செய்திகள் :

மீண்டும் ஹார்முஸ் நீர்ச்சந்தியில் ஈரான் - அமெரிக்கா தாக்குதல்: 'முட்டாள்தனம்' - ட்ரம்ப் எதிர்ப்பு

post image

சரியாக 10 நாள்களுக்கு முன்பாக (ஜூன் 10, 2026), ஈரான் - அமெரிக்கா புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

அதன்படி, ஈரான், அமெரிக்கா இரண்டும் பரஸ்பர தாக்குதலை இத்தனை நாள்களுக்கு நிறுத்தி வைத்திருந்தது.

ஆனால், லெபனானை இஸ்ரேல் தாக்கியதையடுத்து கடந்த 20-ம் தேதி

ஹார்முஸ் நீர்ச் சந்தியை மீண்டும் மூடியது ஈரான்.

தங்களின் அனுமதி இல்லாமல் ஹார்முஸில் போக்குவரத்து இருக்கக்கூடாது. மீறினால், கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று வேறு எச்சரிக்கப்பட்டிருந்தது.

ஹார்முஸ் நீர்ச்சந்தி
ஹார்முஸ் நீர்ச்சந்தி

இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை (ஜூன் 25, 2026), கிட்டத்தட்ட 21 கப்பல்கள் ஹார்முஸை அனுமதி இல்லாமல் கடந்தன என்று Kpler (கப்பல் போக்குவரத்துக்கான வலைதளம்) கூறுகிறது.

அப்படி, ஹார்முஸ் நீர்ச் சந்தியை அனுமதி இல்லாமல் கடக்க முயன்ற சிங்கப்பூர் கொடி ஏந்திய கப்பல் மீது நேற்று (ஜூன் 26, 2026) தாக்குதல் நடத்தியிருக்கிறது ஈரான்.

இதற்கு பதிலடியாக, ஈரான் மீது தாக்குதல் நடத்தியுள்ளது அமெரிக்கா.

இது குறித்து அமெரிக்க ராணுவத்தின் ஒரு பிரிவான அமெரிக்க மத்திய கட்டளையகம் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது...

"நேற்று ஹார்முஸ் நீர்ச்சந்தி வழியே சென்று கொண்டிருந்த ஒரு வணிகக் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாக, அமெரிக்க மத்திய கட்டளையக (CENTCOM) படைகள் ஜூன் 26 அன்று ஈரான் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தின.

வணிகக் கப்பல்கள் மீது ஈரான் படைகள் நடத்திய இந்த அத்துமீறிய தாக்குதலானது, போர்நிறுத்த ஒப்பந்தத்தை அப்பட்டமாக மீறியுள்ளது.

அதுமட்டுமின்றி, மிக முக்கியமான சர்வதேச வர்த்தகப் பாதையான இப்பகுதியில் வணிகப் போக்குவரத்து அதிகரித்துவரும் வேளையில், ஈரானின் இத்தகைய ஆபத்தான நடவடிக்கை கப்பல் போக்குவரத்தின் சுதந்திரத்தையும் சீர்குலைத்துள்ளது".

ஈரானின் இந்தத் தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில், "ஹார்முஸ் நீர்ச்சந்தி வழியாகச் சென்று கொண்டிருந்த கப்பல்களைக் குறிவைத்து, ஈரான் இஸ்லாமியக் குடியரசு ஒரே வழியில் சென்று தாக்கும் குறைந்தது நான்கு டிரோன்களை ஏவித் தாக்கியுள்ளது.

இதில் ஒரு டிரோன், மிகப்பெரிய மற்றும் மிக அதிக மதிப்புமிக்க சரக்குக் கப்பல் ஒன்றின் மேல் தளத்தை பலமாகத் தாக்கியுள்ளது.

இதனால் கப்பலுக்குச் சேதம் ஏற்பட்ட போதிலும், அது தொடர்ந்து தனது பயணத்தைத் தொடர முடிந்தது.

மற்ற மூன்று டிரோன்களை எங்கள் படைகள் சுட்டு வீழ்த்திவிட்டன.

மிகத் தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால், இது இருதரப்புக்கும் இடையே இருந்த போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய ஒரு முட்டாள்தனமான செயலாகும்" என்று பதிவிட்டுள்ளார்.

விஜய் அரசின் முதல் பட்ஜெட் விரைவில் தாக்கல் - ஒப்புதல் அளிக்க கூடுகிறது தமிழக அமைச்சரவை!

தமிழக அமைச்சரவைக் கூட்டம் வரும் ஜூலை 16-ஆம் தேதி காலை 10:30 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் தமிழக அரசின் முதல் முழுமையான நிதிநிலை அறிக்... மேலும் பார்க்க

லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் அருண் ஐ.பி.எஸ் பணியிட மாற்றம்; போலீஸ் அகாடமி இயக்குநராக நியமினம்!

சென்னை மாநகரக் காவல் ஆணையராக இருந்த அருண் ஐ.பி.எஸ்-ஸை தேர்தல் நேரத்தில், இந்திய தேர்தல் ஆணையம் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி, நடவடிக்கை மேற்கொண்டிருந்தது. அந்தப் பதவிக்கு ஏ.டி.ஜி.பி அந்தஸ்தில் இர... மேலும் பார்க்க

மீண்டும் பற்றி எரியும் நேபாள் - தேர்ந்தெடுத்த அரசுக்கு எதிராகவே போராடும் Gen Z | என்ன காரணம்?

ஒரு தீப்பொறி ஒரு பெருங்காட்டை எரிப்பதற்கு போதுமானது என்பார்கள். அதுபோல, நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவில் 25 வயது இளைஞர் ஒருவரின் தற்கொலை, ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கி, மக்கள் போராட்டத் தீயை மூட்டி... மேலும் பார்க்க

`இந்து ராஷ்டிரத்தால் யாருக்கும் ஆபத்தில்லை; நம் மூதாதையர் ஒன்றே'- ராம்தேவ் பேச்சால் கிளம்பிய சர்ச்சை

'இந்து ராஷ்டிரா' என்ற கருத்தைக் கண்டு யாரும் பயப்படத் தேவையில்லை என்றும், இந்தியாவில் முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றும் யோகா குரு பாபா ராம்தேவ் கூறியுள்ளார். "நம்... மேலும் பார்க்க

துணைவேந்தர் தேடல் : 'மாநில உரிமைகளைத் தமிழக அரசு தாரை வார்க்கக் கூடாது!' - அன்புமணி கண்டனம்

தமிழ்நாட்டில் உள்ள மாநில அரசுப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களைத் தேர்ந்தெடுக்கும் தேடல் குழுவில் பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) பிரதிநிதியைச் சேர்ப்பதற்கான தமிழக அரசின் சட்டத் திருத்த முயற்சியை... மேலும் பார்க்க

`` `கொத்து புரோட்டா' என அநாகரிகமாகப் பேசுகிறார்; இது தொடந்தால்..!" - ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை!

தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ``முதல்வர் விஜய் கரூர் சம்பவம் குறித்துப் பேசிய பேச்சுகள் அனைத்தும் உண்மைக்கு மாறாகவும், வழக்கைப் பாதிக்கக... மேலும் பார்க்க