’மின்வெட்டு ஏற்படுவதற்கு திமுகவே காரணம்’ – அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு
முடங்கிய பேஸ்புக், இன்ஸ்டாகிராம் - இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மெட்டா சேவைகள் பாதிப்பு!
மெட்டா நிறுவனத்தின் செயலிகளான ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின் சேவை, உலகின் பல்வேறு பகுதிகளில் இன்று முடங்கியுள்ளன.
இன்று மதியம் முதல் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களில் திடீரெனத் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. செயலி மற்றும் இணையதளத்தில் இந்தப் பாதிப்பு இருக்கிறது.

பயனர்கள் பலர் தங்களது கணக்குகளை 'லாக் இன்' அல்லது 'ஃபீட் ரெஃப்ரெஷ்' செய்து பார்க்கையில் 'Unknown Error' எனக் காட்டுவதாகப் புகார்கள் எழுந்திருக்கின்றன.
நெதர்லாந்து, இங்கிலாந்து, பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் இந்தத் தொழில்நுட்பக் கோளாறு நீடித்து வருகிறது.
மெட்டா நிறுவனத்தின் பிற சேவைகளான த்ரெட்ஸ் (Threads) மற்றும் மெட்டா குவெஸ்ட் (Meta Quest) சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த முடக்கத்திற்கான துல்லியமான காரணம் என்ன என்பது குறித்தோ, இது எப்போது சரியாகும் என்பது குறித்தோ மெட்டா நிறுவனம் தரப்பில் இன்னும் அதிகாரப்பூர்வ விளக்கம் அளிக்கப்படவில்லை.





















