செய்திகள் :

'முடிந்தது பஞ்சாயத்து; காங்கிரஸூக்கு எத்தனை சீட்?' - அறிவாலயத்தில் என்ன நடந்தது?

post image

இழுபறியில் நீடித்து வந்த திமுக காங்கிரஸ் கூட்டணியின் பஞ்சாயத்துகள் அத்தனையும் ஒரு வழியாக ஓய்ந்திருக்கிறது. அறிவாலயத்தில் முதல்வர் முன்னிலையில் காங்கிரஸ் திமுகவுடன் கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறது.

Congress
Congress

திமுக - காங்கிரஸ் கூட்டணி முறிவை நோக்கி சென்ற நிலையில், டெல்லியின் உத்தரவின் பேரில் ப.சிதம்பரம் கடைசி நிமிடத்தில் முதல்வருடன் பேசி கூட்டணியை இறுதி செய்திருந்தார். இந்நிலையில், இன்று திமுக - காங் கூட்டணி கையெழுத்தாகிறது என காலையிலிருந்தே தகவல் ஓடிக்கொண்டிருந்தது. அதை உறுதிப்படுத்தும் வகையில் காங்கிரஸ் மேலிட பார்வையாளர் கிரிஷ் சோடங்கர் சென்னை வர கோவாவிலிருந்து விமான டிக்கெட்டும் புக் செய்திருந்தார்.

கிரிஷ் சோடங்கர் 3:50 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்துவிட்டார். அவரை வரவேற்க செல்வப்பெருந்தகையும் சென்றிருந்தார்.

இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக காங்கிரஸ் குழு விமான நிலையத்திலேயே காத்திருந்தது. திமுக தரப்பில் ஒரு நம்பரை சொல்ல அதற்கு டெல்லி தலைமையிடம் ஒப்புதல் வேண்டி காங்கிரஸ் குழு காத்திருந்ததாக தகவல். இந்த இழுபறி சில மணி நேரங்களுக்கு நீடித்து பரபரப்பை கூட்டியது.

Cong
Cong

நீண்ட காத்திருப்புக்கு பிறகு காங்கிரஸ் குழு அறிவாலயம் நோக்கி புறப்பட, இரவு 7:30 மணிக்கு முதல்வர் ஸ்டாலின், கனிமொழி, டி.ஆர்.பாலு போன்றோர் அறிவாலயம் வந்தனர். கிரிஷ் சோடங்கர், செல்வப்பெருந்தகை போன்றோரும் வர முதல்வர் முன்னிலையில் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.

Updates shortly

` மண்ணுக்கு போற உடம்பு; படிப்புக்கு உதவட்டுமே!'- உடல் தானப் பதிவுசெய்த அற்புதம் அம்மாள், பேரறிவாளன்

"ரொம்ப நாள் ஆசைய்யா... ஆனா யார்கிட்ட கேட்டாலும் யாராவது சொந்தக்காரங்க சாட்சிக் கையெழுத்துப் போடணும்னு சொன்னாங்க. யாரைக் கூட்டிட்டிப் போறதுன்னு தெரியாம இருந்தேன். இப்போ அறிவு இருக்கான்ல... நல்லகண்ணு அய... மேலும் பார்க்க

'மனநிறைவோடு 28 சீட்களை வாங்கியிருக்கிறோம்!' - செல்வப்பெருந்தகை ஹேப்பி!

இழுபறியில் நீடித்துக் கொண்டிருந்த திமுக - காங் கூட்டணி இறுதியாகியிருக்கிறது. காங்கிரஸூக்கு 28 சட்டமன்றத் தொகுதிகளும் 1 ராஜ்ய சபா சீட்டும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. Congமுதல்வரை சந்தித்து கூட்டணி ஒப்பந்த... மேலும் பார்க்க

'ராகுல் பனையூருக்கு வரணுமா?' - கோட்டைவிட்ட விஜய்; கொதிக்கும் கதர் சட்டைகள்; விரக்தியில் தவெக

அறிவாலயமும் சத்யமூர்த்தி பவனமும் பெரும் போராட்டத்தை கடந்து ஒருவழியாக தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டுவிட்டனர். இந்த விவகாரத்தில் இலவு காத்த கிளியாக வெறும் கையோடு நிற்பது விஜய் மட்டும்தான... மேலும் பார்க்க

"தம்பி நல்லா பேசுனாரு; கேள்விகள் நியாயமா கேட்டாரு.!" - விஜய் பேச்சு குறித்து தமிழிசை

பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், இன்று (மார்ச். 4) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.அப்போது அவரிடம் இன்று விஜய் தஞ்சாவூர் கூட்டத்தில் பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அ... மேலும் பார்க்க

'டெல்லி தலைமையின் அறிக்கைக்காக காத்திருக்கிறோம்.!' - பேச்சுவார்த்தை தாமதம் குறித்து செல்வப்பெருந்தகை

ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை ஓரங்கட்டிய காங்கிரஸ் தலைமை, 30 சட்டசபை தொகுதிகள், 2 ராஜ்யசபா சீட் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும் ஆனால், 27 சட்டசபை தொகுதிகள், 1 ராஜ்யசபா இடங்கள் மட்டுமே தர ... மேலும் பார்க்க

ஈரான் - அமெரிக்கா: இலங்கையில் இருந்து 40 கடல் மைல் தொலைவில் தாக்குதல் - பரவும் போர் பதற்றம்!

ஈரான் - அமெரிக்கா இடையே தொடர்ந்து வரும் போரில், ஈரான் அமெரிக்காவின் ராணுவ முகாம்களையும், அமெரிக்காவின் நட்பு நாடுகளில் இருக்கும் அமெரிக்க பாதுகாப்பு அமைப்புகளையும் தாக்கி வருகிறது. அமெரிக்காவும் ஈரான்... மேலும் பார்க்க