செய்திகள் :

"முதல்வர் விஜய்க்கு நீங்க கொடுக்கப்போற அடி மரண அடியாக இருக்கணும்!" - தாராபுரத்தில் மு.க.ஸ்டாலின்

post image

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதனையொட்டி, இன்று தாராபுரம் திமுக வேட்பாளர் சுகன்யாவுக்காகப் பிரசாரம் மேற்கொண்டார் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்.

பிறகு பரப்புரைக் கூட்டத்தில், தவெக தலைவர் விஜய்யைக் கடுமையாக விமர்சித்தும் பேசியிருக்கிறார்.

ஸ்டாலின் - திமுக
ஸ்டாலின் - திமுக

அவர் பேசுகையில், "பொதுத்தேர்தல் முடிந்து 5 மாசம்கூட ஆகல, அதுக்குள்ள இந்த இடைத்தேர்தல் எதுக்கு வந்துச்சு? இதற்கு காரணமானவங்க யாருன்னு தயவுசெஞ்சு சிந்திச்சுப் பாருங்க.

தன்னுடைய சுயநலத்துக்காக மக்களோட தீர்ப்பை விலைக்கு வாங்கி, இந்த இடைத்தேர்தலை வரவச்சிருக்காங்க. புதுசா ஆட்சிக்கு வந்தவர் ஆட்சி செய்யறதைக் கத்துக்குவார்னு பார்த்தா, அடுத்த கட்சி எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கிட்டு இருக்காரு.

இதுதான் மாற்றமா? 'ஜனநாயகன்'னு ஒரு படத்துல நடிச்ச முதலமைச்சர், இப்போ ஜனநாயகத்துக்கு வில்லனா மாறியிருக்காரு. குதிரை பேரம் பேசி இந்த இடைத்தேர்தலை வரவச்சிருக்காரு.

பெரும்பான்மை ஆதரவு இல்லாததால, இந்த 'ரீல்' சி.எம் முதல்ல திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், முஸ்லிம் லீக் கட்சிகளுக்கு அமைச்சர் பதவி கொடுத்து ஆதரவு பெற்றார்.

ஆளுநர் ஆட்சி வரக்கூடாதுன்னு கம்யூனிஸ்டுகளும் ஆதரவு தந்தாங்க. ஆனா, யாரையுமே நம்பாம சோஃபா செட் அனுப்பி அதிமுக எம்.எல்.ஏ-க்களின் ஆதரவைப் பெற்றார். அது போதாதுன்னு அதிமுகவை உடைச்சு, பல எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கி ராஜினாமா செய்ய வச்சு, தன் கட்சியில இணைச்சுக்கிட்டு இந்த இடைத்தேர்தலை வரவச்சிருக்காரு.

தாராபுரத்தில் மு.க. ஸ்டாலின்
தாராபுரத்தில் மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டுல இதுவரைக்கும் இப்படி ஒரு இடைத்தேர்தல் வந்திருக்கா? இல்லை. ஆணவத்தின் உச்சத்தில் இருந்து தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையைக் கொச்சைப்படுத்துகிற முதலமைச்சர் விஜய்க்கு, தாராபுரம் மக்களாகிய நீங்க கொடுக்கப்போற அடி ஒரு மறக்க முடியாத மரண அடியாக இருக்கணும்.

இல்லைனா, தமிழ்நாடு முழுக்க இதையேதான் வேலையாச் செய்ய ஆரம்பிச்சுடுவாங்க, அதை நல்லா ஞாபகம் வச்சுக்கோங்க." எனப் பேசியிருக்கிறார்.

மருத்துவர், செவிலியர்கள் இல்லையென புகார்; நள்ளிரவில் ஏரல் மருத்துவமனையில் எம்.எல்.ஏ திடீர் ஆய்வு!

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும் முக்கிய வணிகப் பகுதியாக உள்ளது. இப்பகுதி பொதுமக்களுக்கு இரவு நேரத்திலும் அவசர மருத்துவ சேவை தேவைப்படும் நிலையில், நள்ளிரவு நேரங்களில் ம... மேலும் பார்க்க

LPG மானியம் தொடர வேண்டுமா? வட்டி விகிதம் மாறுகிறதா? - அக்டோபர் 2026-ன் முக்கிய நிதி மாற்றங்கள்!

நாளை அக்டோபர் 1-ம் தேதி. நாளை முதல் இந்தியாவில் கவனிக்க வேண்டிய... அமலாக உள்ள முக்கிய நிதி விஷயங்களை இங்கே காணலாம். இந்திய ரிசர்வ் வங்கி மீட்டிங்இந்தியாவின் தற்போதைய ரெப்போ வட்டி விகிதம் 5.25 சதவிகிதம... மேலும் பார்க்க

''ஜெம் வீரமணியால் என் மகள் தற்கொலை செய்துகொண்டாள்!"- 10 ஆண்டுகளுக்குப் பிறகு தாய் அதிர்ச்சி புகார்

ஜெம் கிரானைட் அதிபர் வீரமணி மீதான போக்சோ வழக்கு தமிழகத்தையே உலுக்கி வரும் நிலையில், 10 ஆண்டுகளுக்கு முன் தன் மகள் தற்கொலைக்கு அவரே காரணம் என ஐஸ் ஹவுஸ் பகுதியைச் சேர்ந்த தாய் ஒருவர் சென்னை காவல் ஆணையர்... மேலும் பார்க்க

டேட்டா திணிப்பு... டெலிகாம் நிறுவனங்களை முறைப்படுத்த வேண்டும் அரசு!

இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (TRAI) தரவுகளின்படி, இந்தியாவில் 128 கோடி பேர் மொபைல் போன் பயன்படுத்து கிறார்கள். சுமார் 69 கோடி பேர் ஸ்மார்ட் போன்களைப் பயன்படுத்துகிறார்கள். டிஜிட்டல் இ... மேலும் பார்க்க

தேர்தல் ஆணையம்: ``இதனால்தான் இந்த விவகாரம் சர்ச்சையாகியுள்ளது..!" - முன்னாள் ஆணையர் சொல்வதென்ன?

தேர்தல் ஆணையத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவோ அல்லது ஒருமித்த கருத்தோ இன்றி தனிச்சையாக எடுக்கப்படும் எந்தவொரு முடிவும் சட்ட விதிகளுக்கு எதிரானது என்று முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் ஓ.பி. ராவ... மேலும் பார்க்க

``அலைக்கழிப்பு... கொள்முதல் செய்யப்படாமல் கிடக்கும் 6 லட்சம் மூட்டை நெல்" - அன்புமணி ராமதாஸ்

காவிரி பாசன மாவட்டங்களில் 6 லட்சம் நெல்மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாமல் வீணாகிறது என அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியிருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``காவிரி பாசன மாவட்டங... மேலும் பார்க்க