செய்திகள் :

மாண்புமிகு இயற்கை வளங்கள் அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபு அவர்களுக்கு பாராட்டு விழா!

post image

காரைக்குடி வர்த்தக மற்றும் தொழில்துறை சங்கம் (Chamber of Commerce and Industries, Karaikudi) சார்பில், இயற்கை வளங்கள் மற்றும் கனிம வள துறை அமைச்சர் மாண்புமிகு டாக்டர் டி.கே. பிரபு அவர்களுக்கு பாராட்டு விழா காரைக்குடியில் சிறப்பாக நடைபெற்றது.

தமிழக முதலமைச்சர் திரு.C. ஜோசப் விஜய் அவர்களின் தலைமையிலான அமைச்சரவையில் சிறப்பாக பணியாற்றி வரும் அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபு அவர்களின் மக்கள் நலப் பணிகள், நகர்ப்புற வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் நிர்வாகத் திறனைப் பாராட்டும் வகையில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

நிகழ்ச்சியில் வர்த்தக மற்றும் தொழில்துறை சங்க நிர்வாகிகள், தொழிலதிபர்கள், வணிகர்கள், பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். அவர்களுடன் இணைந்து SLN. பெரியண்ணன், ASP முருகேசன், சண்முகநாதன் , நாகநாதன் மற்றும் ஶ்ரீ விசாலம் சிட் பண்டு லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர் உமாபதி அவர்களும் இணைந்து அமைச்சருக்கு நினைவுப் பரிசு வழங்கி, பொன்னாடை அணிவித்து வாழ்த்துகள் தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் தொழில் வளர்ச்சி, வணிக மேம்பாடு, தொழில் முனைவோருக்கான அரசின் திட்டங்கள் மற்றும் காரைக்குடி உள்ளிட்ட சிவகங்கை மாவட்ட வளர்ச்சி குறித்து கருத்துகள் விவாதிக்கப்பட்டது. நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்று, அனைவரின் பாராட்டையும் பெற்று இனிதே நிறைவுற்றது.

விஜய் அரசின் முதல் பட்ஜெட் விரைவில் தாக்கல் - ஒப்புதல் அளிக்க கூடுகிறது தமிழக அமைச்சரவை!

தமிழக அமைச்சரவைக் கூட்டம் வரும் ஜூலை 16-ஆம் தேதி காலை 10:30 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் தமிழக அரசின் முதல் முழுமையான நிதிநிலை அறிக்... மேலும் பார்க்க

லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் அருண் ஐ.பி.எஸ் பணியிட மாற்றம்; போலீஸ் அகாடமி இயக்குநராக நியமினம்!

சென்னை மாநகரக் காவல் ஆணையராக இருந்த அருண் ஐ.பி.எஸ்-ஸை தேர்தல் நேரத்தில், இந்திய தேர்தல் ஆணையம் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி, நடவடிக்கை மேற்கொண்டிருந்தது. அந்தப் பதவிக்கு ஏ.டி.ஜி.பி அந்தஸ்தில் இர... மேலும் பார்க்க

மீண்டும் பற்றி எரியும் நேபாள் - தேர்ந்தெடுத்த அரசுக்கு எதிராகவே போராடும் Gen Z | என்ன காரணம்?

ஒரு தீப்பொறி ஒரு பெருங்காட்டை எரிப்பதற்கு போதுமானது என்பார்கள். அதுபோல, நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவில் 25 வயது இளைஞர் ஒருவரின் தற்கொலை, ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கி, மக்கள் போராட்டத் தீயை மூட்டி... மேலும் பார்க்க

`இந்து ராஷ்டிரத்தால் யாருக்கும் ஆபத்தில்லை; நம் மூதாதையர் ஒன்றே'- ராம்தேவ் பேச்சால் கிளம்பிய சர்ச்சை

'இந்து ராஷ்டிரா' என்ற கருத்தைக் கண்டு யாரும் பயப்படத் தேவையில்லை என்றும், இந்தியாவில் முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றும் யோகா குரு பாபா ராம்தேவ் கூறியுள்ளார். "நம்... மேலும் பார்க்க

துணைவேந்தர் தேடல் : 'மாநில உரிமைகளைத் தமிழக அரசு தாரை வார்க்கக் கூடாது!' - அன்புமணி கண்டனம்

தமிழ்நாட்டில் உள்ள மாநில அரசுப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களைத் தேர்ந்தெடுக்கும் தேடல் குழுவில் பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) பிரதிநிதியைச் சேர்ப்பதற்கான தமிழக அரசின் சட்டத் திருத்த முயற்சியை... மேலும் பார்க்க

`` `கொத்து புரோட்டா' என அநாகரிகமாகப் பேசுகிறார்; இது தொடந்தால்..!" - ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை!

தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ``முதல்வர் விஜய் கரூர் சம்பவம் குறித்துப் பேசிய பேச்சுகள் அனைத்தும் உண்மைக்கு மாறாகவும், வழக்கைப் பாதிக்கக... மேலும் பார்க்க