி மாவட்டச் செயலாளர். சென்னையிலேயே அதிகமாக பெரம்பூர... மேலும் பார்க்க

டெல்லி மாணவர்கள் போராட்டம்: ``தவெக மீது சேறு வாரி இறைப்பதை நிறுத்திக்கொள்ளுங்கள்" - தவெக

நீட் உள்ளிட்ட அரசுத் தேர்வுகளின் வினாத்தாள் கசிவு, தேர்வு குளறுபடி என மத்திய அரசின் செயல்பாடுகள் தொடர்ந்து விமர்சனத்துக்குள்ளானது. இந்த நிலையில், காக்ரோச் ஜனதா பார்ட்டி எனும் இளைஞர் அமைப்பு, அரசுத் தே... மேலும் பார்க்க