செய்திகள் :

'முதலமைச்சரின் வீட்டுக்கே சென்று கேட்டோம்.!' - 5 தொகுதிகளை ஒப்புக்கொண்டு வெதும்பிய பெ.சண்முகம்!

post image

திமுக கூட்டணியில் இழுபறியாகவே நீடித்து வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இறுதியாக திமுக வழங்குவதாக கூறிய 5 தொகுதிகளுக்கே ஒப்புதல் தெரிவித்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏன் இறங்கி வந்தது என பேசிய மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், 'கூட்டணியில் நிறைய கட்சிகள் இருப்பதால், எல்லாருக்கும் சீட்டுகளை பகிர்ந்தளிப்பதில் சிக்கல் இருக்கிறது. அதனால் நாங்கள் கேட்ட 6 தொகுதிகளிலிருந்து ஒரு தொகுதியை குறைத்துகொள்ள சொல்லி முதல்வர் கேட்டார்.

எங்களின் மாநில செயற்குழுவால் சீட் குறைப்பை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எங்களுக்கு திருப்தியில்லை. முதல்வரை அவரின் வீட்டில் சந்தித்தும் தொகுதியை குறைக்க வேண்டாம், 6 சீட்டே கொடுங்கள் எனக் கேட்டோம். அப்போதும் முதல்வர் அவர் தரப்பு சிரமங்களை சொல்லி, 5 சீட்டுகளை ஏற்றுக்கொள்ளுமாறு கூறினார்.

கூட்டணி
கூட்டணி

நாங்கள் எடுக்கும் முடிவு கூட்டணியின் ஒற்றுமையை குலைத்து, அதிமுக - பாஜக கூட்டணிக்கு சாதகமாக அமைந்துவிடக்கூடாது என்பதற்காகவே இதை ஏற்றுக்கொண்டோம். சென்னையில் ஒரு தொகுதி வேண்டுமென எங்களின் விருப்பப்பட்டியலை கொடுத்திருக்கிறோம். அதை நிறைவேற்றி கொடுக்குமாறு கேட்டிருக்கிறோம்' என்றார்

'இரட்டை இலக்க தொகுதிகள்; ராஜ்ய சபா சீட்...' - திமுக கூட்டணியில் திடீர் டிமாண்ட் ஏற்றும் திருமா!

திமுகவில் கூட்டணி கட்சிகளுடனான பேச்சுவார்த்தை இழுபறியாகவே போய் கொண்டிருக்கிறது. கறாராக பேசிக்கொண்டிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டை சரிகட்டி, 5 தொகுதிகளில் கையெழுத்து வாங்கிவிட்டது திமுக. இந்நிலையில்,... மேலும் பார்க்க

தஞ்சை: விஜய் வாகனத்தைப் பின்தொடர்ந்ததில் விபத்து: சிகிச்சையில் இருந்த கல்லுாரி மாணவர் பலி

தஞ்சாவூர் செங்கிப்பட்டி அருகே உள்ள அய்யாசாமிப்பட்டியில், கடந்த 4ம் தேதி, தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொண்டார். திருச்சிய... மேலும் பார்க்க

இறுதி வரை திக் திக்.! `புதுச்சேரியில் காங்கிரஸ் - திமுக கூட்டணி தொடர்கிறது’ - கூட்டாக அறிவிப்பு

புதுச்சேரி சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 9-ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், அதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று மாலையுடன் முடிகிறது. என்.டி.ஏ கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.கவுக்கு இடையே ... மேலும் பார்க்க

”வைத்திலிங்கம் நம்முடன் சேர்ந்திருக்கிறார்” - ஒரத்தநாடு தொகுதி நேர்காணலில் ஸ்டாலின் சொன்னது என்ன?

அதிமுகவில் சோழமண்டல தளபதியாக வலம் வந்த வைத்திலிங்கம் ஓபிஎஸ் அணியில் இருந்தார். பின்னர் அவர், திமுக-வில் சேர்ந்த பிறகு அவருடைய சொந்த தொகுதியான ஒரத்தநாடு கவனம் பெற்றது. வைத்திலிங்கம் கட்சியில் சேர்வதற்க... மேலும் பார்க்க

"5 நாள்களுக்குத் தாக்க மாட்டோம்" - ஈரான், அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை; ட்ரம்ப் என்ன சொல்கிறார்?

ஈரான் போர் நான்காவது வாரமாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. 'எப்போது இந்தப் போர் முடியும்?' என்று நினைத்துக்கொண்டிருந்தவர்கள், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அற்விப்பு ஒன்றை பகிர்ந்துள்ளார். "கடந்த இரண்டு நாள்க... மேலும் பார்க்க

'கம்யூனிஸ்ட், விசிகவை விட அதிக சீட்டுதான்(?)' - மா.செ கூட்டத்தில் என்ன பேசினார் பிரேமலதா?

திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை பரபரப்பாக நடந்து கொண்டிருக்கும் சூழலில், திடீரென மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை நடத்தியிருக்கிறார் தேமுதிகவின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த். கூட... மேலும் பார்க்க