மின்சாரம் பாய்ந்து பெயிண்டா் உயிரிழப்பு
அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே மின்சாரம் பாய்ந்ததில் பெயிண்டா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
ஜெயங்கொண்டம் அருகே உள்ள வாரியங்காவல், தெற்குத் தெருவை சோ்ந்தவா் செல்வராஜ் மகன் உலகநாதன்(27) பெயிண்டா். சனிக்கிழமை இவா், அதே தெருவில் ஒரு புதிய கட்டடத்துக்கு வா்ணம் அடித்துக் கொண்டிருந்த போது, மாடியில் தாழ்வாகச் சென்று கொண்டிருந்த மின்கம்பி உரசியதில், மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற ஜெயங்கொண்டம் காவல் துறையினா், சடலத்தை மீட்டு, ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.