செய்திகள் :

மின்வாரியம்: ஒரே நேரத்தில் 700 பேருக்கு பதவி உயர்வு - தமிழக அரசு அறிவிப்பு!

post image

தமிழ்நாடு மின்வாரியத்தில் பல ஆண்டுகளாக பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதல் கோரிக்கை நிலுவையில் இருந்தது. இந்நிலையில், உதவி பொறியாளர்களாக பணியாற்றி வந்தவர்களுக்கு உதவி செயல் பொறியாளர்களாக பதவி உயர்வு அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருக்கிறது.

இதுதொடர்பாக தமிழ்நாடு மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், " தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச. ஜோசப் விஜய்யின் வழிகாட்டுதலின்படியும், எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமாரின் அறிவுறுத்தல் மற்றும் தொடர் கண்காணிப்பின் அடிப்படையிலும், தமிழ்நாடு மின்வாரியத்தில் வெளிப்படையான, மூப்பு மற்றும் தகுதி அடிப்படையிலான நிர்வாக நடைமுறைகள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

மின்வாரியம்
மின்வாரியம்

அதன் தொடர்ச்சியாக, ஒரே நேரத்தில் இவ்வளவு பெரிய அளவில் பொறியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த பதவி உயர்வின் மூலம், மின்வாரியத்தின் களப்பணிகள் மேலும் வலுப்பெறுவதுடன், எதிர்வரும் பருவ மழைக்காலங்களில் மின் விநியோகம், பராமரிப்பு, புதிய மின் இணைப்புகள், துணை மின் நிலையங்களின் செயல்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் கூடுதல் திறனுடனும், விரைவாகவும் மேற்கொள்ள இயலும் .இப்பதவி உயர்வு பெற்றுள்ள பொறியாளர்கள், தமிழ்நாட்டின் மின்கட்டமைப்பை மேலும் மேம்படுத்துவதிலும், பொதுமக்களுக்கு தடையற்ற மற்றும் தரமான மின் விநியோக சேவையை வழங்குவதிலும் முக்கியப் பங்காற்றுவார்கள் என்று தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

மின்வாரிய ஊழியர்களின் நலன் மற்றும் முன்னேற்றத்திற்கு தமிழ்நாடு அரசு தொடர்ந்து முன்னுரிமை அளித்து வருவதாகவும், நீண்டகாலமாக நிலுவையில் இருந்த பதவி உயர்வு மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் அனைத்தும் வெளிப்படையான முறையில் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 மின்வாரிய அமைச்சர் சி.டி. ஆர் நிர்மல்குமார்
மின்வாரிய அமைச்சர் சி.டி. ஆர் நிர்மல்குமார்

இந்நடவடிக்கை, தமிழ்நாடு மின்வாரியத்தில் பணியாற்றும் பொறியாளர்களின் தொழில் முன்னேற்றத்தை உறுதி செய்வதோடு, ஊழியர்களின் மன உறுதியையும், பணித் திறனையும் மேலும் உயர்த்தும் ஒரு முக்கியமான மைல்கல்லாக அமையும்" என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

"ஆட்சி அமைத்த பின் 'பாஜக' என்ற சொல்லைக்கூட உச்சரிக்காத தைரியசாலி நமது முதல்வர்" - உதயநிதி காட்டம்

மேகதாது விவகாரத்தில் கர்நாடகா அரசைக் கண்டித்தும், தவெக அரசு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரியும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் தஞ்சையில் ஆர்ப்பாட்டம் இன்று (ஆகஸ்ட்.3) நடைபெற்று... மேலும் பார்க்க

பாலியல் துன்புறுத்தல் வழக்கு: பிரிஜ் பூஷன் சரண் சிங் விடுதலை; பட்டாசு வெடித்து வரவேற்ற பாஜக-வினர்

இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் (WFI) முன்னாள் தலைவரும், பா.ஜ.க-வின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரிஜ் பூஷன் சரண் சிங், பெண் மல்யுத்த வீராங்கனைகள் தொடுத்த பாலியல் துன்புறுத்தல் வழக்கிலிருந்து ட... மேலும் பார்க்க

'விஜய்யின் ஆன்லைன் தளபதி; ஜெகதீஸின் பரிந்துரை!'- TN Fact Check Unit இன் தலைவராக்கப்பட்ட 'குரு' யார்?

தமிழக அரசின் 'உண்மை சரிபார்ப்புக் குழு'வின் பெயரை 'தகவல் நம்பகத்தன்மை சரிபார்ப்புக் குழு' எனப் பெயர் மாற்றி 'குரு' என்பவரை அதற்கு தலைவராக நியமித்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. யார் இந்த குரு?அம... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம்: "உடனே தீபம் ஏற்ற இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது!" – உச்ச நீதிமன்றம்!

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றக் கோரிய வழக்கில், உயர் நீதிமன்ற உத்தரவை உடனடியாகச் செயல்படுத்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் அதிர... மேலும் பார்க்க

தி.மு.க எம்.எல்.ஏ மார்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்; விதிக்கப்பட்ட நிபந்தனைகள் என்னென்ன?

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நடந்த கட்சி பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன், ““இவ்வளவு கேவலமான முதல்வரை தமிழகம் மட்டுமல்ல, இந்திய... மேலும் பார்க்க

மேகதாது: ``போராடிப் பெற்ற தீர்ப்பைக்கூட இந்த அரசால் காப்பாற்ற முடியாத நிலை" - எடப்பாடி பழனிசாமி

தீரன் சின்னமலையின் நினைவு நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு மரியாதை செலுத்திய பின்னர், அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது, ``தீரன் சின்னமலையி... மேலும் பார்க்க