செய்திகள் :

மிதுனம்: `எதிர்பாராத பண வரவு; வீண் வாக்குவாதங்கள் வேண்டாம்’ | 2026 வாக்கிய சனிப்பெயர்ச்சி பலன்கள்

post image
மிதுன ராசிக்கு அதிபதி புதன். பொதுவாகவே ராசிப்படி உங்களுக்கு எச்சரிக்கையுடன் பழகும் பாங்கும், பொருளீட்ட பல வழிகளைத் தேர்ந்தெடுக்கும் துணிவும் இருக்கும். வீடு-வாகனம் போன்றவற்றை முழுமையாக அனுபவிக்கும் யோகம் பெற்றவர் நீங்கள்.
மிதுனம் - வாக்கிய சனிப்பெயர்ச்சி பலன்கள் 2026

மிதுன ராசிக்காரர்களுக்கான 11 பலன்கள்:

1. உங்கள் ராசிக்கு, 10-ம் வீட்டில் சனி அமர்கிறார். எதிலும் நல்லதே நடக்கும். இதுவரையிலும் ஏதேதோ காரணங்களால் தடைப்பட்டுக் கொண்டிருந்த வேலைகள் இனி பூர்த்தியாகும். பூர்விகச் சொத்துப் பிரச்னைகளில் நல்ல தீர்வு கிடைக்கும்.

2. வீடு கட்டுவதற்கு வங்கிக்கடன், குழந்தைப் பாக்கியம் எதிர்பார்த்திருக்கும் அன்பர்களுக்கு குழந்தை வரம், உறவுகளிடையே இணக்கம், சொந்த ஊரில் மதிப்பு - அந்தஸ்து ஆகிய அனைத்து விஷயங்களும் கிடைக்கும் காலம் இதுவாக இருக்கும்.

3. இந்தச் சனிப்பெயர்ச்சியில் வரும் ஏப்ரல்-2 வரை குடும்பத்தில் கவனம் தேவை. உங்களின் பாதகாதிபதியான குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் சனி சஞ்சரிக்கும் காலம் என்பதால், வீட்டில் வீண் வாக்குவாதங்கள் வேண்டாம். விலையுயர்ந்த பொருள்களைக் கவனமாகக் கையாளுங்கள்.

வாக்கிய பஞ்சாங்க சனிப்பெயர்ச்சி பலன்கள் 2026 - மிதுனம்

4. சனி பகவான் உத்திரட்டாதியில் பயணிக்கும் காலமான 2.4.2026 முதல் 14.4.2027 வரை, எதிர்பாராத பண வரவு, எடுத்த வேலையில் வெற்றி உண்டு. வெளிநாட்டு நண்பர்கள் உறவுகள் மூலம் ஆதாயம் கிடைக்கும். புதிய சொத்து வாங்குவீர்கள். பிள்ளைகளுக்குத் தடபுட லாக திருமணம் முடியும்.

5. எனினும் சனி பகவானின் வக்ர சஞ்சார காலத்தில் 15.7.2026 முதல் 30.11.2026 வரை மற்றும் 28.7.2027 முதல் 13.12.2027 வரை அலைச்சல், காரியத்தடைகள் வந்துபோகும். செலவுகளைக் கட்டுப்படுத்துங்கள். யாரையும் விமர்சித்துப் பேசவேண்டாம்.

6. இந்தச் சனிப்பெயர்ச்சிக் காலத்தில் சனி பகவான் உங்கள் ராசிக்கு 4, 7 மற்றும் 12-ம் வீட்டைப் பார்க்கிறார். ஆகவே, தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. தாய்வழியில் சொத்துப் பிரச்னை தலைதூக்கும். மனைவியுடன் வீண் வாக்குவாதங்கள் வந்து போகும். அவருக்குக் கர்ப்பப்பைக் கோளாறு, சிறுசிறு அறுவை சிகிச்சைகள் வந்து நீங்க வாய்ப்பு உண்டு. சுப விரயங்கள் வரக்கூடும்.

7. இந்த ராசியைச் சேர்ந்த பெண்களுக்குக் குடும்பத்தில் அமைதி திரும்பும். பணிக்குச்செல்லும் பெண்களுக்குப் பதவி உயர்வு கிடைக்கும். எதிர்பார்த்த சலுகைகளும் வந்து சேரும்.

8. வியாபாரத்தில், புதுப் பாய்ச்சல் காட்டுவீர்கள். எனினும் புது முதலீடுகளில் கவனம் தேவை.போட்டிகளை முறியடிப்பீர்கள். பழைய கடையைப் புதுப்பித்து விரிவுபடுத்துவீர்கள்.

9. ஒருசிலருக்குப் பெரிய நிறுவனத்துடன் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். கண்ணாடி, ஆடை, கெமிக்கல் வகைகளால் லாபம் அடைவீர்கள்.

10. உத்தியோகத்தில், இப்போது சனி பகவான் ராசிக்கு 10-ம் வீட்டில் வந்து அமர்வதால், வேலைச்சுமை அதிகரிக்கத்தான் செய்யும். எனினும், மேலதிகாரி ஆதரவாக இருப்பார். உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். மதிப்பு - மரியாதை கூடும்

11. ஒருசிலருக்குப் பணியில் திடீர் இடமாற்றம் உண்டு. அடிக்கடி விடுப்பு எடுக்காதீர்கள். முக்கிய பதிவேடுகளைக் கவனமாகக் கையாளுங்கள். கணினித் துறையினருக்கு, அதிக சம்பளத்துடன் திடீர் இடமாற்றம் உண்டு.

மீனம்: ஜென்மச் சனி என்ன செய்யும்? சிக்கலற்ற விஷயங்கள் இவைதான் | 2026 வாக்கிய சனிப்பெயர்ச்சி பலன்கள்

2026 வாக்கிய சனிப்பெயர்ச்சி பலன்கள்மீனம்மீன ராசிக்கு அதிபதி குரு. ஆன்மிக விஷயத்தில் நாட்டம், இரக்கம், சட்டதிட்டத்தில் மதிப்பு, நாகரிகமான வாழ்வு, இப்படித்தான் வாழவேண்டும் என்பதில் பிடிப்பு, சமுதாய முன்... மேலும் பார்க்க

கும்பம்: `விலகப்போகும் சனி... வாழ்க்கை மாறுமா?' | 2026 வாக்கிய சனிப்பெயர்ச்சி பலன்கள்

2026 வாக்கிய சனிப்பெயர்ச்சி பலன்கள்கும்பம்பொதுவாகவே, கும்ப ராசிக்கு உச்சம்பெற்ற சனி உயர்வுக்குக் காரணமாவார். நீசம் பெற்றால் செவ்வாயின் பலத்தால் உயர்வை எட்டவைப்பார். கட்டுக்கோப்பான உடல், சுகாதாரமான சூழ... மேலும் பார்க்க

மகரம் : `தொட்டது துலங்கும்; சொந்தவீடு யோகம் உண்டு!' | 2026 வாக்கிய சனிப்பெயர்ச்சி பலன்கள்

2026 வாக்கிய சனிப்பெயர்ச்சிமகரம்மகர ராசியின் அதிபதி சனி. உழைப்பால் ஈட்டிய பெருமைகள், செல்வங்கள் இவர்களின் வாழ்வை வளமாக்கும். இந்த ராசிக்காரர்கள், ஒரு வேலையை ஏற்றால் முடிக்கும் வரை விடமாட்டார்கள். பொறு... மேலும் பார்க்க

தனுசு: `எதையும் சமாளிக்கும் தைரியம்; வீண் செலவுகள் வேண்டாம்!’ | 2026 வாக்கிய சனிப்பெயர்ச்சி பலன்கள்

2026 வாக்கிய சனிப்பெயர்ச்சிதனுசுதனுசு ராசிக்கு அதிபதி குரு. தனுசு ஸ்திரமும் சரமும் சம பங்கில் கலந்த ராசி. இதை `உபய ராசி’ என்று ஜோதிடம் சொல்லும். புகழ் பாடி, காக்கா பிடித்து காரியம் சாதிப்பது இவர்களுக்... மேலும் பார்க்க

விருச்சிகம்: `பணப்பை நிரம்பும்; ஆனால் இந்த விஷயங்களில் கவனம்!’ | 2026 வாக்கிய சனிப்பெயர்ச்சி பலன்கள்

2026 வாக்கிய சனிப்பெயர்ச்சி பலன்கள்விருச்சிகம்இந்த ராசியின் அதிபதி செவ்வாய். இதில் பிறந்த அன்பர்களுக்கு, எண்ணம், செயலில் ஸ்திரத்தன்மை பளிச்சிடும். எந்த விஷயத்திலும் வெற்றியை இழக்க விரும்பமாட்டார்கள். ... மேலும் பார்க்க

துலாம்: `ராஜ யோகம் காத்திருக்கிறது; வாழ்க்கை மாறும்!' | 2026 வாக்கிய சனிப்பெயர்ச்சி பலன்கள்

2026 வாக்கிய சனிப்பெயர்ச்சி பலன்கள்துலாம்இந்த ராசியின் அடையாளம் தராசு. இந்த ராசியில் சனி உச்சனாக இருப்பார். சூரியன் நீசம் பெறுவார். மென்மையான அணுகு முறை, சுயமரியாதை, செல்வாக்கைக் காப்பதில் தனிக் கவனம்... மேலும் பார்க்க