செய்திகள் :

முதல்வரின் முகத்துக்கு நேராக திமுக எம்.எல்.ஏ சொன்ன அந்த வார்த்தை; சீறிய ஆதவ் - சலசலப்பான சட்டமன்றம்!

post image

ஆளுநர் உரையின் மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று சட்டமன்றத்தில் நடந்திருந்தது. அதில், திமுக எம்.எல்.ஏ ஆஸ்டின் முதல்வர் விஜய்யை நோக்கி வைத்த விமர்சனமும் அதற்கு அமைச்சர் ஆதவ் கொடுத்த பதிலும் அவையில் கூச்சல் குழப்பத்தை உண்டாக்கியது.

ஆஸ்டின்
ஆஸ்டின்

ஆளுநர் உரையைப் பற்றிய விவாதத்தில் திமுக எம்.எல்.ஏ ஆஸ்டின் தவெக அரசைப் பற்றியும் முதல்வர் விஜய்யை பற்றியும் பல விமர்சனங்களை முன்வைத்தார். அவரின் சில கருத்துகள் அவைக்குறிப்பிலிருந்தும் நீக்கப்பட்டன. ஆஸ்டின் பேசுகையில், 'பெண்கள் சிறு குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழலிலும் என்ன நடந்தாலும் வாயே திறக்கமாட்டேன் என முதல்வர் சரித்திர புரட்சி செய்துள்ளார்' என முதல்வர் விஜய்யை நோக்கி கூறினார்.

உடனே எழுந்த அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, 'அவையின் மாண்புக்கு புறம்பாக தொடர்ந்து முதல்வரை கொச்சைப்படுத்தும் வகையில் திமுக உறுப்பினர் பேசிவருகிறார். எங்களின் கோபத்தை தூண்ட நினைக்கிறார். எப்போது பேச வேண்டுமென எங்களின் தலைவருக்கு தெரியும். கொளத்தூரில் 10 நிமிடம் பேசியதற்கே என்ன ஆனதென்று தெரியுமல்லவா?' என ஆக்ரோஷமாக எதிர்வினையாற்றினர்.

ஆதவ் அர்ஜூனா
ஆதவ் அர்ஜூனா

இருவரும் காரசாரமாக மோதிக் கொண்டதால் இருதரப்பு எம்.எல்.ஏக்களும் மாறி மாறி கூச்சல் போட்டு வசைபாடிக் கொண்டனர்.

"மோடி, ஜின்பிங் எனக்கு பிடித்தவர்கள்; நெதன்யாகுவை கொஞ்சம் நிதானமாக.!" - ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அமெரிக்க செய்தி நிறுவனமான Axios-க்கு பிரத்யேக பேட்டி ஒன்றை கொடுத்திருக்கிறார். ஈரான் போர் தொடங்கி பல்வேறு விஷயங்கள் குறித்து பகிர்ந்திருக்கிறார் ட்ரம்ப். அந்தப் பேட்டியின் ஒரு ... மேலும் பார்க்க

குறுக்கே நிற்கும் இஸ்ரேல்: தள்ளிப்போகும் அமெரிக்கா, ஈரான் பேச்சுவார்த்தை

நேற்று முன்தினம் (ஜூன் 17), அமெரிக்கா, ஈரான் இடையே 14 புள்ளிகள் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தில் இஸ்ரேல் கையெழுத்திடவில்லை. இந்த ஒப்பந்தம் இஸ்ரேலுக்கு பிடிக்கவில்லை என்றும் தெ... மேலும் பார்க்க

'வெல்லும் வரை ஒன்றிணைந்து போராடுவோம்' - ஸ்டாலின் சொன்ன பிறந்த நாள் வாழ்த்திற்கு ராகுல் காந்தி பதில்

இன்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு பிறந்த நாள். இந்திய பிரதமர் மோடி தொடங்கி பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஆனாலும், ஒரு வாழ்த்து கொஞ்சம் முக்கியத்துவம் பெறுகிறது. ... மேலும் பார்க்க

‘தொழிலை மீட்க உதவி செய்யுங்கள்’ - அமைச்சர் கீர்த்தனாவுக்கு ஜப்பான் நபரின் வேண்டுகோள்!

ஜப்பானை சேர்ந்த ஃபுட்டோஸி இட்டோ என்பவர் மதுரையை சேர்ந்த சரவணனுடன் இணைந்து ‘ரிக் வீல்ஸ்’ என்கிற பெயரில் ரயில் பொம்மைகளை தயாரித்து விற்பனை செய்துவருகிறார். தங்களுடைய தொழில் சில நிறுவனங்களால் பாதிப்பட்டு... மேலும் பார்க்க

மேகதாது: `திமுகவை போல தவெக வெற்று நாடகங்களை நடத்தக்கூடாது’ – வானதி சீனிவாசன்

பா.ஜ.க. தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், “மேகதாது அணை திட்​டம் என் இதயத்​துக்கு நெருக்​க​மானது. மேகதாது அணை கட்ட தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜ​ய்யுடன் பேச்சு நடத்த தயா​ராக இருக்​கிறேன் என கர்... மேலும் பார்க்க