விகடன் செய்தி எதிரொலி: பயன்பாட்டுக்கு வந்த பூம்புகார் கடற்கரை கழிவறை!
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு: பிற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழகம் எந்த இடத்தில் இருக்கிறது?
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக தொடர்ந்து வளர்ந்துகொண்டு வருகிறது. இன்றைக்கு இந்தியாவில் படித்த முதலீட்டாளர்கள் பலர், அரசினால் கண்காணிக்கப்படக் கூடிய ஒரு முதலீட்டில் முதலீடு செய்ய நினைக்கும்போது அவர்கள் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டையே தேர்வு செய்துவருகின்றனர். இதனால்தான் ஆண்டுதோறும் இந்த முதலீட்டில் முதலீடாகும் தொகை தொடர்ந்து குறிப்பிடத்தகுந்த அளவு அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் உள்ள மாநிலங்களில் மியூச்சுவல் ஃபண்டில் அதிகளவு முதலீடாகி வரும் மாநிலங்களில் முதலிடத்தில் இருப்பது மகாராஷ்ரா மாநிலம்தான். இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடாகும் மொத்த பணத்தில் ரூ.33.33 லட்சம் கோடி இந்த மாநிலத்தில் மட்டுமே முதலீடாகிறது.

இந்திய மாநிலங்களில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது டெல்லி யூனியன் பிரதேசம். இங்கு இருந்து மட்டும் ரூ.8.49 லட்சம் கோடி முதலீடாகிறது.
மூன்றாம் இடத்தில் இருக்கிறது கர்நாடகா மாநிலம். இந்த மாநிலத்தில் இருந்து ரூ.5.86 லட்சம் கோடி முதலீடாகிறது. நான்காம் இடத்தில் குஜராத் மாநிலம் மூலம் ரூ.5.69 லட்சம் கோடியும், ஐந்தாம் இடத்தில் மேற்கு வங்க மாநிலம் ரூ.4.02 லட்சம் கோடியும் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடாகிறது.
நமது தமிழகத்தைப் பொறுத்தவரை, ரூ.3.73 லட்சம் கோடி மியூச்சுவல் ஃபண்டில் முதலீடாகிறது. தமிழகத்திற்கு அடுத்து உத்தரப்பிரதேசம் ரூ.3.52 லட்சம் கோடி மியூச்சுவல் ஃபண்டில் முதலீடாகிறது.
மியூச்சுவல் ஃபண்டில் முதலீடாகும் மொத்த முதலீட்டில் கிட்டத்தட்ட 71% மகாராஷ்ரா, டெல்லி, கர்நாடகா, குஜராத், மேற்கு வங்காளம் ஆகிய ஐந்து மாநிலங்களின் மூலமாக மட்டுமே வருவது குறிப்பிடத்தக்கது. இவற்றில் மும்பை, டெல்லி ஆகிய இரு மாநிலங்களில் பங்குச்சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடாகிவரும் முதலீடு கடந்த ஆண்டைவிட முறையே 40%, 50% அதிகரித்து வருகிறது. ஆனால், கர்நாடகா, குஜராத் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் முறையே 64%, 67%, 65% அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் பங்குச்சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டில் கடந்த ஆண்டைவிட 59% அளவுக்கு மட்டுமே அதிகரித்து வருகிறது.

இந்தியாவின் மற்ற மாநிலங்களில் எல்லாம் பங்குச்சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் அதிகம் முதலீடு செய்யப்பட்டு வரும் நிலையில், மகாராஷ்ரா மாநிலத்தில் மட்டும் கடன் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் 60 சதவிகிதமும் பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் 40 சதவிகிதமும் முதலீடு செய்யப்படுகிறது. இது வேறு எந்த மாநிலங்களிலும் இல்லாத வித்தியாசமாகும்!
'லாபம்' வழங்கும் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் மூலம் ₹1 கோடி சேர்ப்பது எப்படி? - 40+ வயதினருக்கான சிறப்பு ஆன்லைன் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுங்கள்!
வரும் புதன், ஜூலை 8 மாலை 7 மணிக்கு. இப்போதே பெயரை முன்பதிவு செய்ய: https://labham.money/events/webinar-jul08-2026?utm_source=vikatan_com&utm_medium=article&utm_campaign=webinar_jul08_2026
வெளிநாடு மற்றும் இந்தியாவில் வசிப்பவர்கள் தங்கள் முதலீட்டை சரியானபடி அமைத்துக்கொள்ள ஆலோசனை பெற, பின்வரும் லிங்கினைக் கிளிக் செய்து, தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ளுங்கள்...
வெளிநாட்டில் வசிப்போருக்கு:https://calendly.com/calendar-labham/schedule-call-with-labham-nri
இந்தியாவில் வசிப்போருக்கு:https://calendly.com/calendar-labham/schedule-call-with-labham-vikatan-com
Labham Youtube Channel: www.youtube.com/@labham_money
Labham Website: https://labham.money/tamil
முதலீட்டாளர்களின் கவனத்துக்கு:
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. இதில் முதலீடு செய்யும்முன் திட்டம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கவனமாகப் படித்துப் பார்த்து, சுயமாக முடிவெடுக்க வேண்டுகிறோம்!


















